சித்தன் எப்படி வெளிப்படுவான்…?
பல காலங்களாக மக்கள்
மனதில் எல்லாம் உலகம் அழியப் போகின்றது என்ற ஒரு பீதி நிலை உள்ளது.
1.உலகம் எப்படி அழியப் போகிறது…?
2.மனிதர்கள் எல்லாம்
எந்த நிலையில் தப்புவார்கள் என்ற கேள்விக்குறியும் உள்ளது.
3.ஜெப நிலையில் உள்ளவன்
தப்புவான் என்றும் நல்லோர்கள் நிலைத்து இருப்பார்கள் என்றும்
4.தர்மம் ஜெயிக்கும்
தெய்வப் பற்றுடையவன் நிலைப்பான் என்னும் நம்பிக்கை ஒரு சாராருக்கும் உள்ளது.
இப்படிப் பல நிலைகளில் எண்ணத்தைச் சிதற
விட்டுள்ள இவ்வுலகின் சுழற்சியில் மாறுபட்ட நிலை என்ன…? என்பதனை நாமும் நம் ஜெப நிலையில் உணர்ந்ததை உணர விடுகின்றோம்.
இவ்வுலகம் எப்படிக் கால நிலையை மாற்றிக் கொள்ளப் போகின்றது…? இப்பொழுதே சில நிலைகளில் நடந்து விட்டது…
நடக்கின்றது பல மாறுதல்கள்.
இவ்வுலகம் ஒரு நொடியில்
அசைவினால் பெரும் மாறுதல்கள் நடக்கப் போகின்றன என்று
உணர்த்தினேன் அல்லவா. ஒரு ஊரில் உள்ள ஜனத்தொகையில் அங்கு
வரும் வெள்ளத்தில்… வெள்ளம் வரும் பொழுது நல்லவர் கெட்டவர்
என்று பாகுபடுத்தி ஆள் பார்த்து அடித்துச் செல்வதில்லை அவ்வெள்ளம்.
1.இயற்கை பார்த்து
நல்லவன் கெட்டவன் என்று எப்படிப் பிரித்து எனது ஜெனனத்திற்கு அனுப்பவில்லையோ
2.அதைப் போலவே இயற்கை
பார்த்து நல்லவன் கெட்டவன் என்று அது நம்மை நிலை நிறுத்தப்
போவதில்லை.
சாமி சொன்னபடி சில
பாகங்கள் நிலை மாறப்போகிறது சில பாகங்கள் நிலைத்து நிற்கும் என்றும்
கேட்டிருப்பாய். சில பாகங்கள் என்னும் பொழுது அப்பாகத்தில் ஒரு சிலராவது நல்லவர்கள் இருக்க மாட்டார்களா…? எல்லோருமே கெட்டவராக
அழியத்தான் போகிறார்களா…?
1.சித்தன் வெளிப்படுவான்
சித்தன் வெளிப்படுவான் என்றெல்லாம் உணர்த்தி உள்ளேன்
2.எப்படி அச்சித்தன் வெளிப்படுகின்றான்…?
இக்கலியின் கடைசியிலிருந்து கல்கிக்கு எந்நிலைக்குச் செல்லலாம்…? என்பதனை உணர்ந்து
1.இங்கு மட்டுமல்ல… இதை உணரும்…
2.இதை உணர்ந்தவர்களின்
சொல்லைக் கேட்பவரும்…
3.இதை உணராமலே
நல்நிலையில் உள்ளவர்களும்… கல்கியில் கலக்கப்போவது எந்நிலையில்…?
