ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 29, 2024

“விஞ்ஞான முறைப்படி” யாம் கொடுக்கும் தியானப் பயிற்சி

“விஞ்ஞான முறைப்படி” யாம் கொடுக்கும் தியானப் பயிற்சி


நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தையும் சுத்தப்படுத்துவதற்குத் தான் இந்தத் தியானமே.
 
உங்கள் உடலில் உள்ள உறுப்புகளுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறச் செய்ய வேண்டும்.
1.இதை நீங்கள் வளர்த்துக் கொண்டீர்கள் என்றால் கூடுமானவரையிலும் உடலில் வரக்கூடிய சங்கடங்களை உங்களால் நிவர்த்தி செய்ய முடியும்
2.அந்த ஞானத்தை உங்களால் வளர்த்துக் கொள்ள முடியும்.
 
யாம் (ஞானகுரு) சொல்வதைப் போன்று நீங்கள் ஆசைப்பட வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் ரத்தங்களில் கலக்க வேண்டும்
2.ங்கள் உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்.
3.எங்கள் சிறுகுடல் பெருங்குடல் உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற
4.அந்த ஆசையோடு ஏங்கி நீங்கள் எடுக்க வேண்டும்.
5.கணையங்களை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற எண்ணத்திற்கு வர வேண்டும்.
 
அடுத்து என்ன செய்ய வேண்டும்…?
 
கல்லீரல் மண்ணீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற எண்ணத்திற்கு கொண்டு வர வேண்டும்.
 
அதற்கடுத்து என்ன செய்ய வேண்டும்…?
 
ம் ரத்தத்தில் இருக்கக்கூடிய நீரையும் விஷத்தன்மையையும் பிரித்து எடுக்கும் கிட்னிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ஏற்றிக் கொடுக்க வேண்டும்.
 
பாலைக் காய்ச்சி எடுத்துத் தான் நாம் வெண்ணெயைப் பிரித்து எடுப்போம். ஆனால் இப்போது மிஷினை வைத்து என்ன செய்கின்றார்கள்…? மிஷினைச் சுற்றவிட்டு இந்த வெண்ணெயை பிரித்து எடுத்து வைத்து விடுகின்றார்கள்.
 
இது மாதிரி நம் உடலுக்குள் அறியாது புகும் விஷத்தன்மையை நீக்குவதற்கு
1.மிஷின் மூலம் வெண்ணையைப் பிரிக்கும் சக்தியைக் கொண்டு வருகிற மாதிரி
2.நாம் அந்த சக்தியை நம் இரத்தத்தில் கலக்கச் செய்து நமது சிறுகுடல் பெருங்குடலிற்கு உருவாக்கிய அந்த அணுக்களுக்கு இதைப் பெறச் செய்து
3.எல்லாம் வரிசையில் வரப்படும் போது சிறுநீரகத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் வலுவாகிவிட்டால் விஷத்தைச் சுத்தமாக பிரிக்கும்.
4.அப்படிப் பிரித்தால் (சிறுநீராக வடித்து விட்டு) நல்ல ரத்தம் இருதயத்திற்கு வருகின்றது
5.இருதயம் நன்றாக சுத்திகரிக்கப்பட்ட அந்த ரத்தத்தைத் தான் நம் உடல் முழுவதற்கும் பரப்புகின்றது… நமது சிறுமூளைக்குப் போவது முதற்கொண்டு.
 
உதாரணமாக வேதனையோ விஷமோ ஏதாவது வந்தால்மேலே சென்றவுடன் தலையில் நீர் கோர்த்து விட்டது தலை கிண்” என்று இருக்கின்றது விஷமான நிலையைப் பார்த்தால் நல்ல சிந்தனை வருவதில்லை.
 
அதாவது அசுத்த இரத்தம் சிரசு பாகம் போய்விட்டது என்றால் மூளை பாகங்கள் செயலிழந்து விடுகின்றது. நாம் தவறு செய்யவில்லை. ஆனால் இப்படி எல்லாம் போய்விடுகின்றது.
 
ஆகவே…
1.இருதயத்திற்கு நல்ல ரத்தத்தைக் கொண்டுவர வேண்டும்… அது உங்களால் முடியும்.
2.யாம் சொன்னபடி அந்தந்த உறுப்புகளைத் தைரியப்படுத்த வேண்டும்.
3.தற்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை சேர்த்து பழக வேண்டும்.
 
இது எல்லாம் உங்களுக்கு கஷ்டமான காரியம் இல்லை.
 
திட்டுபவர்களைத் திருப்பி எண்ணுகின்றீர்கள். அவனுடைய உணர்வு ள்ளே வராமல் தடுப்பதற்குத் துருவ நட்சத்திரத்தை எண்ணினால் போதும். இது வலுவாகி உங்களைத் தெளிவாக்கிக் கொண்டு வரும்.
 
அதற்குத்தான் இப்பொழுது கண்ணின் கருமணிகள் நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள்எலும்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் எலும்புக்குள் உள்ள ஊன்… இது எல்லாவற்றிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ரெக்கார்ட் செய்வது.
 
தசை மண்டலங்களுக்குள்ளும் அதைப் படி படியாக்க் கொண்டு வந்து தோல் மண்டலத்தில் உள்ள அணுக்களிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை வலுவேற்றிக் கொண்டால்
1.இந்தக் காற்றில் தீமைகள் இருந்தாலும் கூட நம் பக்கத்தில் வராது கொஞ்சம் தள்ளிவிட்டு கொண்டே இருக்கும்.
2.நம் சிந்தனைகள் நன்றாக இருக்கும்.