ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 20, 2024

மழை

மழை


இப்பூமியில் காற்று வீசுவதும் மழை பெய்வதும் பனி பெய்வதும் எரிமலை கக்குவதும் எல்லாமே பூமியின் ஈர்ப்புத் தன்மையிலிருந்து பூமி ஈர்த்து அது வெளிப்படுத்தும் நிலை கொண்டு அந்தந்த நிலையில் வருவது தான் மழை காற்று பனி உஷ்ணம் எல்லாமே என்று முதலிலேயே உணர்த்தி உள்ளேன்.
 
அதனின் விளக்கம் இன்று தருகின்றேன்.
 
மழை பெய்வதற்கு முதல் பூமி ஈர்த்து அது வெளிப்படுத்தும் உஷ்ண நிலைகள் ஆவியாகி மேகமாகச் சூழ்ந்து மழை வருகிறது என்றேன்.
 
இம்மழை பெய்வதற்கு பூமியிலிருந்து எந்த நிலை கொண்டு உஷ்ணம் வெளிப்படுத்துகிறதோ அது வெளிப்படுத்தும் நிலை போலவே உயிரினங்கள் எல்லாமே தன்னுள் உள்ள உஷ்ணத்தை வெளிப்படுத்துகின்றன.
 
1.மழை வருவதற்கு முதலிலேயே உயிரினங்கள் எல்லாவற்றுக்குமே அந்நிலை தெரிந்திடும்.
2.ஒவ்வொருவரும் அவரவர் உடல் நிலையில் இருந்தும் அறிந்திடலாம் மழை வரும் தன்மையை.
 
பூமி வெளிப்படுத்தும் உஷ்ண அலைகளைக் கொண்டு மேல் நோக்கி ஆவி நிலைக்குச் செல்லும் பொழுது இவ்வுலகில் உள்ள ஜீவனுடன் ஒன்றிய எல்லா நிலைகளுக்குமே மனித உடல் முதற்கொண்டு அந்நிலை தெரிந்திடும்.
 
மழை வருவதற்கு முதலிலேயே நம் உடல் நிலையில் பெரும் புழுக்கத்தை நாம் உணர்கின்றோம். அந்நிலை போலவே எல்லா ஜீவராசிகளும் தாவர வர்க்கங்களும் அந்நிலையைப் பெறுகின்றன.
 
பூமி வெளிப்படுத்தும் உஷ்ண நிலையில் இருந்து மற்ற உயிரினங்களுக்கும் அது தாக்கப்பட்டு அவ்வுஷ்ணம் வெளிப்பட்டு ஆவியாகி மேகமாக மழை பெய்கிறது.
 
நீர் நிலையில் உள்ள நீர் மட்டும் ஆவியாகி மேகம் கொண்டு மழை பெய்கிறது என்கின்றோம். எந்த இடத்தில் எல்லாம் மழை பெய்கிறதோ அந்த இடங்களில் உள்ள அப்பூமியில் உள்ள நீர் நிலைகள் நிலங்கள் ஜீவனுள்ள மலைகள் கல் மண் மற்ற உயிரினங்கள் மனித உடல் முதற்கொண்டு ஜீவனுள்ள எல்லாவற்றின் நிலையிலிருந்தும் தான் பூமி வெளிப்படுத்தும் உஷ்ண நிலை கொண்டு நாம் மழை வரும் பாக்கியத்தை அடைகின்றோம்.
 
1.நம் உடலுக்கு மற்றவற்றில் தொடர்பு இல்லை என்ற எண்ணம் வேண்டாம்.
2.எல்லாவற்றிலுமே நாமும் கலந்துள்ளோம் என்று உணர்ந்து வாழ்ந்திடுங்கள்.
 
ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள இப்பூமியின் சுற்றலில் கலந்துள்ள நாம் ஒவ்வொன்றையும் அறிந்து நம் வாழ்க்கைக்கு என்ன பயன் என்று எண்ண வேண்டாம்.
 
நம் வாழ்க்கை என்பது தனித்த வாழ்க்கை அல்ல. ஒளியும் ஒலியும் காற்றும் நீரும் இல்லாவிட்டால் நம் வாழ்க்கை என்பதற்கே பொருள் இல்லை.
1.ஒவ்வொன்றின் நிலையையும் அறிந்து வாழ்வதின் அர்த்தம் கொண்டே வாழ்வதற்குத் தான்
2.இப்பாட நிலையின் மூலமாகச் சில உண்மைகளை விளக்கி வருகின்றேன்.
 
பனிமழை பெய்யும் ஊர்களிலும் இங்கு எப்படி நாம் மழையை நம்முடன் ஒன்றியதாகப் பெய்கிறது என்கின்றோமோ அந்நிலை போலத் தான் அங்கங்கு வாழ்ந்திடும் ஜீவாத்மாக்களின் தொடர்பு கொண்டுஅங்குள்ள பூமி எந்த நிலை கொண்டு அப்பனிக்காற்றை வெளிப்படுத்துகின்றதோ அதைக் கொண்டு தான் பனிமழையும் பெய்கிறது.
 
பூமியில் நில அதிர்வும் நில வெடிப்பும் வருவதும் இப்பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் தன்மை கொண்டு தான் நில அதிர்வு நில வெடிப்பு எல்லாம் ஏற்படுகின்றன.
 
இப்பூமித் தாய் ஆரம்ப காலத்தில் இவ்அவதாரம் என்று நாம் செப்பிடும் காலத்திலேயே பல பொக்கிஷங்களை ஈர்த்துப் பெற்ற நிலையை நாளை விளங்கிடுவேன்.