குருநாதர் காட்டிய வழியில் நாம் தியானிப்போம்
நல்வழி காட்டும் குருவை
அடைவோம்… குரு காட்டும் வழியை மதிப்போம்… குரு காட்டிய நெறியைக் கடைப்பிடிப்போம்…!
1.இருளை அகற்றி
அருள் ஒளி பெறும்… அருளானந்தத்தைப் பெறச் செய்யும் வழிகளை உபதேசிக்கின்றார்
நமது குரு.
2.அதனை
நாம் மதித்து அவர் வழியில் அதை நுகர்ந்து
3.அந்த அருளைப் பெற நாம் வேண்டும் பொழுது
4.நமது உயிரே அந்த
அருள் வழியில் நம்மை இயக்குகின்றது.
ஆகவே குருவின்
துணையால் அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுவோம்.
அகஸ்தியன் எப்படித் தன்
வாழ்க்கையில் அணுவின் ஆற்றலை அறிந்து அகத்தின் தன்மை உணர்ந்து இருளை அகற்றி அருள்
ஒளி பெறும் அருள் சக்தி பெற்றானோ அந்த அகஸ்திய மாமகரிஷிகளின்
அருள் சக்தியை நாங்கள் அனைவரும் பெற
அருள்வாய் ஈஸ்வரா.
குருவின் துணையால்… அகஸ்தியன் துருவனாகி அகண்ட அண்டத்தின்
அறிவின் ஒளியைப் பெற்ற “துருவ
மகரிஷிகளின் அருள் சக்தி” நாங்கள் ஆனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.
குருவின் துணையால் துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
உணர்வின் தன்மை ஒளியாக்கி அகஸ்தியன் துருவனாகி
துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி
1.உலகில் வரும்
நஞ்சினை ஒளியாக மாற்றி என்றும் நிலையாக நின்று ஏகாந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கும்
2.வசிஷ்டரும்
அருந்ததி போன்று வாழ்ந்து நளாயினி போன்று கணவனும் மனைவியும்
ஒருவரை ஒருவர் மதித்து
3.சாவித்திரி
போன்று இரு உயிரும் ஒன்றி இரு உணர்வும்
ஒன்றி ஒளியின் உணர்வாக
4.துருவ
நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அருள் ஒளியை
நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
ஆறாவது அறிவை ஏழாவது நிலைகள்
கொண்டு துருவ
நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்
1.முப்பத்து முக்கோடி
தேவாதி தேவர்கள் எண்ணிலடங்காதவர்கள் அருள் ஒளி பெற்று
- சப்தரிஷி மண்டலம்
2.சிருஷ்டிக்கும்
உணர்வு கொண்ட மண்டலமாக இணைந்து அருள் ஒளியை உருவாக்கிக் கொண்டு
3.துருவ
நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து
கொண்டிருக்கும் அருள் ஒளியைப் பெறுவோம்.
இந்த வாழ்க்கையில் வரும் இருளை
அகற்றுவோம்… அருள் ஞானத்தைப் பெறுவோம்…
என்று நாம் ஏங்கித் தியானிப்போம்.
ஓம் ஈஸ்வரா குருதேவா…! ஓம் என்று எனக்குள் இயங்கி நான் எண்ணியதை உருவாக்கி ஓ…
என்று ஜீவ அணுவாக மாற்றிக் கொண்டிருக்கும் உயிரை ஈசனாக மதிப்போம்… “அவனிடமே வேண்டுவோம்….!”
அகஸ்திய மாமகரிஷியின்
அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் இரத்த நாளங்களிலே அது கலக்க வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடலில்
உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள்
அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானிப்போம்.
என் இசையில் நீ இசைப்பாய் என்றால்
அருள் ஒளியின் உணர்வை நாம் எண்ணி அந்த உணர்வின் தன்மை அருள்
ஞானி பெற்ற உணர்வின் இயக்கமாக நம்முடைய எண்ணங்களும் நம் உணர்வுகளும்
நம் செயல்களும் நம் பார்வையும் அமைந்திட அருள்வாய்
ஈஸ்வரா.
அகஸ்திய மாமகரிஷிகளின்
அருள் சக்தி எங்கள் இரத்த நாளங்களில்
கலந்து உடல் முழுவதும் படரச் செய்து உடலில் உள்ள ஜீவான்மாக்கள் அனைத்தும் அருள் ஒளி பெறும் அருள் சக்தி பெற எங்கித் தியானிப்போம்.
1.நினைவினைப்
புருவ மத்தியில் கொண்டு வந்து அந்த அகஸ்திய மாமகரிஷியின்
அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.அதன் வழி (உயிர்
வழி) இரத்த நாளங்களில் கலக்கச் செய்து
3.நினைவு அனைத்தும்
ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிப்போம்.
ஜீவான்மா என்பது ஒரு எறும்பை
நசுக்கி இருந்தாலும் அல்லது மற்றவர்கள் மேல் பாசமாக இருந்து ஆன்மா நோய்வாய்ப்பட்டு
வெளி வந்தால் அந்த நோயின் உணர்வை நாம் நுகர்ந்து இருந்தால்… அந்த ஆன்மா
நமக்குள் வந்திருந்தால்… அது ஜீவான்மாவாகின்றது.
நாம் நுகரும் உணர்வுகள் எல்லாம் ஜீவணுக்களாக
மாறுகின்றது நம் உடலுக்குள் பற்றுடன் எண்ணிய நோயின் தன்மை
கொண்டு அந்த ஆன்மா வந்தாலும்
1.அருள் மகரிஷிகளின்
அருள் சக்தி அந்த ஜீவான்மாவும் ஜீவ அணுக்களும் பெற்று
2.பகைமையற்ற நிலையும் நோயற்ற நிலையும் பெறக்கூடிய அந்தத் தகுதி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
3.உடலில் உள்ள ஜீவான்மாக்களும் பிறவி இல்லா நிலை பெற வேண்டும்
4.என்னுடன்
உறுதுணையாக இருந்து அருள் ஞானம் பெறும் தகுதி பெற வேண்டும்
என்ற எண்ணத்தில் ஏங்கித் தியானியுங்கள்.
உங்கள் உடலில் உள்ள அணுக்கள்
அனைத்தும் அருள் ஒளி பெரும் சக்தியாக இப்பொழுது மாறுகின்றது… ஒளியாக மாற்ற ஏங்கித் தியானியுங்கள்.
1.திரும்பத்
திரும்ப அதே எண்ணத்தில் அதே உணர்வை உயிருடன் நினைவு கொண்டு
2.நாம் எண்ணும் அந்த
உணர்வின் இசையாக அருள் உணர்வுகளை உடலுக்குள் பரப்பி
3.நமக்குள்
இருக்கும் நல்ல அணுக்களை மகிழச் செய்யும் உணர்வாக விளையச் செய்வோம்.
அழியா ஒளிச் சரீரம்
பெறுவோம் பிறவி இல்லாத நிலை அடைவோம் நமது குருநாதர் காட்டிய
வழியில் நாம் அனைவரும் செயல்படுத்துவோம்.