நமக்கு முன் இருக்கும் காற்று மண்டலத்திலிருந்து தான் சகல சக்திளையும் நாம் பெறுகின்றோம்
பூமிக்குக் கிடைத்துள்ள இம்மனித ஜீவாத்மா முதல் நாம்
விரும்பி எடுத்திடும் பல உலோகங்கள் நாம் சுவைக்கும் உணவு வகைகள் நாம் பெறும் மணங்கள்
நாம் காணும் காட்சிகள் இன்னும் இயற்கையிலேயே கலந்துள்ள எல்லா நிலைகளுமே… நம்மைச் சுற்றியுள்ள 48 மண்டலங்களின்
உதவியுடன்… நம் பூமிக்கு இன்று நாம் வாழும் வாழ்க்கைக்குப்
பல உன்னத நிலைகளைப் பெற்று வருகின்றோம்.
ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் அதனுடைய தன்மைக்கு ஏற்ப சக்தி
வாய்ந்த அணுக்கதிர்களை சூரியன் ஈர்த்து எடுத்து அவ்வொளியின் மூலமாக நமக்குப்
பாய்ச்சுகின்றது.
அச்சூரியனிலிருந்து வரும் ஒளி ஒளி காற்று தண்ணீர் இப்படிப் பல நிலைகளை அச்சூரியன் ஈர்த்து நமக்கு அளிக்கின்றது.
1.இச்சுற்றிக் கொண்டே உள்ள இவ்வுலகத்தின் ஆரம்ப நாள் எது என்று கேட்பீர்
2.இவ்வுலகிற்கு ஆரம்ப நாளும் முடிவு நாளும்
எப்பொழுதுமே இல்லையப்பா.
ஒவ்வொரு காலமும் மாறி கலி மாறி கல்கி வருகிறது என்கின்றோம்
அல்லவா. அந்நாளில் பூமி சுற்றிக் கொண்டுள்ள
நிலையில் இப்பூமியைச் சுற்றிக் கொண்டுள்ள பல மண்டலங்களிலிருந்து ஈர்த்து எடுத்த
பொக்கிஷத்தை… சூரியனிலிருந்து பாயும் ஒளிக்கதிர்கள் எந்தெந்த
இடத்தில் அதிகமாக ஈர்த்து எடுத்ததோ… இப்பூமி அந்நிலை கொண்டு
தான் அந்தந்த இடங்களில் விளையும் தாதுப் பொருள்களின் நிலையும்… தாவர வர்க்கங்களின் நிலையும் மற்ற இனங்களின் தன்மைகளும் அதே நிலை கொண்டே… பூமி தனக்கு ஏற்ற ஆகாரத்தை ஈர்த்து எடுக்கும் நிலை கொண்டே நிகழ்பவை தாம்
எல்லாமே.
1.நம்மைச் சுற்றியுள்ள இக்காற்றினிலே தான்
கலந்துள்ளன நாம் இன்று உயிர் வாழ்வதற்கு வேண்டிய எல்லா நிலைகள் கொண்ட
பொக்கிஷங்களும்.
2.ஆனால் அவரவர்களுக்கு வேண்டிய நிலையைத் தான்
இக்காற்றிலிருந்து நாம் ஈர்த்து எடுத்து உயிர் வாழ்கின்றோம்.
சப்த அலைகளும் ஒலி அலைகளும் பல தாது பொருட்கள் விளையும்
அணுக்களும் எல்லாமே இக்காற்றில் சுற்றிக் கொண்டுள்ள நிலையில் நாம் அறிந்தோ
அறியாமலோ “நமக்கு வேண்டிய நிலையை மட்டும் நாம் ஈர்த்து
எடுத்து வாழ்கின்றோம்…”
இவ்வுலகைச் சுற்றியுள்ள இவ்வுலகுடன் ஒன்றி உள்ள ஜீவன் பெற்ற
எல்லாமே அதனதற்கு வேண்டிய நிலையுள்ள அக்காற்றில் கலந்துள்ள தன்மையை ஈர்த்து
எடுத்து ஜீவனுடன் உள்ள எல்லாமே வாழ்கின்றன.
நாம் இன்று விஞ்ஞானத்தில் கண்டுள்ள வானொலியின் மூலமாக்க்
கேட்கும் ஒலிப் பதிவுகளையும் இன்று நாம் காணும் ஒளிக் காட்சிகளையும் ஒரு இடத்திலிருந்து
மற்றொரு இடத்திற்குப் பேசும் தொலைபேசிகளையும் எந்த நிலை கொண்டு நம் விஞ்ஞானிகள்
கண்டுணர்ந்தார்கள்…?
