ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 24, 2019

குறைகளை நீக்கும் பயிற்சி

(1) குறைகள் நம் வாழ்க்கையில் எப்படியெல்லாம் வருகின்றது...?

அடிக்கடி நாம் என்ன செய்கிறோம்...? இந்த வாழ்க்கையில் நாம் என்னதான் வைத்திருந்தாலும், குறைகள் வருகின்றது.  இந்தக் குறைகளை நீக்க மனம் பலம் தேவை.

1.நமக்குள் இன்னொரு சக்தி ஆட்டிப்படைக்கிறது.
2.அதற்குச் சாப்பாடு தேவை. 

நீங்கள் வேப்ப மரத்தில் விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால், அதுதான் அதற்குத் தேவை. ரோஜாப் பூவைக் கொண்டு கொடுத்தால் அது சாப்பிடுமா என்றால் இல்லை. அதற்கு அது எதிரி.

அதே மாதிரி செடி கொடிகள் ஈர்ப்பில் உள்ளது. போல் அதே குணத்தின் தன்மை கொண்டோர் - அதை ஏற்றுக் கொள்ளாது இப்படி நம் வாழ்க்கையில் இதே போல் நிலை உருவாக்கி நம்மை உருமாற்றிக் கொண்டே இருக்கிறது. மனிதன் ஆனபின். நமது எல்லை எது...? இதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்.

நாம் பிறரைப் பற்றி என்ன செய்வோம்...? நாம் நன்றாக உள்ளோம்...! என்று எண்ணிக் கொண்டு பிறரைப் பற்றிக் குறை கூறுபவர்களெல்லாம்
1.அந்தக் குறையைச் சேர்த்து எடுத்துக் கொண்டபின்,
2.அவர்கள் செத்தார்கள் என்றால் இவர்கள் உடலுக்குத்தான் வருவார்கள் என்று
3.தெரியாமலேயே இருக்கிறார்கள்.

இவர்கள் உடலில் எந்த எந்தக் குறையைப் பேசுகின்றார்களோ அந்தக் குறையை வளர்க்கும். இவர்களுக்கு அந்த கஷ்டத்தைதான் உருவாக்கும் 
1.எங்கு போனாலும் தப்ப முடியாது. உயிரின் வேலை அதுதான்.
2.கீதையில் “நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகிறாய்" என்று தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

(2) குறையைப் பேசுபவர்களின் நிலை என்ன?

இதைக் கேட்டவர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள்..?

நாம் ஏற்கனவே பதிவு செய்த நிலைகளை எடுத்து, குறைகளை வளர்க்கத் தெரிகிறது. குறைகளைத் துடைக்கத் தெரியவில்லை.

குறைகளைத் துடைக்கத் தெரியவேண்டும். துடைப்பதற்குத்தான் ஆத்மசுத்தி என்ற ஆயுத்தைக் கொடுத்திருக்கிறேன். அதை நாம் பயன்படுத்துகிறோமா? இல்லை. பயன்படுத்த வேண்டும்.

இந்த உணர்வுகள் நம்மை இயக்குகிறது. அதற்காகத்தான் யாம் ஒவ்வொரு நிமிடத்திலேயும் சொல்லி வருகின்றோம்.

1.சாமி (ஞானகுரு) சொல்கிறார்... அவருக்கென்ன...?
2.குருநாதர் அவருக்குச் சக்தி கொடுத்திருக்கிறார்.
3.அதனால் அவரது நிலைகள் சரியாக இருக்கிறது என்று இப்படி எண்ணுகிறார்கள்.

ஆனால் பெண்கள் மத்தியில் கொஞ்சம் குறைகள் வந்தால் அதைத் தாங்காது, குறைகளை எண்ணி குறைகளை அடுத்தாற்போல் வளர்ப்பார்கள். அவர்கள் அதிகமாக வளர்ப்பார்கள்.

மீண்டும் என்ன செய்வார்கள்...? அலுங்காமல் அடுத்தவரிடம் குறையைப் பேசுவார்கள். இதை அவர்கள் கேட்டார்கள் என்றால் இந்தக் குறைகள் அப்படியே விஷம் போல அங்கே வரும்.

