ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 19, 2024

உயிரின் துடிப்பு அதிகரிக்கும் போது மனிதன் அசுரனாகி விடுவான்

உயிரின் துடிப்பு அதிகரிக்கும் போது மனிதன் அசுரனாகி விடுவான்


நட்சத்திரங்களின் மின் கதிர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி எதிர்மறையாகி மின்னலாகக் கடலில் பாய்ந்தால் கடல் ப்பின் தன்மை அதை அடக்கி மணலாக மாற்றுகின்றது.
 
அதையே மனிதன் யுரேனியமாகப் பிரித்து எடுக்கின்றான். அணுவைப் பிளந்து அணுக்கதிரியக்கங்களை உருவாக்கி அணு உலைகளை உருவாக்கி இயந்திரங்களைத் துரித தியில் வெப்பமாக்கும் நிலைக்குச் செயல்படுத்துகின்றார்கள்.
 
மின்னல் தாக்கும் பொழுது எவ்வளவு தூரம் விரிவடைந்து அது செயல்படுகின்றதோ அதைப் போன்று
1.மனிதன் அணுவைப் பிளந்து அதன் உணர்வைச் சேமித்து
2.ஹைட்ரஜன் என்ற நீரின் அழுத்தத்தைக் கொண்டு அதை அடக்கி
3.மற்ற இயந்திரங்களை உருவாக்கி விஷத்தன்மை ஊட்டி இயக்கினாலும்
4.அதனின் கசிவுகள் வெளிவரும் பொழுது சூரியனுடைய காந்த சக்தி ஆதைக் கவர்ந்து தான் தீரும்.
 
இது பரவப் பரவ நச்சுத்தன்மைகளாக மாறிசிந்திக்கும் தன்மை இழக்கச் செய்து விடும்.
 
அது மட்டுமல்ல…! அணுக்கதிரியக்கத்தின் தன்மை துரிதப்படுத்தி இயக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவச் செய்த பின்
1.அது சூரியனால் மீண்டும் ஈர்க்கப்பட்டு அதனுள் சென்ற பின் கொதிகலனாக மாறி அது வெடிக்கின்றது.
2.பூமிக்குள் எப்படி நிலநடுக்கம் ஆகின்றதோ அது போன்று சூரியனுக்குள் இத்தகைய நிலைகள் வெளிப்படுத்தும் நிலைகளும் வந்துவிட்டது.
 
காரணம் சூரியன் இயற்கையாகக் கவரும் விஷத் தன்மைகளும் மனிதன் செயற்கையாக உருவாக்கிய கதிரியக்கப் பொறிகள் இரண்டும் மோதும் போது
1.எலக்ட்ரிக் அதிகமாகி பொறிகளாக உருவாகி
2.கொதிகலனாகிக் காந்தப் புயல்களாக வீசுகின்றது.
 
ஒரு மேக்னட்டை அதிகமாக்கிச் சுழற்றும் போது காந்தம் அதிகமாகி மின் உற்பத்தி அதிகமானால் அது அதனுடன் பொருத்தப்பட்டுள்ள வயர்களைக் கருக்குகின்றது... அதில் இயக்கக்கூடிய மோட்டார்களையும் ஃபுயூஸ் ஆக்கிவிடுகின்றது.
 
இதைப் போன்று நம்மை இயக்கக்கூடிய உயிரின் தன்மையும்
1.எலக்ட்ரானிக்காக உற்பத்தி ஆகி கொண்டிருக்கும் உயிரின் துடிப்பு அதிகமானால்
2.நம் உடலுக்குள் அதன் தொடர் கொண்டு இயக்கும் அணுக்களின் நிலையும் பாய்ச்சலாகிச் சிந்தனைகள் இழக்கப்பட்டு
3.இந்த உணர்வின் தன்மை அதீத நிலைகள் கொண்டு நாம் சிந்திக்கும் செயலிழக்கப்பட்டு
4.ஆதிகாலத்தில் ஒன்றை ஒன்று கொன்று எப்படிப் புசித்து வாழ்ந்தார்களோ
5.இதைப் போன்று அசுர உணர் கொண்டு செயல்படும் நிலையாக வந்துவிடும்.
 
ஆப்பிரிக்கா நாடுகளில் இன்றும் மனிதனுக்கு மனிதன் கொன்று புசித்திடும் நிலையும்… இறந்த மனிதனை உணவாக உட்கொள்ளும் அநாகரீக நிலைகளாக அங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையும் உண்டு.
 
அது போல் மக்கள் வாழும் காட்டுப் பகுதிகளிலும் மலைப்பகுதிகளில் சில இடங்களில் இத்தகைய மனிதனைப் புசிக்கும் நிலைகள் உண்டு.
1.நகரப் பகுதிகளில் விஞ்ஞான அறிவு வளர்ந்து இருந்தாலும் இதனுடைய வளர்ச்சி அங்கே சுருங்கி இருந்தாலும்
2.உலகம் முழுவதும் பரவும் நிலை மனிதனுக்கு மனிதன் கொன்று புசிக்கும் நிலை வந்துவிட்டது.
 
