நாம் பறக்கும் நிலை பெற வேண்டும்… அதற்குண்டான வளர்ச்சியைக் கூட்டுங்கள்
பிறந்தோம்... வளர்ந்தோம்... வாழ்ந்தோம்... மடிந்தோம்...! என்ற சாதாரண நிலையில் மிருகங்களின் வாழ்க்கை நிலை போலத் தான் “நம் எண்ணத்தின் சக்தியை...” நாம் எண்ணிப் பார்க்காமல் வாழ்கின்றோம்.
1.இந்த எண்ணம்...
2.இந்தச் சக்தி...
3.உடல் என்னும் கூட்டில் ஆத்மா உள்ள வரை “செயல்படும் தன்மை...!”
4.உடலை விட்டுப் பிரிந்த பின்னாடி ஆவி உலகத்தில் அறிந்திட முடியாது.
5.தன் அறிவைப் பெருக்கிக் கொள்ள ஆவி உலகில் உள்ள ஆத்மாவினால் முடிந்திடாது. (இது மிகவும் முக்கியம்)
பல ஜென்மங்களில் நாம் எடுத்த எண்ணங்களும் செயல்களும்தான் இந்த உடலை விட்டுச் சென்ற அந்த ஆவிகளால் அறிந்து கொள்ள முடியும்.
உடலில் உள்ள பொழுது எந்தெந்த நிலையை அந்த ஆத்மா பெற்றதோ... எந்த நிலை கொண்ட அறிவாற்றல் அந்த ஆன்மாவிலே இருந்ததோ... அதே நிலையில் தான் அந்த ஆத்மா சுற்றிக் கொண்டேயிருக்கும்.
1.இந்த உலகையும்…
2.தான் எந்தெந்த நிலையில் வாழ்ந்ததோ அந்த நிலை கொண்ட மனிதர்களையும்…
3.அதே நிலை கொண்ட இடத்திலும்தான்.. அந்த ஆன்மா மறு ஜென்மம் பெற்று
4.“தன் தேவையை எப்படிப் பூர்த்தி செய்து கொள்ளலாம்...!” என்ற ஆவலுடன்
5.பல ஆண்டுகள் சுற்றிக் கொண்டே இருக்க முடியும்.
ஆனால் மறு ஜென்மம் பெற்று இன்று இந்த உலகில் வாழ்ந்திடும் உடலுடன் கூடிய ஆத்மாக்கள் எல்லாம் “தன் நிலை உணர்ந்து வாழும் நிலையும் ஈர்க்கும் நிலையும் இல்லாமல்” பிறரின் நிலை கொண்டே தன் எண்ண சக்தியை விரயமாக்கிக் கொண்டுள்ளார்கள்.
ஏனென்றால் நாம் வாழும் இந்த உலகம்.. மற்ற மண்டலங்கள்... அண்டசராசரங்கள்... எல்லாவற்றையுமே அறிந்து கொள்ள மனிதர்களால் மட்டும் தான் முடிந்திடும்.
1.இன்று ஆத்ம உடலுடன் உள்ள மனிதனால் மட்டும் தான்
2.எல்லா நிலையையும் ஈர்த்து
3.எல்லா உண்மைகளையும் கண்டுணர முடியும்.
அத்தகைய சக்தியைப் பெறும் தகுதி என்பது ஆண்... பெண்... குழந்தைகள்... முதியவர்கள்... என்ற நிலை கொண்டு வயது வரம்பில்லாமல் எல்லோருக்குமே அந்தச் சக்தியுள்ளது. நாம் ஈர்த்து எடுக்கும் நிலை கொண்டு தான் அந்தச் சக்தி நமக்கு உதவுகின்றது.
மின்சாரத்தை உபயோகித்து ஒரு கடுகளவு வெளிச்சத்தையும் அதிதீவிர வெளிச்சத்தையும் உண்டாக்குகின்றோம். அந்தந்தச் சாதனத்திற்குள் எந்த அளவிற்கு மின்சாரத்தைப் பாய்ச்சுகின்றோமோ அந்த நிலையில் நாம் அதனின் ஒளியைப் பெறுகின்றோம். அதைப் போல
1.மனிதனின் சக்தி என்பது
2.அந்த மின்சாரத்தின் சக்தியைவிட அதிவிரைவு கொண்ட சக்தியாக உள்ளது.
3.ஆனால் இன்றைய மனிதர்கள் தன் சக்தியைத் தானே உணர்ந்து எடுக்கும் நிலை இல்லை.
படிப்பு என்ற நிலையில் பல நூல்களையும் பல கல்வி ஸ்தாபனங்களுக்குச் சென்று படிப்பதுவும் தன் அறிவை மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
இருந்தாலும் அறிவு வளர வேண்டும்...
1.தன் எண்ணத்தில் வீரிய சக்தி பெற வேண்டும்
2.தன் நிலையில் பல உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற
3.இப்படிப்பட்ட எண்ணத்தில் படிப்பை வளர்த்துக் கொள்பவர்கள் மிகவும் குறைவு.
படிப்பதனால் தன் வாழ்க்கை நிலைக்குகந்த செல்வம் பெற்றுச் செல்வச் செழிப்புடன் வாழலாம்.
1.உயர்ந்த உத்தியோகம் கிடைக்கும்
2.உன்னத நிலை பெற்று புகழ்ந்த நிலையில் வாழலாம் என்ற
3.இந்த ஆசாபாசத்துடன் தான் இன்றைய பாட நிலையும் படிக்கும் நிலையும்
4.கல்வி கற்பவருக்கும்... கல்வி புகட்டுபவருக்குமே... உள்ளது.
அப்படி வாழ்ந்திடாமல் அச்சக்தியின் அருளை ஏற்று வாழும் வாழ்க்கையைப் பெற்று வாழ்ந்திடுங்கள்.
இந்த உடல் என்னும் கூட்டை... ஆத்மாவின் நிலை கொண்டு... நம் எண்ணம் என்ற செயலினால்...! இந்த உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களை ஆற்றல் மிக்கதாக ஆக்கி
1.இந்த உலகம் அனைத்திலும் உள்ள சக்தியைக் கண்டறியும் ஆற்றலும்
2.இந்த உடலையே நாம் பறக்கும் நிலைப்படுத்திடவும்
3.எந்த நிலைக்கும் இந்த உடலை நாம் ஈர்த்து அச்சக்தியின் அருளைப் பெற்று
4.இந்த உலகில் உள்ள மக்களுக்குப் பல உண்மைகளை உணர்த்திட முடியும்.
உங்களை நீங்கள் நம்புங்கள்...!