கொஞ்சம் பாலில் பாதாம்கீர் எல்லாம் போட்டுக் கடைசியில் விஷத்தைக் கொஞ்சம் ஊற்றி விட்டோம் என்றால் எல்லாவற்றிலும் இந்த விஷம் கலந்துவிடும். பாதாம் கீரின் சக்தியை நீங்கள் பார்க்க முடியாது. ஏனென்றால் அந்த அளவில் பக்தியில் வந்துள்ளோம்.

ஆடாகவும், மாடாகவும் இருக்கும்போது தன்னை விட வலு உள்ளதைத் தியானித்தோம். நரியைப் பார்த்து அதனிடமிருந்து தப்பிக்க எண்ணி, நரியாகப் பிறக்கிறோம்.

புலியைப் பார்க்கும்போது புலியாகப் பிறக்கிறோம். அதைக் காட்டிலும் மோசமான பாம்பு கிடைத்து விட்டது என்றால் - ஆடாக இருக்கிறோம் - அந்தப் பாம்பை நினைத்து அந்த விஷத்தை நினைத்தால் பாம்பாகப் போகிறோம்.

இப்படி உணர்வுகள் எதன் தன்மையாகிறதோ,
1.ஆடு நரியாகவும் போகிறது புலியாகவும் போகிறது பாம்பாகவும் போகிறது.
2.கடைசியில் தரையில் ஊர்ந்தும் போகிறது. அதைக் காப்பாற்றிக் கொள்கிறது.
3.சந்தர்ப்பத்தால் இவையெல்லாம் உருவாகி வருகிறது.

இதையெல்லாம் உங்களிடம் பல தடவை சொல்லி இருக்கிறேன். நாம் தியானத்தில் வந்தபின் நமது அடுத்த எல்லை எது?

(3) அகஸ்தியனைப் போன்று பிறரை உயர்த்திடும் எண்ணம் வேண்டும்
அகத்தியனைப் பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.
1.இந்த வாழ்க்கையை எல்லாம் வென்றான்.
2.நம் பூமி நுகரும் பாதையை எண்ணினான்.
3.அது இங்கு தாவர இனங்களாக மாற்றுகிறது.
4.தாவர இனத்தை உயிரினங்கள் சாப்பிடுகிறது. என்று தெரிந்தான்.
5.தமக்கு எது வேண்டும் என்று கணவன் - மனைவி ஒன்றாகச் சேர்ந்தார்கள்.

அகஸ்தியன், தான் பெற்ற சக்தி மனைவியும் பெறவேண்டும் என்று எண்ணினான். அகஸ்தியன் துருவன் ஆனான். அவன் துருவ வழியில் கண்ட நிலைகளைச் சொன்னான். இந்த உணர்வு அங்கு வளர்ந்தது. அந்த உணர்வின் சக்தி அவர்களிடம் பெற்றது. அது வளர்ந்து கொண்டே வந்தது.

அகஸ்தியனின் மனைவி என்ன செய்கிறது..? தன் கணவர் உயர்ந்த சக்தி பெறவேண்டும். தானும், அவர் பெற்ற உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும். என்று எண்ணுகின்றது மனைவி.

மனைவி, உயர்ந்த நிலை பெறவேண்டும் அது என் வழியில் இருக்க வேண்டும் என்று அகஸ்தியன் எண்ணுகின்றான்.

இதுவெல்லாம் இரண்டு பேரும் சேர்த்துத் தன் பார்வையில் பிள்ளைகள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்.
1.நம் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்.
2.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று
3.அந்த உணர்வின் எண்ணங்களைக் கொண்டு வந்தார்கள்.

அந்த நல்ல எண்ணம் எந்தத் துருவத்தை நுகர்ந்தார்களோ அங்கே போய் என்றும் பதினாறு என்று ஏகாந்தமாக பேரானந்தப் பெருநிலை பெற்று மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

நாம் அனைவரும் அவர்கள் வழியில் சென்று, பிறவியில்லா நிலையை அடைவோம். மற்றவர்களையும் பெறச் செய்வோம்.