ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 6, 2024

நரசிம்மா

நரசிம்மா

உதாரணமாக நாம் ஒரு ஆசையில் வலிமையாகச் சிக்கி விட்டால் அதை அடக்கும் தன்மை இழக்கப்படுகின்றது. அப்போது நாம் நுகரும் உணர்வுகள் அசுத்த அணுக்களாகப் பெருகி மீண்டும் இழிநிலையான சரீரத்திற்கு அழைத்துச் சென்றுவிடும்.
 
சீதாராம் பரசுராம் என்றால் இந்த எண்ணங்கள் தான். ஆக எந்த உணர்வின் தன்மையை நாம் நுகர்கின்றோமோ சூரியன் அதைச் சீதாலட்சுமியாக மாற்றுகின்றது. அதை நுகர்ந்தால் திரேதா யுகத்தில் நாராயணன் சீதாராமனாகத் தோன்றுகின்றான்… எண்ணம்…”
 
இப்படி மனிதனான பின்
1.பல உணர்வுகளைச் சேமித்து அந்த உணர்வின் அறிவாக இயக்கக்கூடிய நிலைகள் கொண்டு
2.மனித உடலில் பல எண்ணங்களை வைத்து இயக்கும் சக்தி வருகின்றது.
 
பல பல சரீரங்களைச் சேர்த்துக் கொண்டு மனிதன் முழுமையாகும் உணர்வும் நஞ்சினை வென்றிடும் உணர்வும் நமக்குள் சேமித்து மனிதனாக உருவாக்கும் ஆற்றல் பெறுகின்றது.
 
இது தான் பலராம் பல எண்ணங்கள் வைத்து நாம் இயக்கும் தன்மை வருகின்றது. ஆனால்
1.இவை அனைத்தும் தீமைகளை அகற்றிடும் நரசிம்மனாக மாற வேண்டும்.
2.அதாவது பலவற்றையும் நாம் உணர்ந்தாலும் தீமையை அககற்றும் நரசிம்மனாக மாறினால் தான்
3.நாம் அழியாத நிலைகள் பெற முடியும்.
 
நமது உயிர் பலவற்றை உருவாக்கினாலும் தீமைகளை வென்றிடும் ஆறாவது அறிவின் துணை கொண்டு தீமைகளை அகற்றிடும் அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் நம் உயிரிலே அந்த உணர்வுகள் மோதப்பட்டு இந்த உணர்வுகள் உடலுக்குள் பரப்பப்படும் பொழுது தீமைகள் அடைபடுகிறது… “அத்தகைய நஞ்சு அடக்கப்பட வேண்டும்…”
 
நாம் நுர்ந்த உணர்வுகள் முதலில் நம் ஆன்மாவாக மாறுகின்றது பிறருடைய தீமைகள் ஆன்மாவாக அவ்வாறு மாறுவதை
1.நரநாராயணன் – நம் உயிர் நரசிம்மனாக மடி மீது இரண்யனை வைத்து
2.வாசல்படி மீது உயிர் இங்கே அமர்ந்து தீமைகளைப் பிளந்தான்.
 
றாவது அறிவின் துணை கொண்டு அருள் மகரிஷிகள் உணர்வை நுகர்ந்து அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி விட்டால் விஷம் கொண்ட நிலையை அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் அடக்குகின்றது.
1.அடக்கப்படும் பொழுது அந்த அணுக்கள் உணவு கிடைக்காது தவிக்கின்றது
2.அதற்கு ஈர்க்கும் சக்தி அப்பொழுது குறைகின்றது.
3.அப்போது தீமையைப் பிளக்கும் நிலையாக அது அமைந்து அந்த்த் தீமைகள் பிரிக்கப்படுகிறது.
4.தீமைகள் பிரிக்கப்பட்டு அகன்று செல்கின்றது ளியான உணர்வுகள் நமக்குள் வளர்கின்றது.
 
இதைத்தான் மடி மீது இரண்யனை வைத்து வாசல்படி மீது அமர்ந்து நநாராயணன் பிந்தான் என்று காட்டுகின்றார்கள். அதாவது…
1.நாம் கை கால் அங்கங்கள் கொண்டு மற்ற வேலைகளைச் செய்வது போன்று
2.ஞானிகளின் நினைவு கொண்டு அருள் உணர்வுகளை நுகர்ந்து உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
3.அதனுடைய வலிமை கொண்டு அடக்கப்படும் பொழுது தீமைகளை ஈர்க்கும் தன்மை இழக்கப்படுகிறது.
 
ஆகவே வேதனைப் படுவோரைப் பார்த்தால் அடுத்த கணம் ஆத்ம சுத்தி செய்து மாற்றிடல் வேண்டும்.
 
காரணம் வேதனைப்பட்ட உணர்வை நுகர்ந்தால் கருவிழி ஊழ்வினை என்று வித்தாகப் பதிவாக்குகின்றது. ஊழ்வினையாகப் பதிவானால் மீண்டும் அதைத்தான் நுகர வேண்டி வரும். உயிரிலே பட்டு அதன் உணர்வின் அறிவாக இயக்கி விடுகின்றது அதுவே உடலுக்குள் வேதனைப்படச் செய்யும் அணுவாக மாறி விடுகின்றது.
 
நாம் இதை மாற்றி அமைக்க முடியும் மாற்றி அமைக்க வேண்டும். கஸ்தியன் இதையெல்லாம் மாற்றி அமைத்தவன். அதை நீங்கள் எல்லோரும் பெற முடியும் பெற வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கின்றேன்.
 
இனி வரக்கூடிய காலங்கள் மோசமாக இருக்கும் நேரத்தில் உங்களைக் காத்திடும் ஆற்றலை நீங்கள் பெற வேண்டும் என்பதற்கே இதை மீண்டும் மீண்டும் பல கோணங்களில் உபதேசிப்பது.
 
இந்த உணர்வின் வலிமையை நீங்கள் சேர்ப்பித்து தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்/ இந்த உடலை விட்டு அகன்றால் பிறவி இல்லாத நிலை அடைய வேண்டும் என்பதற்கே இதைத் தெளிவாக்குகின்றேன்.
 
ஆறாவது அறிவால் தீமைகளை அகற்றிடும் எண்ணங்களை எண்ணினால் கண்ணின் நினைவுக்கே வருகின்றது
1.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி விண்ணை நோக்கி ஏகும் பொழுது
2.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகள் நம் ஈர்ப்புக்குள் வருகிறது
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை அவ்வாறு உடலுக்குள் பெருக்கி தீமைகளைப் பிளப்பது தான் நரசிம்மா…!