இக்காற்றினிலே பல நிலை கொண்ட சப்த அலைகள் கலந்துள்ளன. முதல் பாடத்திலேயே சொல்லி உள்ளேன். நாம்
நுகரும் தன்மையும் அவ்வாசனை பெறுவதற்கும் “சப்த அலைகளைத்
தான் கொண்டுள்ளன” என்று.
இன்று இவ்விஞ்ஞானத்தில் ஒலியும் ஒளிக்காட்சியும் கண்டுணர்ந்து
எப்படி உணர்த்தினார்களோ அதைப்போல இக்காற்றினில் கலந்துள்ள பல வகை மணங்களையும்
கண்டுணர்ந்து மணம் பரப்பிடலாம்.
இக்காற்றினிலே சகல நிலைகளும் கலந்துள்ளன. அன்று நம் ரிஷிகளும் ஞானிகளும் எந்த நிலை கொண்டு இவ்வுலகிலும்
மற்ற மண்டலங்களிலும் நடக்கும் தன்மைகளை அமர்ந்த நிலை கொண்டே தியானம் பெற்றுப் பல
நிலைகளை அறிந்தனர்…?
தியானத்தில் அமர்ந்து அவர்கள் எண்ணத்தை ஒருநிலைப்படுத்தி
1.ஒன்றை எண்ணும் நிலையில் ஒரே நிலையில்
அவர்கள் எடுக்கும் சுவாசத்தைக் கொண்டு
2.எதை எண்ணித் தியானத்தில் உள்ளார்களோ அதை
எல்லாம்
3.இக்காற்றினில் கலந்துள்ள ஒளி அலைகளின்
தன்மையினால் அமர்ந்த நிலையிலேயே அறிந்திடும் பக்குவம் பெற்றார்கள்.
இக்காற்றினில் தான் ஒவ்வொருவர் பேசும் சப்த அலைகளும் நாம்
காணும் ஒளியுடன் கூடிய ஒலி அலைகளும் கலந்துள்ளன.
1.இன்றும் நேற்றும் நடந்தவை மட்டுமல்ல.
2.இப் பூமி தோன்றிய நாள் முதலே இப் பூமி
ஈர்த்து வெளியிட்ட சப்த அலைகள் முதற்கொண்டு
3.இப்பூமியில் தோன்றிய உயிரணுக்களின் சப்த
அலைகளும் இக்காற்றினிலே தான் கலந்துள்ளன.
4.எவையுமே அழியாத் தன்மையில் தான் கலந்துள்ளன.
இன்று ஒலிபரப்புவதை ஒலிபரப்பும் நிலையில் தான் அன்றே
அப்பொழுதே அச்சப்த அலைகள் நாம் எந்த நிலையத்தை வைத்துக் கேட்கின்றோமோ அந்த
நிலையில் நாம் கேட்டுணர விஞ்ஞானிகள் கண்டுணர்த்தியுள்ளார்கள்.
இன்றுள்ள விஞ்ஞானிகள் அவர்கள் ஈர்த்தெடுக்கும் தன்மை கொண்டு
விஞ்ஞானத்தை வளர்த்துக் கொண்டால் மெய் ஞானத்தில் சித்தர்கள் கண்டறிந்த இக்காற்றினில்
கலந்துள்ள சப்த அலைகளில் இருந்து ஆயிரம் காலங்களுக்கு முதலில் ஆயிரம் காலம் என்பது
கணக்கல்ல பல ஆண்டுகளுக்கு முதலிலேயே வெளியிட்ட சப்த அலைகளை எல்லாம் நாம் ஈர்த்து
எடுத்து வெளியிடலாம்.
இவ்வுலகைச் சுற்றி உள்ள காற்று மண்டலத்தில் கலந்துள்ள சப்த
அலைகள் எதுவுமே சிதறிப் போய்விடவில்லை.
நாம் ஆத்மாவிற்கு மட்டும் அழிவில்லை என்கின்றோம். இவ்வாத்மாவிலிருந்து இவ்வாத்மா எத்தனை கூடு பெற்று சப்த அலைகள்
எல்லாம் வெளியிட்டனவோ எல்லாமே இக்காற்றினில் தான் அழியாமல் சுற்றிக் கொண்டுள்ளன.
உலகமும் ஜீவாத்மாக்களும் அழிவில்லாதன. ஜீவாத்மாவும் இவ்வுலகமும் வெளிப்படுத்தும் சப்த அலைகளும் அழிவில்லாதவை
தாம்.
1.இவ்வுடல் எனும் கூடு மட்டும் மாறி மாறி
2.நாம் பெறும் நிலையில்லாக் கூடு அழியாச்
செல்வமான அவ்வாண்டவனின் சக்தி உள்ளவரை
3.அழியா நிலை கொண்டே வாழ்கின்றோம் நாம்
எல்லோருமே.