யாம் உபதேசிக்கும் போது எங்கே (தியானத்திற்குச்) சென்றீர்கள்…?
நான் (ஞானகுரு)
சொல்வதெல்லாம்
1.அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குள் உங்கள் உணர்வினை இணைத்து நினைவாற்றலைக் கொண்டு
சென்று
2.ஒவ்வொரு அணுக்களிலும் ஒவ்வொரு
உணர்வுக்குள்ளும் அது எப்படி இயங்குகின்றது என்றும்
3.அந்த நினைவுடன் அருள் ஞானிகள் உணர்வைக் கலந்து உடலில் நீங்கள் பெற்ற உணர்வுடன் இணைக்கின்றேன்.
இந்தக் காலப்பருவம்…
1.துருவ நட்சத்திரத்தின் சக்தி - அது
வெளிப்படும் நேரம் (அதிகாலை)
2.நுகரும்… ஈர்க்கும்
சக்தி… உங்களின் உணர்வுகள் தொடர்பு
கொள்ளப்படும் பொழுது
3.உங்களுக்குள் அறியாது சேர்ந்த சிந்தனையை
அடக்கச் செய்யும் நிலைகளில் இருந்து
4.அதனை அடக்கும் அருள்
ஞானிகள் உணர்வை உங்களுக்குள் பெருக்கச் செய்யும் சூழ்நிலையை
உருவாக்கும் நேரம் தான் இவை.
நேற்று பேசியது வேறு விதம்…
அதற்கு முன் துருவ தியானத்தில் பேசியது வேறு விதம்… அதற்கு முந்தைய நாள் துருவ
தியானத்தில் வேறு விதம்… இன்றைக்கு இந்தத் துருவ தியானத்தில் எதைச் செய்கின்றோம்…?
நினைவினை அங்கே துருவ நட்சத்திரத்திற்குள் கொண்டு செல்கின்றோம்.
இருந்தாலும் உங்கள் நினைவுகள் அவசரமாக
ஊருக்குப் போக வேண்டும் என்ற நினைவுகள் இருந்தால் இந்தத் தியானம் என்ன செய்யும்…?
எப்படா சாமி முடிப்பார் என்று அதைத் தியானிக்கும் நிலையாகிவிடும் சாமி
எப்படா விடுவார் நாம் வீட்டுக்குப் போகலாம்
போக வேண்டுமே போக வேண்டுமே என்று…! எவ்வளவு
பெரிய தத்துவத்தை எடுத்துச் சொன்னாலும் அப்போது எடுக்காது
ஆனால் இப்போது யாம் உங்களை இழுத்து உட்கார வைத்து எமது உபதேசத்தைக் கேட்கும்படி செய்கின்றோம்.
1.இந்த உணர்வின்
வலுப்பெறும் போது இதை பெறுவோம் என்ற நிலை வருகிறது.
2.ஒரு மணி நேரம் தானே போகட்டும்…! அப்புறம் சென்று பார்த்துக் கொள்ளலாம் போ…!
3.அட அப்படியே ஒரு நாளைக்கு வேலைக்குப் போகவில்லை என்றால் நாளைக்குச் சென்று சரி செய்து
கொண்டால் பரவாயில்லை என்று
4.அதை நீக்கிவிட்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியைச் சேர்க்கும்படி
வருகின்றது.
இந்த உணர்வுகள் வலுவானால் அந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் இதை நீக்கிடும் உணர்வுகள் அங்கே வலுப்பெறுகின்றது. ஆகவே தான்
1.மிக மிக நுண்ணிய உணர்வுகள்
2.நம்மை அது எப்படி இயக்குகின்றது…? என்று தெளிவாகக் காட்டுகின்றோம்.
கம்ப்யூட்டரில் கணக்கீடுகளைச்
செயல்படுத்தும் பொழுது அதனுடைய அழுத்தத்திற்குத் தக்கவாறு
அது இயக்கிக் காட்டுகின்றது. பாதரசத்தை
ஊற்றி வெப்பத்தின் தணல் கூடுவதற்கொப்ப காலமணியையும் இயக்கிக் காட்டுகின்றது…
அழுத்தத்திற்கொப்ப அது காட்டுகின்றது
1.இதைப் போன்று தான்
உங்களுடைய அழுத்த நிலைகள் ஒவ்வொன்றிலும் “அளவுகோலை வைத்து (துருவ நட்சத்திரத்தின் சக்தி)”
2.சந்திக்கும் ஒவ்வொரு உணர்வுகளையும்…
அதாவது வாழ்க்கையில் எதிர்நிலை
வருகிறது என்றால் காலத்தை அளக்கும்.
3.இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சிந்தனை
வரும்
4.பருவம் வரும் பொழுது சொல்வோம் அல்லது
செய்வோம் என்று விலகிச் செல்லச் செய்யும்…
காலத்தை விரயமாக்காது.
அருள் வழியில் அனைவரையும் அழைத்துச் செல்லும்…! மகிழ்ந்து வாழச் செய்யும்.