பல ரிஷிகளும் ஞானிகளும் இன்றும் இந்தப் பூமிக்குள் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்
ஒரு இயேசுநாதரும் வால்மீகி
முனிவரும் திருவள்ளுவரும் திருஞானசம்பந்தரும் நயம்பட உரைத்த ஔவையாரும் இப்படி
மக்களுக்கு உபதேசிக்க நல்வழி புகட்ட ஒவ்வொருவர் தோன்றியதாகத் தான் நாம்
அறிகின்றோம்.
அவர்கள் பிறவி எடுத்து பல
உன்னத நூல்களை நமக்கு உணர்த்திவிட்டுத் தன் நிலையில் ஜெபம் பெற்று… மறு உடலை எடுக்காமல் சூட்சும உலகில் சுழன்று கொண்டே உள்ளனர் என்பது
மட்டும் உண்மையல்ல.
1.அவர்கள்
எடுத்த பிறவிப் பயனால் இன்றும் பல உடல்களை ஏற்று
2.மக்களுக்காகப் பல நல்ல உபதேசங்களையும் பல அருளாசிகளையும் வழங்குகிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து
3.நமக்கு முன் தோன்றிய பல ரிஷிகளும் ஞானிகளும் எப்படி நமக்கு நல் அருளை அளிக்கின்றார்கள் என்பதனை உணர்ந்து
4.நாமும் அந்த ஜெப அருள் பெற்று நம் ஜென்மத்தில் நாம் எடுக்கும் சுவாசத்திற்கும் நம் எண்ணத்திற்கும் உகந்தபடி நல் எண்ணம் கொண்டு
5.அச்சூட்சும உலகில் கலந்துள்ள பெரியோர்கள் நம்முள் வந்து நமக்குப் பல வழிகளைப் புகட்டும் பாக்கியத்தை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
நம் உயிராத்மாவிற்கு
நாம் சேர்க்கும் நல் சொத்தாக அதை நாம் ஏற்று நாமும் இவ்வுடலை விட்டுப் பிரிந்து
சூட்சும உலகிற்குச் செல்ல நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்வது இப்பெரியோர்களின்
அருளைப் பெற்று வாழ்வதுவே.
பிறரின் எண்ணமும் பிறரின்
தூண்டுதலும் நம்மை வந்து அண்டாமல் நம் அறிவில் நம் உணர்வில் நாம் பல உண்மைகளைப்
பெற்று அறிந்திட வேண்டுவது தான் நம்மை நாமே எண்ணி வாழ்வதுதான் என்ற நிலை கொண்ட
நிலைக்கு ஒன்றுடன் ஒன்று கலந்துள்ள இவ்வுலகினிலே ஒன்றி
1/நாம் நல்லோரின் ஆசி பெறுவது என்பது
2.சூட்சும நிலை பெற்ற பெரியோர்களின் ஆசி பெறுவதே.
பால் புகட்டத் தாய் பாடம்
புகட்ட குரு வாழ்ந்திட மனைவி வளர்த்திட மக்கள் என்று… ஒன்றுடன்
ஒன்று நம்மை நாம் பிணைத்து வாழும் நிலையில்… நான் என்ற தனி
நிலையில் இல்லாத நாம்… “அப்பெரியோர்களின்
அருளாசி பெற்று வாழ்வதே” நம் உயிரணுவிற்கு நாம் பெறும்
பெரும் சொத்து தான்.
1.நம்மை இயக்கிச்
செல்வதுவே அப்பெரியோர்களின் ஆசி தான் என்று உணர்ந்து
2.நான் என்று நிலைப்படுத்தி வாழ்ந்திடாமல் நல் வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்.