ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 26, 2024

எல்லாவற்றுக்கும் காரணம் சந்தர்ப்பம் தான் (“தலைவிதி” அல்ல)

எல்லாவற்றுக்கும் காரணம் சந்தர்ப்பம் தான் (“தலைவிதி” அல்ல) 


உதாரணமாக “ஒரு வேலையின் காரணமாக நடந்து செல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் அப்போது
1.அதே உணர்வை எடுத்துச் செல்லப்படும் போது
2.அதிகமான நேரத்தைச் செலுத்திச் சென்றால் போகும் பாதையில் கீழே போகும் வாய்க்கால் தெரிவதில்லை.
 
காரணம்…
1.உங்கள் நினைவு அங்கிருக்கிறது… பரந்த மனதுடன் பார்ப்பதில்லை.
2.குறி ஒன்றாகச் செல்லப்படும் பொழுது தவறி அந்த பள்ளம் தெரியாது இடறிக் கீழே விழுந்து விடுகின்றோம்.
 
ஆனால் நாம் தவறு செய்யவில்லை சந்தர்ப்பம் அந்தச் சூழ்நிலையை  நமக்கு உருவாக்கி விடுகின்றது. அதைத் “தலைவிதி என்று சொல்வதற்கு இல்லை.
 
சந்தர்ப்பம் சூழ்நிலையை அது இப்படி மாற்றுகின்றது
1.இதனால் தோஷம் வந்தது அதனால் தோஷம் வந்தது என்று இல்லாதபடி
2.நாம் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் (அது தான் தோஷம்) இப்படி ஆகிவிடுகிறது.
 
இதை விடுத்து விட்டு தோஷத்தை நிவர்த்தி செய்ய எதை எதையோ செய்ய வேண்டும் என்பது இல்லை. எல்லாம் சந்தர்ப்பம் தான்…”
 
ஒரு சமயம் இது போன்ற ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டால் பதிவாகி விடுகின்றது.
1.அப்புறம் எங்கே சென்றாலும் அதற்குப் பின் கீழே பார்த்துத் தான்  நடக்கச் சொல்லும்.
2.ஏனென்றால் அந்த அதிர்ச்சி ந்த உணர்ச்சிகளை ஊட்டும்.
 
அதே சமயத்தில் வீடுகளில் உள்ள தரைகள் எல்லாம் டைல்ஸ் போட்டு பாலிஷ் செய்து வைத்திருக்கின்றோம். கொஞ்சம் போல் ஈரமான காலாக இருந்தால் சறுக்… என்று வழுக்கி விடுகின்றது.
 
காரணம்… குளித்து விட்டு வரும் போது வேறு எண்ணத்துடன் தான் வருகின்றோம். வழுக்கும் பொழுது சுதாரித்துக் கொண்டால் கீழே அடிபடாது தப்பிக்கலாம் வழுக்கிய பின் அப்படியே உட்கார்ந்து பழகி விட்டால் ஒன்றும் இல்லை.
 
வழுக்கும் போது அதைக் கண்ட்ரோல் செய்ய வேண்டும் என்று முயற்சி செய்தால் “டப்…” என்று கீழே விழுந்து பின்னாடி அல்லது தலையில் அடிபட்டு விடுகின்றது. முடியாதவர்களாக இருந்தால் எலும்பு கூட நொறுங்கி விடுகின்றது.
 
இதுவும் சந்தர்ப்பம் தான்… எல்லாமே சந்தர்ப்பத்தால் நிகழக் கூடியது தான்.
 
இந்த மாதிரி ஒருவர் கீழே விழுகிறார் என்று பார்த்து விட்டோம் என்றால்… நம்மை அறியாமலே அடுத்து அது வேலை செய்யும். உங்கள் உணர்வுகள் ஒன்றைப் பார்த்து விட்டால் அது பதிவாகி அதன் நிலையிலேயே நம்மை இயக்கும்.
 
ஆகவே…
1.எல்லாமே சந்தர்ப்பத்தால் தான் என்ற நிலையை நாம் உணர்தல் வேண்டும்.
2.உலகம் உருவானதும் சந்தர்ப்பம் தான் உலகம் மாற்றமடைவதும் சந்தர்ப்பம் தான்
3.மனிதனாவதும் மனிதன் மீண்டும் அடுத்த ரூபமாக உடல் மாறுவதும் எல்லாம் உயிரால் தான் நடக்கிறது என்பதை
4.நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.
 
இது மெய் ஞானம்…!