யாம் கொடுக்கும் தியானப் பயிற்சியின் முக்கியத்துவம்
குருநாதர்
காட்டிய அருள்
வழியில் நாம் செயல்பட்டால் நம்முடைய சிந்தனைகள் தெளிவாக இருக்கும்
1.அதன்
வழி நல்ல சுவாசத்தை நாம் கொண்டு வர வேண்டும்.
2.அதற்குத்தான்
இந்தப் பயிற்சியைக் கொடுக்கின்றேன்… சாதாரணமாக நினைத்து
விடாதீர்கள் (ஞானகுரு).
இதெல்லாம்
கற்றுக் கொடுக்க வேண்டும் என்றால் பல நிலைகளைப் பார்த்துத் தான் மற்றவர்கள் கொடுப்பார்கள்.
யாம் சாதாரணமாகக்
கொடுத்த பின்… ஆரம்பத்தில் ஒரு சிலர் நிறையத் தவறு செய்து விட்டார்கள்.
ஆனால் அதே சமயத்தில் அப்படிப்பட்ட ஒருத்தர்
இருவருக்காக நான் எல்லாவற்றையும் சொல்லாமலும் இருக்க முடியாது.
சில இடங்களில்
மிகவும் கட்டுப்பாடாக இருப்பார்கள் ஆனால் இங்கே வருபவர்கள் எல்லோருக்கும் அது
கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிக்கின்றேன்.
இவ்வளவு பெரிய
விஷயங்களை யாரும் பப்ளிக்காகச் சொல்ல மாட்டார்கள்…!
நான் சொல்வதை
எல்லாம் கேட்கின்றாயா…?
அல்லது என்ன செய்கின்றாய் ஏது செய்கின்றாய்…?
என்பதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்ட பின்பு அவரை
அனுமதித்து அதற்குபின் அங்கே வர முடியும்.
எல்லோருக்கும்
தாராளமாக கிடைக்க வேண்டும் என்று தான் நான் செய்கின்றேன்.
1.ஏதோ நூறு
பேர் வருகின்றார்கள் என்றால் அதிலே நான்கு பேராவது
தேர்ந்தெடுத்து
2.இது போன்று
அந்த நான்கு பேர் நான்கு நான்காகச்
சேர்த்து நூறு பேருக்கு மாற்ற முடியும் என்ற
3.அந்த
நம்பிக்கையில் தான் நான் இதை சொல்லிக் கொண்டு வருகிறேன்
ஏனென்றால் உங்கள்
உயிர் கடவுள் உங்கள் உடல் கோவில். கடவுள் வீற்றிருக்கக்கூடிய அந்த இடம்
பரிசுத்தமாக வேண்டும் என்று தான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றேன்.
ஆகையினால்
அதற்குண்டான பயிற்சியாக உங்களுக்குள் இதை கிடைக்கச் செய்வதற்கு தான் செய்கின்றேன் இல்லையென்றால்
எனக்கு வேண்டிய ஆட்களுக்கு… “நான் சொன்னபடி கேட்பவர்களுக்கு” மட்டும் செய்யலாம்.
தெரிந்தவர்களும்
இருக்கின்றார்கள்…
தெரியாதவர்களும் இருக்கின்றார்கள்
1.என்னவென்ற
விபரமே தெரியாது…
2.ஆனால்
நீங்கள் பெற வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்
3.நீங்கள்
எல்லோரும் பெற்றால் தான் எல்லோருடைய தீமைகளை அகற்ற முடியும்
வீட்டில்
ஒருத்தர் இதைச் சீராகக் கடைப்பிடித்தால் கூட நல்ல காற்றலை வரப்படும்
பொழுது வீட்டில் உள்ள மற்றவர்களும் நன்றாக இருப்பார்கள்.
எல்லோருக்கும்
இந்த சக்தி பெற வேண்டும் என்ற இந்த ஆசையில் தான் நான் செய்கின்றேன்…
1.இந்த
சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விடாதீர்கள்
2.சாமி
(ஞானகுரு) லேசாகச் சொல்கின்றார் என்று…!
இங்கு சாமியை
வந்து பார்க்க வேண்டும் என்றால் வாசலுக்கு முன்னாடி யார்…?
எந்த ஊர்…? என்று கேட்டு… பிறகு அங்கு
உட்காந்து “எப்பொழுது சந்திக்கலாம்…?”
என்று மணியைக் கேட்டு… ஆர்வத்தை எல்லாம் தூண்டி இங்கே கொஞ்ச
நேரம் உட்காருங்கள் என்று சொந்னோம் என்றால்… இத்தனை தடைகள் வரும் பொழுது “ஏதோ பெரிதாக என்று நினைக்கின்றார்கள்…”
ஆனால் நான் அப்படி எதுவுமே
செய்யவில்லை. தாராளமாக இங்கே வரலாம். அதே
போல் இங்கே வெளிப்படுத்தியுள்ள புத்தகங்கள் நிறைய இருக்கின்றது என்று
வாங்குவார்கள்.
