எதையுமே ஒளியாக மாற்றத் தெரிந்து கொண்ட “அகஸ்தியனின் உணர்வுகளை” நாம் பெறுதல் வேண்டும்
துவாரகா யுகத்தில் “நாராயணன்” வாசு தேவனுக்கும் தேவகிக்கும் சிறைச்சாலைக்குள் கண்ணணாகப்
(கண்கள்) பிறந்தான் என்று சாஸ்திரங்கள் காட்டுகின்றது.
கண்கள் தோன்றிய பின் கூர்மையாக
ஒவ்வொன்றையும் பார்த்து அந்த உடல் எப்படியோ இந்த உணர்வுகளை நுகர்ந்து தனக்குள் விளைய வைத்து அதன்
அவதாரமாக அதன் உடலுக்குள் புகுந்து பரிணாம வளர்ச்சியில்
வளர்ச்சியாகி இன்று எப்படி நாம் மனிதனாக வளர்ந்தோம்…?
என்று காட்டுகின்றார்கள்.
பல கலவைகளைச் சேர்த்து
ஒன்றை ஒன்று வென்றிடும் உணர்வுகள் பெற்று உணர்வுகள் இரண்டறக்
கலந்து உடல்கள் ரூபங்கள் எப்படி ஆனது…? என்ற நிலையும்
சாஸ்திரங்கள் நமக்குத் தெளிவாகக்
காட்டி உள்ளது. இராமாயணத்தில் இது கூறப்பட்டுள்ளது.
1.பலராமன் என்று
எண்ணும் பொழுது கண்ணனின் (கண்கள்) சகோதரன்.
2.பலருடைய
உணர்வுகளை நாம் நுகர்ந்து பல எண்ணங்கள் வருகின்றது.
ஆகவே
1.கண்ணின்
நிலைகள் கொண்டு நமக்குள் எண்ணத்தால் உருவாக்கப்படும் பொழுது பல உணர்வுகளும் பல
செயல்களும்
2.தனக்குள்
அவ்வப்போது உணர்த்தும் நிலையும் தீமை நன்மை என்ற உணர்வுகளை உணர்வதும்
3.நன்மை என்ற
நிலை வரப்படும் பொழுது அந்த நன்மையைக் காப்பதும்
4.அதே சமயத்தில் தீமை என்றால் அதை எப்படி நீக்குகின்றோம்…? என்ற நிலையையும்
5.அதை பலராம்… என்று எட்டாவது நிலை… அஷ்டதிக்கு என்ற நிலையில் காட்டுகின்றார்கள்.
அதே சமயத்தில் தீமை என்று
உணர்ந்த பின் “அதை வென்றவன்… அதை
எல்லாம் கண்டுணர்ந்தவன்… நஞ்சை வென்றவன்… “துருவ மகரிஷி…!” அவன் உடலில்
இருந்து வெளிப்பட்ட உணர்வினை நாம் நுகர்ந்தால் ஓன்பதாவது
நிலை “நரசிம்மா…!”
1.அந்தத் துருவ மகரிஷியின் உணர்வை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது
2.நமக்குத் தீங்கு விளைவிக்கும் பகைமையான உணர்வினை உள்புகாது
3.இங்கே மடி
மீது வைத்து அதை நீக்கிடும் சக்தி வருகின்றது.
வேம்பின் பக்கம் நல்ல ரோஜாப் பூவின் நறுமணம்
சென்றால் விடுவதில்லை ரோஜாச் செடியின் அருகிலே வேம்பின் மணம் சென்றால் விடுவதில்லை.
அதை போன்று தான் ஒரு மனிதன் வேதனையுடன் இருக்கும்
பொழுது நல்லதைச் சொன்னால் கேட்க மாட்டான். அந்த வேதனை ஒன்றே தான் அங்கே வரும்.
ஆக… வேதனை ஆட்கொண்டால் நல்ல எண்ணங்கள் கொண்டு இயக்க முடியாது போகின்றது ஆனால்
1.நஞ்சை வென்றிடும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து அந்த உணர்வின் வலிமை நமக்குள் வரப்படும் பொழுது
2.நஞ்சு கொண்ட உணர்வுகள்
நம் ஆன்மா பக்கம் வந்தபின் அதை நீக்குகின்றது.
நஞ்சினை நீக்கிய அருளின்
ஞானிகள் உணர்வை நாம் நுகர்ந்தால் அந்த வலுவின் துணை கொண்டு தீமைகள் புகாது நம்மைக் காத்துக் கொள்ளலாம்.
பல கோடிச் சரீரங்களில்
தீமைகளை வென்று வென்று மனிதனான பின் அனைத்தையும் அறிந்திடும்
நிலை வருகின்றது கார்த்திகேயா… சேனாதிபதி…!
தீமை உட்புகாது தடுத்துக்
கொள்ளும் ஆற்றல் பெற்றது தான்
நமது ஆறாவது அறிவு. இதன் துணை கொண்டு நமக்குள்
அதை வளர்ந்திடும் நிலை கொண்டால்
பிரம்மாவைச் சிறைப் பிடித்தான்.
ஆகவே ஒவ்வொரு
தீமைகளை வென்று ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக
இருக்கும் அகஸ்தியன் உணர்வினை நாம் பெறுதல் வேண்டும்.
1.அணுவின்
ஆற்றலை அறிந்தவன்
2.துருவத்தின்
ஆற்றலைப் பெருக்கியவன்
3.ஒளியின்
உணர்வாகப் பெற்றவன்
4.கணவன் மனைவி
இரு உயிரும் ஒன்றாக இணைத்துக் கொண்டவன்
5.எதையுமே
ஒளியாக உருவாக்கத் தெரிந்து கொண்டவன் தான் அந்த
அகஸ்தியன்.
அவனின்று
வெளிப்பட்ட உணர்வை நாம் நுகர்ந்து நமக்குள் உருவாக்கினால் தீமை
புகாது நம் உடலுக்குள் இருக்கும் அணுக்களை ஒளியாக மாற்றும்
சக்தி பெற்றது.
இதை எவர் ஒருவர் செய்கின்றனரோ அவரே இந்த
மனித வாழ்க்கையில் இருந்து பிறவி இல்லா நிலை அடைகின்றனர்…!