ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 22, 2019

வேதனைப்படாமல் உடலை விட்டு உயிரை ஞானிகள் எப்படிப் பிரித்தார்கள்...! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


1.தன்னையே தான் அறிந்து உணரும் செயல்பாட்டில்
2,அண்டத்தையே அறிந்து கொண்டிடும் அந்தத் திறனில்
3.இந்தப் பிண்டத்தையும் அறிந்து கொள்ள மனித மன ஞான எண்ண வழிச் செயல் முறையின் முயற்சியே
4.மகரிஷிகள் அருள் உணர்வுடன் ஒன்றி சக்தியளித்துச் சக்தி பெற்றிடும் சூட்சமத்தில்
5.தன் ஆன்மா வீரிய வளர்ச்சி பெற்று உயர் ஞானம் கொண்டிடும் பக்குவத்திற்கு
6.இந்தச் சரீரத்தின் (எலும்புகள்) மூலம் சேமிக்கும் சேமிப்பு அவசியமாகும்.

மகரிஷிகளின் ஆற்றலை ஈர்த்துச் செயல் கொள்ளும் உடல் உறுப்புகளில் “எலும்புகளின் அமில குண சக்தி வளர்ச்சியின் முதிர்வு...!” ஒரு பாதுகாப்புக் கவசமாகச் செயல்படுகின்றது.

பிராணிகளில் ஊர்வனவாக இருக்கும் நத்தை, ஆமை, சிப்பி, சங்கு இத்தகைய உயிர்த் தொகைகள் தனது உயிர்ச் சக்தி வளர்ச்சிக்கு ஆயுட்காலம் எப்படி உள்ளது...?

உருவின் செயல் சிறு வடிவில் இருக்கும் சங்கு
1.ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீரின் சக்தியில் வளர்கிறது.
2.தன் வளர்ச்சிக்குகந்த சுவாச அமில குணத் தன்மைகளை ஆகாரமாக ஈர்த்திடும் நிலையில்
3.”பரணி நட்சத்திரத்தின்...” சக்தியையும் சேமித்து வளர்ச்சிப்படுத்திக் கொள்கின்றன.

மனித உடல் வளர்ச்சி தாயின் கருவிலே உருக் கொள்ளும் நிலையில் சரீரமாகி வெளியில் வந்து தன் வாழ்க்கையில் உலகோதய நடை முறைக்கு ஆற்றல் கொண்டிடும் பக்குவமே தாயின் கருவில் சிசுவாக இருக்கும் பொழுது பெறும் “பரணி நட்சத்திரத்தின்...” ஆதிக்க வலுவின் மூலம் கிடைக்கும் எலும்புகளின் வளர்ச்சி தான்.

ஆகவே உயிர் சக்தியின் வலுவுக்கு வலுக் கொண்டிடும் சேமிப்பாகப் பரணி நட்சத்திரத்தின் அமில குண ஆதிக்க எலும்புகளில் சத்தாகப் பேராற்றல் கொண்டிடும் பக்குவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

1.நான் (ஈஸ்வரபட்டர்) சுட்டிக் காட்டும் இந்தத் தியான வளர்ப்பின் மூலம்
2.எலும்பின் வீரிய குண விரியத்தை உணர்ந்து
3.சுண்ணம் என்றிட்ட அமில குணங்கள் அடர்வு கொண்டு
4.தன் வளர்ச்சியின் சிறப்பிடத்தைப் பெறும் பொழுது
5.இருபத்தியேழு நட்சத்திரங்களின் ஒளியையும் சேமிக்கும் சக்தியாக அந்த எலும்புகள் செயல்படும்.

சரீரம் தன் வினைப்பயனை அனுபவிக்கும் பொழுது உடல் நலம் குன்றி... உயிர்ச் சக்தி இந்தக் கூட்டினை விட்டுப் பறக்கும் பொழுது... “சரீரம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு யார் மூல காரணம்...?” வேதனைப்படாமல் எப்படி உடலை விட்டுப் பிரிவது...?

1.நம்மை நாம் உணர்ந்து கொண்டு
2.நல்வினைப் பயனாக ஆக்கச் செயலுக்குண்டான எண்ணம் கொண்டு செயல்படும் பொழுது
3.உடலில் உள்ள எலும்புகள் மகரிஷிகள் பெற்ற ஒளி காந்த சேமிப்பைப் பெற்றிருக்கும் பொழுது
4.மூலாதாரம் தொடங்கி எழும் வீரியச் சக்தி முதுகுத் தண்டுவடம் வழிப்போந்து நெற்றிப் பொட்டை அணுகித் தாக்கி
5.உயிர் பறிக்கும் அந்தச் செயலை சரீர அவஸ்தை இன்றி எந்தவிதத் தடங்கலும் இன்றி உயிரை வெளியேற்றலாம்.
6.ஞானிகள் கபாலம் மூலம் தன் உயிர் சக்தியை வெளியேற்றுவர்.

மனித உடலை அவஸ்தையிலிருந்து காப்பவைகள் எலும்புகளின் தொடர்பே. இருந்தாலும் அந்த எலும்புகளில் முற்றிய நோய் இருந்தால் சரீரத்தில் குறைவுபட்டிருக்கும் பரணியின் அமில குணத்தை கொங்கணவ மாமகரிஷியை எண்ணி ஈர்த்துத் தியானிப்பதன் மூலம் அதைச் சொஸ்தப்படுத்த முடியும்.

1.பரணி நட்சத்திரத்தை எண்ணி ஈர்த்திடும் பொழுதே
2.இந்தத் தொடரினை வழி காட்டிய கொங்கணவ மாமகரிஷியையும் எண்ணி
3.சரீரக் கட்டளைக் கேந்திரத்தில் செயல் கொண்டிடும் கார்த்திகை நட்சத்திரத்தையும் எண்ணி
4.ரச மூல அமிலச் சுக்கிரனையும் (வியாழன்) எண்ணி
5.இந்த முத்தொடரையும் சூரியச் சமைப்புடன் பெற்றிட்டால் எலும்புகளின் வலுக் கூடும்.