1.கடைசியில் கிழித்துப் போட்டுப்
போய்விடுவார்கள்
2.படிக்கக்கூட
மாட்டார்கள்… அலட்சியமாகப் போட்டு
விடுவார்கள்
3.அதனால்
தான் இப்பொழுது ஓசியாக புத்தகம் கூட ஜாஸ்தி கொடுப்பதில்லை
4.கொடுத்தோம்
என்றால் வாங்கி படிக்க மாட்டார்கள்… கீழே போட்டு விடுவார்கள்.
இதை எல்லாம் ஏன் சொல்கிறோம்
என்றால்… உங்களை மனிதனாகப் பிறக்கச் செய்த ஆறாவது அறிவு கார்த்திகேயா…! அந்த அறிவைத் தெளிவாக்க வேண்டும்.
1.உயிர்
அறிவாக்கிய அந்த அறிவைத் தெளிவாக்கி
உயிரோடு சேர்த்து ஒளி ஆக்க வேண்டும்… இதுதான் இப்பொழுது நமது குருநாதர் காட்டிய
அருள் வழி.
2.அதை
நாம் செய்தோம் என்றால் நமது வாழ்க்கையிலே இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற
முழுமை அடையலாம்.
ஆனால் இந்த
உடலுக்காக இச்சைப்பட்டோம் என்றால் அடுத்த உடல் நிச்சயம் உண்டு. அதிலிருந்து தப்ப
முடியாது. நாம் எந்த குணமோ அதற்குத்தக்க இந்த உயிர் ரூபத்தை மாற்றிக் கொண்டே
இருக்கும்.
ஆரம்பத்திலிருந்து
பார்க்கின்றோம் அல்லவா…? எத்தனையோ இம்சைப் பட்டு இந்த
இம்சையிலிருந்து தப்பிக் கொள்ள முடியும் என்று இந்த உடல் பெற்ற பிற்பாடு மீண்டும்
அதே உணர்வை எடுத்தோம் என்றால் இது சாகாக்கலையாக போகின்றது.
இப்பொழுது நம்
குருநாதரைப் பார்த்தால் வேகாநிலை…! தீயில் குதித்தால் உயிர்
வேகாது. உயிரைப் போல் ஒளியாகிக் விட்டால் இந்த அகண்ட
அண்டத்தில் எதிலும் வேகாது அப்பொழுது ஒளியாக மாற்றிக் கொண்டே இருக்கும். “அந்தச் சக்தியை நாம் பெற
வேண்டும்…”
இதையெல்லாம்
நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்தித் தயாராகிக் கொள்ள வேண்டும். காற்று மண்டலம்
விஷத்தன்மையாக இருக்கின்றது.
இப்பொழுதே சில
பேருடைய நிலைகள் எங்கெங்கோ இழுத்துக் கொண்டு செல்கின்றது. இனி வரும் காலம் ரொம்ப
மோசமான காலமாக இருக்கின்றது.
1.அதற்குள்
நீங்கள் தயாராகி நல்ல சக்திகளைப் பெருக்கி உங்களையும் காத்து
2.உங்கள்
ஊரையும் வீட்டையும் இந்த உலகையும் காத்துக் கொள்ளக்கூடிய நிலைக்கு நீங்கள் தயாராக வேண்டும்.
ஒருத்தர்
மட்டும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் எவ்வளவு பெரிய சக்தி இருந்தாலும் ஒரு
அரிசியைப் போட்டு சாப்பாடு செய்து எல்லாத்தையும் சாப்பிடு என்று சொன்னால் முடியுமா…?
1.நாமெல்லாம்
அந்த அரிசியாக மாற வேண்டும்.
2.ஒன்று
சேர்த்து விளைந்து வந்தால் எல்லாருடைய பசியும் தீரும்..,
அது தான் முக்கியம்.
ஒன்று என்பது
எதுவுமே இருந்து… என்றுமே ஒன்றும் செய்வதில்லை.
இந்த உயிர்
ஒன்றுதான் அப்படி இருந்தாலும் மூன்று நிலைகளில் (வெப்பம் காந்தம் விஷம்)
வேலை செய்கின்றது. ஆனால் இந்த உடலுக்கு எத்தனை வகையான உணர்வுகள் வந்து உடலை
உருவாக்குகின்றது…?
ஆனால் நல்ல உணர்வுகள் குறையக் குறைய இந்த உடலைச் சிறுக்கின்றது, இப்பொழுது
நாம் வேதனையை வெறுப்பை நுகரும் பொழுது இந்த அழகான உடலும் சிறுத்துப் போகின்றது.
அப்போது இந்த
உடலைச் சிறுக்கச் செய்த உணர்வுகள் என்ன செய்கின்றது…?
இந்த உயிர் அதற்குத் தகுந்த உடலைத் தான் உருவாக்குகின்றது.
இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
1.நமக்கு
இது ஒரு நல்ல சந்தர்ப்பம்...
2.குருநாதர் காட்டிய வழியில்
நாம் இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ளக்கூடிய சக்தியும்
3.பிறவியில்லா
நிலையைப் பெறக்கூடிய சந்தர்ப்பமாக நாம் இப்பொழுது
உட்கார்ந்து கேட்டுக் கொண்டு இருக்கின்றோம்.