ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 5, 2024

அகஸ்தியனின் துணையால் பேரண்டத்துடன் நாம் தொடர்பு கொள்ள முடியும்

அகஸ்தியனின் துணையால் பேரண்டத்துடன் நாம் தொடர்பு கொள்ள முடியும்

அகஸ்தியன் கற்றுணர்ந்து வரவில்லை. நஞ்சிடமிருந்து தாய் தப்பிக்கும் உணர்வை நுகர்ந்தது
1.கருவிலே வளரும் அகஸ்தியனுக்குள் அந்தச் சக்திகள் இணைகின்றது.
2.நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் பெறுகின்றது.
 
பிறந்த பின் தரையிலே மல்லாந்து படுத்திருக்கும் பொழுது அறிவில்லாத நிலையில் வானியலை உற்றுப் பார்த்தாலும் அதை அறியும் அறிவே அவனுக்கு இல்லை ஆனால் (அவன் உடலில் நஞ்சை முறித்திடும் சக்தி இருப்பதால்)
1.கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது அவன் கருவிழியின் வழியாக அந்தச் சக்திகள் ஊடுருவுகின்றது.
2.சூரியனிலே ஏற்படும் மோதல்களைப் பார்க்கின்றது
3.மோதலால் ஏற்படும் உணர்வின் தன்மை அகஸ்தியனுக்குள் மோதப்பட்டு உணர்வின் அறிவாக இவனை இயக்குகின்றது.
4.சூரியனின் இயக்கத்தையும் அவன் காணும் சக்தி பெறுகின்றான்.
 
இது எல்லாம் இயற்கை சந்தர்ப்பத்தால் தான் அவனுக்குள் உருவான நிலைகள்.
 
நஞ்சு கொண்ட மிருகங்களிடமிருந்து தப்பிக்கும் உணர்வுகளை அவருடைய தாய் தந்தையர் புலனறிவால் அறிந்த பின் அவர்கள் நுகர்ந்த பச்சிலை மூலிகைகளின் விஷத்தின் தன்மைகள் கருவிலே வளரப்படும் போது அது இணைந்து நஞ்சினை வென்றிடும் உணர்வின் அணுக்களாக அகஸ்தியனுக்குள் விளைகின்றது.
 
இதைப் போன்று தான்
1.உங்களுக்குள் உருவாகும் உணர்வின் தன்மையும்
2.அருள் ஒளியின் தன்மையை உங்களுக்குள் இணைக்கப்படும் பொழுது
3.அந்த நஞ்சினை வென்றிடும் ஆற்றலை நீங்களும் பெற முடியும்.
 
அந்த நோக்குடன் தான் எமது (ஞானகுரு) உபதேசத்தை உங்களை உற்று நோக்கும்படி செய்து உணர்வின் தன்மை நுகரும்படி செய்து
1.நுகர்ந்த உணர்வுகளை ஜீவணுக்களாக மாற்றும்படி செய்வதற்கே
2.எமது குரு இட்ட கட்டளைப்படி இதைச் செயலாக்குகின்றேன் தெளிந்து கொள்ளுங்கள்.
 
பிற சக்திகளைச் சூரியன் எவ்வாறு கவர்கின்றது…? என்ற நிலையையும் அண்டங்கள் எவ்வாறு உறுப்பெற்றது என்ற அதன் தொடர்வரிசையையும் அகஸ்தியன் காணுகின்றான்.
 
விஞ்ஞானி ஒரு பொருளைப் பிளந்து அணுவைப் பிளந்து அணுவிற்குள் இயக்கத்தின் தன்மை அறியப்படும் போது எங்கிருந்து விளைந்தது…? அதனுடைய உணர்வின் தொடர் எங்கிருந்து வந்தது…? என்று காணுகின்றாண்.
 
ஆனால் மெய்யை உணரும் ஆற்றல் விஷத்தை ஒடுக்கிடும் ஆற்றலாகத் தாயின் கருவிலே உருவாக்கப்படும் பொழுது
1.தனக்குள் விளைந்த நிலையுடன் மோதப்படும் பொழுது
2.விண்ணின் ஆற்றல் எவ்வாறு உருவானது…? என்று அறிவை அகஸ்தியனுக்குள் ஊட்டுகின்றது
3.ஒவ்வொன்றும் எவ்வாறு உருவாகிறது…? என்று உணர்வின் எண்ணங்கள் அவனுக்குள் தோற்றுவிக்கின்றது
 
இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் நாளை விஞ்ஞானத்தினால் வரும் விஷத்தினை வென்று நஞ்சற்ற உணர்வுகளை உங்களுக்குள் வளர்த்து இந்த உடலில் இருந்து செல்லப்படும் பொழுது அருள் ஞானிகளுடன் ஒன்றி மரணமில்லாப் பெரு வாழ்வு என்ற என்றும் அழியா ஒளியின் சரீரம் பெறுவதற்குத் தான்…”
 
அந்த நிலையை அடைந்தது தான் சப்தரிஷி மண்டலங்களும் துருவ நட்சத்திரமும். இதைப் போன்று வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் ஏனைய மண்டலங்கள் எத்தனையோ அகண்ட அண்டத்தில் உண்டு...!”
 
1.அதிலே இணைந்த உணர்வுகள்
2.அவர்கள் உமிழ்த்தும் நிலைகளை இணை சேர்த்து உணர்வின் தன்மை ஒளியாக்கி
3.ஒளியின் சரீரமாக அழியா வல்லமை பெறச் செய்யும் இந்த உயிரை நாம் கடவுளாக மதித்து
4.நமக்குள் எண்ணியதை உருவாக்கும் அதனைத் தெளிவாக்குதல் வேண்டும்.
5.அந்தப் பேரண்ட மகரிஷிகளின் அருள் வட்டத்திலே நாம் இணைய வேண்டும்.
 
அதற்குத் தான் இதை எல்லாம் பதிவு செய்கின்றேன். பதிந்து கொண்ட பின் நினைவு கொண்டு அதை நீங்கள் கவர்ந்து செயலாக்க முடியும்.