ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 10, 2024

இரண்யன் “மூன்று லோகத்தையும் கைப்பற்றுகின்றான்” என்றால் அதனின் பொருள் என்ன…?

இரண்யன் “மூன்று லோகத்தையும் கைப்பற்றுகின்றான்” என்றால் அதனின் பொருள் என்ன…?

 
உதாரணமாக… ஒருவரைப் பழி தீர்க்கும் உணர்வுகளையோ அல்லது அவனைக் கொன்றிடும் நிலையோ துன்பப்படுத்தும் உணர்வோ நமக்குள் அதிகமாகி விட்டால் நம் உடலுக்குள் இருக்கும் நல்ல அணுக்களை அது துன்புறுத்தி அதை மடியச் செய்துவிடும்.
 
பின் அதனால் உருவான உறுப்புகள் அனைத்தையும் சுருங்கச் செய்வதும் உடலின் தன்மை நலியச் செய்வதும் எண்ணத்தின் செயலும் அசுர உணர்வு கொண்டு சாபங்கள் இடுவதும் “உன் குடும்பம் தொலைந்தது… உன் குடும்பத்தை அழித்தே தீருவேன்…!” என்ற சாப அலைகள் இங்கே வருகின்றது.
 
இப்படி விளைந்த இந்த உணர்வுகள் கொண்டு உடலை விட்டு அகன்றால் அடுத்து புலியாகத் தான் பிறக்க நேரும்.
 
தன் பசியைத் தீர்க்கும் உணர்வு கொண்ட ஒரு புலி மற்றதை அடித்து இக்கமற்றுக் கொன்று புசித்துத் துன்புறுத்தும் நிலைகள் கொண்டு அச்சுறுத்தும் உணர்வு கொண்டு தான் அதன் உணர்வுகள் செயல்படும்.
 
அதைப் போன்றே
1.மற்றவரை ஈவு இரக்கமற்றுப் பழி தீர்க்கும் உணர்வாகச் செயல்படும் போது…
2.இவன் கேட்ட வரப்படி மனிதனான இந்திரலோகத்தை மாற்றி அமைத்து இவன் உயிர் புலியாக மாற்றும்.
 
அப்போது புலியின் உயிரும் விஷ்ணுவே…! அது எடுக்கும் அசுர உணர்வுகள் இந்திரலோகமாகி… அதன் உணர்வு கொண்டு அடுத்ததைக் கொன்று புசிக்க வேண்டும் என்று பிரம்மனின் நிலைகளும்” அதை உருவாக்குகின்றது.
 
புலி அசுர குணங்கள் கொண்டு தாக்கும் போது மகிழ்ச்சி பெறும் சக்தியை இழக்கச் செய்து விடுகின்றது. எப்போதும் கொடூர உணர்வு கொண்டே வாழுகின்றது.
 
அதே சமயத்தில்
1.புலியான உடலும் சிவமே... அந்தச் சிவத்திற்குள் அசுர உணர்வின் சக்திகள் கூடி
2.இந்திரலோகத்தில் மகிழ்ச்சி என்ற நிலையே இல்லாதபடி ஆகிவிடுகிறது.
3.தன் இனத்தின் நிலைகளில் கூடப் போர் செய்ய செய்யும் முறையே வருகின்றது
4.”தன் குட்டிகளின் அரவணைப்பு ஒன்றே அதற்குள் மிஞ்சும்.
 
ஆதாவது “தன் இனம் என்ற நிலைகள் இருந்தாலும் சிறிது நேரமே ஒன்றி வாழுகின்றது அடுத்து பகைமை உணர்வு கொண்டு தாக்கிடும் உணர்வுகளே அதற்குள் பெருகுகின்றது.
 
ஆகவே மனிதனான பின் இத்தகைய அசுர உணர்வுகளை எடுத்தால்ம்முடைய அந்த எண்ணப்படி இந்திரலோகத்தை மாற்றி அமைத்து அதை ஆட்சி புரியும் தன்மை வருகின்றது.
 
அதைத்தான் மூன்று லோகத்தையும் இரண்யன் தனக்குள் அடிமைப்படுத்தினான் இந்திரலோகத்தில் உள்ள அனைவரையும் அடிமைப்படுத்தினான் என்று சொல்வது. காற்றுப் பகுதியில் உள்ள உணர்வுகளையும் உடலான இந்திரலோகத்தையும் அடக்கி ஆளுகின்றான்.
 
அதாவது காற்று மண்டலத்தையும் அதுவாக (தன் உணர்வாக) மாற்றுகின்றான். அதே சமயத்தில் சூரியனிலிருந்து வரக்கூடிய உணர்வினை அதிலேயும் (தன் உணர்வின் தன்மை கொண்டு) மற்றொரு நிலைகளில் அது அடக்கிடும் உணர்வின் சக்தியை எவ்வாறு பரப்புகின்றது…? என்ற நிலையைத் தான் மூன்று லோகம் என்று காரணப் பெயரை வைத்து அழைக்கின்றார்கள்.
1.உடலான ஒரு லோகமும்
2.புறத்தால் வரும் தன் சுற்றுப்புறச் சூழ்நிலையில் உள்ள நிலையும்
3.சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷத்திலும் இவன் இடும் உணர்வே அதனின் செயலாகவும் செயல்படுகிறது என்று காட்டுகின்றார்கள்.
 
அசுர குணங்கள் கொண்டு பேசினால் சுற்றுப்புறச் சூழ்நிலையான (காற்று மண்டலம்) அந்த லோகத்தையும் கவர்ந்து விடுகின்றது. அதற்குள் வாழும் மக்களும் சிறிதளவு அதை நுகர்ந்த பின் அந்த உடலையும் அடக்குகின்றது அச்சுறுத்தி வாழும் நிலைகள் வருகின்றது.
 
உதாரணமாக ஒரு இடத்திலே போக்கிரி கடுமையாகப் பேசினால் அவன் உடலுக்குள் இருக்கும் நல்ல குணத்தை அடக்குகின்றான்.
 
நல்ல உணர்வின் தன்மை அடங்கிடும் உணர்வுகள் வெளிப்படுத்தும் போது கேட்போர் உணர்வுகளில் அவர்களுக்குள் புகுந்து அங்கே அச்சுறுத்தும் உணர்வு வருகின்றது.
 
அதே சமயத்தில் சூரியனால் வெளிப்படும் உணர்வின் தன்மையை அது மற்றதுடன் இணைந்து உணர்வின் அலைகளாக படரப்படும் பொழுது சூரியனின் சக்தியையும் இவனுக்குள் ஆட்சி புரிந்து கொள்கின்றான்.
 
இப்படி ஆக்கிரமிப்புத் தன்மையே அனைத்திலும் வரப்படும் பொழுது அவனின்று விளையும் தன்மை
1.உடலையும்
2.காற்று மண்டலத்தையும்
3.சூரியனுடைய உணர்வுகளையும்
4.இந்த மூன்று மண்டலங்களையும் அவனுடைய வீரியத் தன்மை கொண்டு ஆட்சி புரியத் தொடங்கி விடுகின்றது.
5.இதை நுகந்தோர் அனைவரும் மடியும் உணர்வும் அசுர உணர்வு கொள்ளும் நிலையை வருகின்றது.
 
இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்வதற்காகத் தான் சாஸ்திரங்களில் இப்படிக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.