ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 16, 2024

அகஸ்தியன் வெளிப்படுத்திய எண்ணங்களையும் உணர்வுகளையும் மூச்சலைகளையும் நாம் நுகரப் பழக வேண்டும்

அகஸ்தியன் வெளிப்படுத்திய எண்ணங்களையும் உணர்வுகளையும் மூச்சலைகளையும் நாம் நுகரப் பழக வேண்டும்


பிறந்த பருவத்திலிருந்து அகஸ்தியன் வானை நோக்கி உற்றுப் பார்த்த்துப் பல பல நிகழ்ச்சிகளைக் காணுகின்றான் அவனை அறியாமலே.
 
அதாவது… சூரியனின் இயக்கத்தின் நிகழ்ச்சிகளும்… அது நஞ்சைப் பிரிக்கும் நிலையும் தனக்குள் ஒளியின் சக்தியாக மாற்றிக் கொள்வதும் மாற்றியது தனக்குள் பாதரசங்களாக மாறுவதும் சுழற்சியிலே வெளிப்படும் இந்தப் பாதரசங்கள் பிற நட்சத்திரங்களிலிருந்தும் மற்ற கோள்களிலிருந்தும் தன் ஈர்ப்புக்குள் வரும் அந்தச் சக்திகளை மோதி விஷத்தைப் பிரித்துத் தனக்குகந்ததாக இப்படி மாற்றிக் கொண்டே வருகின்றது சூரியன்.
 
இதையெல்லாம் அகஸ்தியன் கண்டுணர்ந்து தனக்குள் விளையச் செய்தபின்
1.அவனுக்குள் அதனின்ண்ணத் தோற்றங்கள் வருகின்றது
2.மனிதனான பின் இந்த உணர்வின் எண்ணங்கள் வருகின்றது அந்த மூச்சலைகள் வெளிப்படுகின்றது
3.சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொண்டே இருக்கின்றது.
4.வளரும் பருவத்தில் நஞ்சை வென்றிடும் உணர்வாக” அகஸ்தியன் நுகரப்படும் பொழுது அவனுக்குள் அந்தச் சக்தி வளர்கின்றது.
 
27 நட்சத்திரங்களும் கடுமையான விஷத்தன்மை வாய்ந்தது. ஒரு நட்சத்திரத்திற்கும் இன்னொரு நட்சத்திரத்திற்கும் வெளிப்படும் உணர்வலைகளைச் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றி ஒன்றுடன் ஒன்று மோதும் போது தான் மின்னலாக மாறுகின்றது…. ந்த மின் பொறிகள் வீரியமாக வெளி செல்கிறது…”
 
விஞ்ஞான அறிவு கொண்டு கரண்டை உற்பத்தி செய்யும் பொழுது இரண்டு கரண்ட் வயர்களை இணைத்தால் எப்படிப் பொறிகள் கிளம்புகின்றதோ இதைப் போன்று தான் அந்த மின்னலின் இயக்கப் பொறிகள் கிளம்பி ஒளி அலைகளாக மாறுகின்றது.
 
1.அந்த விஷத்தினை அகஸ்தியன் நுகர்வதால் இவனுக்குள் அடங்குகிறது.
2.அதாவது அவன் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அதை ஒடுக்கி ஒளியின் உணர்வாக மாற்றிடும் சக்தியாகப் பெறுகின்றான்.
 
ஆரம்ப நிலைகள் மனிதனாக வளர்ச்சி பெற்ற நிலையில் இத்தகைய தன்மை அவனுக்குள் விளைகின்றது.
1.அவனில் விளைந்த அத்தகைய உணர்வுகளும்
2.நஞ்சை ஒடுக்கிய சக்திகளும்
3.அதை ஒளியாக மாற்றிய உணர்வுகளும்
4.சூரியனுடைய காந்த சக்தி கலந்து இன்றும் நம் பூமியில் படச் செய்துள்ளது.
 
சூரியனின் இயக்கத்தையும் அதே சமயத்தில் நட்சத்திரத்தின் செயலாக்கங்களையும் மின்னலாகத் தாக்கப்பட்டு அதனுடைய நிலைகள் பிரிக்கப்படும் பொழுது ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது ஆவியாகச் செல்வதும் வான மண்டலங்களில் மேகமாகச் செல்வதையும் அந்த மேகத்தின் தன்மையை சனிக்கோள் தன் சுழற்சி வட்டத்தில் கவர்ந்து உறை னியாக மாற்றுவதும் அந்தச் சுழற்சியின் தன்மை அதனுடைய காலப்பருவம் சூரியனின் ஒளிக் கதிர்கள் அதிலே தாக்கப்படும் பொழுது கரைந்து ஆவியாகச் செல்வதும் இந்த ஒளிக் கதிருக்குள் அது கவரப்பட்டு மற்ற கோள்களின் உணர்வைத் தனக்குள் கவர்ந்து வரும் பொழுது அந்த அணுக்களாக வளர்ச்சி பெறும் சக்தியாக வருவதையும்… “அது எவ்வாறு…?” என்று துருவன் காணுகின்றான்.
 
சிறு பருவத்தில் இதை எல்லாம் அகஸ்தியன் கண்டுணர்ந்தாலும்
1.வளர்ச்சியின் பருவத்தில் அவன் கவர்ந்த உணர்வுகள் அதை வெளிப்படுத்தும் போது எண்ணங்களாகவும்
2.வடிவமைத்து செயல்படும் உணர்வின் எண்ணங்களை வெளிப்படுத்துகின்றான்.
3.அவ்வாறு வெளிப்படுத்தும் போது சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து வைத்திருக்கும்
4.கஸ்தியனுடைய எண்ணங்களையும் உணர்வுகளையும் மூச்சலைகளையும் நாம் நுகர்ந்தால்
5.அதே எண்ணங்கள் அதே உணர்வுகள் நமக்குள் வந்து அவன் அறிந்தது போன்று
6.நாமும் அறியக்கூடிய ஆற்றலாக அறியும் தன்மையாக வருகின்றது