நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு நாம் உருவாக்க வேண்டிய “அருள் வட்டம்”
அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆன அதிலிருந்து வரக்கூடிய உணர்வுகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பூமிக்குள் பரவச்
செய்கின்றது.
அகஸ்தியன் தன்னுடைய வாழ்நாளில் எப்படிப்
பல தீமைகளை நீக்கினானோ அந்த இயக்க அணுவை சூரியன் கவர்ந்து பூமிக்குள் பரவச் செய்து வைத்திருக்கின்றது.
1.குருநாதர் எனக்கு (ஞானகுரு) அந்தப் பவரைக் கொடுத்து அதை
எடுத்துக் காண்பித்தார்…
2.அந்த வித்தினை ஊன்றினார்… அத்தகைய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தினார்... அதை நான்
எடுத்து வளர்த்துக் கொண்டேன்.
அதே போன்ற சந்தர்ப்பத்தைத்
தான் உங்களுக்கும் ஏற்படுத்துகின்றோம். நீங்கள் நுகர்ந்தறியப்படும் பொழுது
உங்களுடைய ஒவ்வொரு அணுக்களுக்கும் கிடைக்கும்படி செய்கின்றேன்.
1.ஆனால் உங்களுக்கு அதைப் பெற வேண்டும் என்ற ஆசை வேண்டும்.
2.தீமைகளை நீக்கக்கூடிய சக்தி நாங்கள்
பெற வேண்டும்
3.அந்த அருளைப் பெற
வேண்டும்… இருளை நீக்கும் அருள் ஞானம்
பெற வேண்டும் என்ற இந்த ஆசையுடன் இருந்தால் “அது நல்ல பலனைத் தரும்…”
ஆசையை வேறு எங்கேயோ வைத்துக் கொண்டு உடலுக்கும்
தலைவலிக்கும் இதை எண்ணி எடுக்க வேண்டாம்… அப்படி எண்ணி எடுக்கவே கூடாது.
நாம் அந்த அருளைப் பெற
வேண்டும் என் உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
தியானத்தின் மூலம்
1.உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு
உறுப்புகளுக்கும் அதை இயக்கக்கூடிய அணுக்களுக்கும்
2.குறி வைத்துத் துருவ நட்சத்திரத்தின் உணர்ச்சிகளைத் தூண்டும்படி செய்கின்றேன்.
நீங்கள் அதைப் பெற
வேண்டும் என்று ஆசைப்பட்டுக் காற்றில் இருப்பதை இழுத்துச் சுவாசித்து எல்லா
அணுக்களுக்கும் பெறச் செய்ய வேண்டும்.
இது ஒரு பழக்கத்திற்கு வந்தால் தன்னாலே அந்த
அணுக்கள் அந்தச் சக்தியை ஈர்க்கத் தொடங்கும். அதற்குத்
தான் இந்தப் பயிற்சியைக் கொடுப்பது.
காற்று மண்டலம் இன்று
மிகவும் விஷத்தன்மையாகப் போய்விட்டது. பிறிதொருவரை பார்த்து அவர் தவறு செய்கிறார் என்று நுகர்ந்தாலும் அடுத்தடுத்து “அவர் தவறு செய்பவர்”
என்று வரக்கூடிய எண்ணத்தை அந்த இடத்திலேயே மாற்றிட
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற
வேண்டும் அதை நேராகக் குறி வைத்து
2.உள்ளே பதிவாக்கும்
இடத்திலேயே கொண்டு போய் மாற்றி விட வேண்டும்.
3.அப்போது
இணைக்கப்படும் பொழுது அந்தச் சிறு புள்ளிகளில் இந்த
வட்டங்கள் மாறும்.
4.ஒவ்வொன்றாக கூடிக்
கூடி அந்தக் கேட்டதை நல்லதாக மாற்றிக் கொண்டே வரும்.
அந்த நிலை உங்களுக்குள் ஏற்படுத்துவதற்குத் தான் இதைச் செய்வது.
இப்பொழுது பேசிக் கொண்டே இருக்கப்படும் பொழுது உங்களுக்குள்
பதிவாகி… “ரெக்கார்ட்” ஆகிக்கொண்டே இருக்க்கும்… “பெற
வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால்…!”
அந்தப் பதிவு மீண்டும் நினைவுக்கு வரும்பொழுது அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை எளிதில் நீங்கள் பெறக்கூடிய தகுதி பெறுகின்றீர்கள்.
ஒரு வேதனைப்படுபவரை எண்ணும் பொழுது அது நமக்குள்ளும் உருவாகின்றது. திருப்பி எண்ணும் போது அதே வேதனை மீண்டும்
வருகின்றது.
இது எல்லாமே சந்தர்ப்பம் தான்…!
ஆனால் இப்பொழுது வேதனைகளை எல்லாம் நீக்கிடும் ஒரு நல்ல சந்தர்ப்பத்தை தியானத்தின்
மூலம் உருவாக்கிக் கொடுக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின்
சக்தியை ஈர்க்கும் ஆற்றலும் உங்கள் உடலில் இருக்கக்கூடிய
அணுக்கள் அதைப் பெறச் செய்வதற்கும் இதை உபதேசிக்கின்றேன்.
எம்மைக் கூர்ந்து கவனித்து பதிவாக்கிய பிற்பாடு
1.மீண்டும் எண்ணினால் உங்கள் கண்கள் ஆண்டென்னாவாக மாறுகின்றது.
2.எந்தத் துருவ
நட்சத்திரத்தினை உங்களுக்குள் பதிவாக்கினேனோ
3.காற்றிலிருந்து அதைப் பிரித்துச் சுவாசித்து
உங்களுக்குள் ஒரு நல்ல சிந்தனை உள்ளதாக மாற்றுகின்றது.
நீங்கள் “எவ்வளவு கவலையாக
இருந்தாலும் கூட” அதை மாற்றிவிடும்…
செய்து பாருங்கள்.