உணர்வின் அதிர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது எலெக்ட்ரிக் என்ற எர்த் நிலையில் வரப்படும் பொழுது எலக்ட்ரானிக் என்று நமக்குள் இயக்கும் உணர்வுகள் செயலிழக்கத் தொடங்கிவிடும்.
 
அதே போல் விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்கப்பட்ட எலக்ட்ரானிக் கருவிகளும் திசை மாறிக் கணக்கீடுகளை தப்பாக இயக்கும்.
 
அதாவது… ஒவ்வொரு நாட்டிலும் அணுகுண்டுகளையும் மற்ற ஆயுதங்களையும் கம்ப்யூட்டரால் கண்கானிக்கப்பட்டுப் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்.
 
வெப்பங்கள் தாக்காது இருப்பதற்காக கட்டுப்படுத்தி வைத்துள்ளார்கள் மின்னலோ மற்ற இயற்கையினுடைய சீற்றங்களும் தாக்காதபடி பாதுகாப்பாக வைத்துள்ளார்கள்.
 
கால நிலைகள் உணர்ந்து அத்தனை வெடிகுண்டுகளையும் பாதுகாக்கும் கம்ப்யூட்டரும்
1.மாறுபட்ட நிலை கொண்டு சிதைவுண்டால் புதைத்து வைத்திருக்கும் குண்டெல்லாம் வெடிக்கும் நிலைக்கு வந்துவிடும்.
2.வெடித்து விட்டால் உலகம் முழுமைக்குமே விஷத்தின் தன்மைகள் பரவிவிடும்.
3.மனிதர்களுக்குள் இது ஊடுருவினால் உருவம் இருக்கும் ஆனால் அவருடைய சிந்தனைகள் குலைந்து விடும் உடலை மாற்றிவிடும்
 
அது பரிசுத்தமாக எண்ணிலடங்காத வருடங்கள் ஆகிவிடும்.
 
த்தகைய சூழ்நிலையில் தான் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆகவே இந்த உடலில் நல்ல நினைவிருக்கும் பொழுதே நாம் எதைப் பெற வேண்டும் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.
 
நான் சொல்வது வெறும் சொல்லாகவோ எளிதாகவோ தெரியலாம். யாம் ஏற்கனவே சொன்னது அனைத்துமே என்று விஞ்ஞானிகள் நிரூபித்துக் கொண்டுதான் உள்ளார்கள்.
 
சூரியனுக்குள் எரிமலைகள் உருவாகும் என்று முன்பே சொல்லியிருந்தோம். இப்போது அடிக்கடி எரிமலைகள் சூரியனில் உருவாகி அது கக்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.
 
இது பரவப்ரவ பூமியில் இயங்கக்கூடிய கம்ப்யூட்டர்கள் இயங்காத நிலையில் ஆகிவிடும்.
1.அதைப் போன்று தான் மனிதனுடைய உணர்வின் எண்ணங்கள்.
2.ணர்வுகள் அழுத்தம் அதிகமானால் மனிதனுடைய செயல்கள் மாற்றம் அடைந்து விடும்.
 
உயிர் எலக்ட்ரிக் நாம் எடுக்கும் உணர்வுகள் அனைத்தும் எலக்ட்ரானிக் ஜீவ அணுக்களாக மாற்றுகின்றதுஅந்த உணர்வின் செயலாகத் தான் கம்ப்யூட்டர் இயந்திரம்  இயக்குகின்றது உணர்வின் உணர்ச்சிகள் அதன் வழியே இயக்குகின்றது
 
ஆகவே சற்று சிந்தித்துப் பாருங்கள்…!
 
1.நல்ல நினைவு இருக்கும் போதே அருள் மகரிஷிகள் உணர்வைப் பற்று கொள்ளுங்கள்.
2.பகைமை உணர்வுகளை அகற்றிப் பழகுங்கள்
3.அசுர உணர்வுகள் பரவாது அருள் ஞானிகள் உணர்வு கொண்டு நம்மை பாதுகாத்திடும் நிலையாகச் செயல்படுத்த வேண்டும்.
 
துருவ நட்சத்திரம் இதையெல்லாம் வென்றது. அதை எடுத்து நமக்குள் வளர்த்து இந்த உலகம் முழுவதும் பரவச் செய்து எல்லோரையும் காக்கக்கூடிய சக்தியாக நாம் செயல்படுத்துவோம்.
 
ஆரம்பத்திலே சூரியனைப் பார்த்து தியானிக்கும்படி சொல்லி இருந்தோம். ஆனால் சூரியன் பாடைந்து அதற்குள் எரிமலைகள் உருவாகத் தொடங்கும் பொழுது அதை நிறுத்தியாரும் சூரியனைப் பார்க்க வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்
 
ஏனென்றால் அதில் உருவாக்கும் கசிவுகளை நாம் நுகர்ந்தால் அசுர உணர்வு நம்மையும் இயக்கிவிடும்.னால் இதையெல்லாம் வென்றது துருவ நட்சத்திரம்
1.ந்த துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தான் இப்பொழுது எடுக்க உங்களுக்கு பயிற்சி கொடுக்கின்றோம்
2.அதை எடுத்து வளர்த்து அனைவரையும் காத்திடும் சக்தியாக நீங்கள் செயல்படுத்துங்கள்.