இவ்வுடலுடன் உள்ள எல்லா
ஆத்மாக்களுமே காலம் காலமாக நம்மில் தோன்றிய பல ஞானிகள்
ரிஷிகள் முனிவர்களின் நற்சொற்கள் எல்லாம் தெய்வீகத் தன்மையைத் தன்னுள் வளர்த்து… அன்பு
கொண்ட தெய்வமாக வாழுங்கள் என்ற உபதேச போதனை பெற்று அவ்வுபதேசப்படி
நடந்து…
1.தன் எண்ணத்திலும்
செயலிலும் பயத்தை அண்ட விடாமல் அழியும் காலத்தை எண்ணாமல்
2.ஒவ்வொரு நாளும்
புத்துயிர் கொண்டே நல் உபதேசத்தை ஏற்று ஜெபம் பெற்று
3.ஜெபத்தின் வழி நடந்து
உணர்ந்த நிலை கொண்டு வாழும் தன்மையில் - இக்கலி முடிந்து கல்கி வரும்.
இவ்வுலகச் சுற்றலில்
ஏற்படும் சிறு அசைவு நிலை கொண்டு காலம் மாறுதலின் நிலையில்… எப்படி இந்நிலையில் உள்ளவர்கள் எல்லாம்
தப்புகிறார்கள் என்றால்…
1.அவரவர்கள் செய்த
ஜென்மப் பலனினால்
2.அவர்களுக்குப் புதிய சக்தியான பறக்கும் சக்தியை ஏற்படுத்தத் தான்
3.நமக்கு முன் தோன்றிய
நமக்கு இப்பொழுது ஆண்டவனாக அருள் புரியும் பல ரிஷிகளின் ஜெபநிலையின் சக்தி எல்லாம்
நம்மைப் பறக்கச் செய்து
4.இப்பொழுது சூட்சம உலகத்தில் வாழ்ந்திடும் நல்லோருடன் கலப்பது தானே தவிர ஒரு குடும்பத்தில்
அறுவர் இருந்து ஒருவர் தப்பும் நிலை அல்ல.
இவ்வுலக அனைத்துக்குமே
இந்நிலை தான்…! இவ்வுலக மாறுதலின்
போது அனைத்து ஜீவராசிகளுமே ஆரம்ப அணுவின் நிலைக்கே வந்து
விடுகின்றன.
அதிலிருந்து தப்புபவர்கள் தான் பறக்கும் நிலை கொண்டு… பிறகு வாழும் நிலைக்குப் புதிய வாழ்க்கைக்கு வந்து
புதிய உலகம் படைக்கிறார்கள் கல்கியிலே.
இதற்கு முன் தோன்றிய கல்கிக்கும் கலிக்கும் கொண்ட சுற்றலின் நடந்த நிலைகளுக்கும் இனிச் சுற்றப் போகும் கல்கிக்கும் கலிக்கும் உள்ள சுற்று… தப்பிய அனைத்து உயிரினங்களுமே “உன்னதமாக இருந்திடும்…”
ஆரம்ப நிலை பெற்று இனியும் சுற்றத்தான் வேண்டும். உலகமே சிறு அசைவினால் ஏற்படும் மாறுதலைக் கொண்டு ஒவ்வொரு மண்டலத்தின்
தன்மையும் மாறும் தன்மையில் உள்ளது என்றால் இவ்வுலகின் உயிர்நிலைகள் இப்பொழுது உள்ளது போல் உள்ளன என்பதுமல்ல.
சூட்சும உலகத்திற்குச் சென்றவர்கள் எல்லோரும் இவ்வுலகத்திலேயே வருகிறோம் என்பது
அல்ல.
1.பறக்கும் சக்தி
கொண்டு விட்டால்
2.நாம் ஏற்கும் நிலையே அன்றுதான் நமக்குப் புரியும்.
இந்நிலையை இதற்கு மேல்
உணர்த்துவது உத்தமுமல்ல. ஒவ்வொருவரும்
புரிந்து வாழ்ந்திடவே இப்பாட நிலை. அவரவர்கள் செய்த நற்பலனை
அவரவர்கள் எடுக்கலாம்.
நம் முன்னோர்கள்
சொல்லியபடி தன் நிழல் தன் கூடத்தான் வரும் என்றதன் உள்ள அர்த்தத்தைப் புரிந்தால் வாழ்ந்திடலாம் கல்கியில்.