ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 16, 2019

ஞானிகளின் அருள் வாக்கை உங்களுக்குக் கொடுக்கின்றோம்


மணிக்கணக்கில் யாம் (ஞானகுரு) ஏன் பேசுகின்றோம்..? எதற்குப் பேசுகின்றோம்...? என்றால் நீங்கள் தியானமிருந்து ஜெபம் இருந்து எடுக்க முடியவில்லை. உங்களை அறியாமல் உங்கள் உடலில் எத்தனையோ உணர்வுகள் சங்கடம் சலிப்புபட்டுக் கொண்டு இருக்கின்றீர்கள்.

இவை எல்லாவற்றையும் நிவர்த்தி பண்ணுவதற்குத்தான் இவ்வாறு உபதேசித்து ஜெபித்து அந்த ஞானியின் அருளை எடுத்துக் கொடுக்கும்போது அந்த உணர்வுடன் கலந்து
1.அவர்களது வாக்கை உங்களிடம் கொஞ்சம் கொஞ்சமாகச் செலுத்தி
2.உங்களை அறியாமையில் இருந்து விடுபடுவதற்குச் செய்கிறோம்.

ஒவ்வொரு நிமிடத்திலும் எவ்வளவோ இடைஞ்சல் வந்து கொண்டே இருக்கின்றது. உங்களிடமிருந்துதானே சக்தியை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் இடத்திற்கு இடம் உணர்வுகள் மாறும் பொழுது உணர்வுகள் மாறுகிறது.

இதிலிருந்தெல்லாம் தப்புவதற்குத்தான் யாம் மணிக்கணக்கில் உபதேசம் கொடுக்கிறோம்.

இன்று நாம் தவறே செய்யவில்லை என்றாலும் மூன்றாவது தலை முறையில் தவறு செய்திருந்தாலும் நம் உடலில் வந்தால் இன்று ஆட்டிப்படைத்துவிடும். அதைப் போக்குவதற்கு நாம் நல்ல வாக்கைப் பெற வேண்டும்.

இரண்டு பேர் திட்டினார்களென்றால் அதுவும் வாக்குதான். ஒன்றுமே இல்லாது அடிக்கடி வேதனையுடன் இருக்கிறான்ரொம்பக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறான்… “நீ உருப்படுவாயாடா...என்று நச்சுப்பல் விழுந்து விட்டால், அதிலிருந்து தப்பிப்பதற்கு முடியாது.

யாம் (ஞானகுரு) இவ்வளவு காலம் தவமிருந்து நன்றாக ஆகிப் போகும்...!” என்று சொன்னாலும் அது உங்களுக்குள் விளைவதற்கு நாளாகும்.

1.நச்சுப்பல்காரர்கள்உருப்படுவியா...?என்று சொன்னால் அந்த நிமிடத்திலிருந்து அந்த நினைவு வந்து கொண்டேயிருக்கும்.
2.எந்த வேலையைச் செய்தாலும் தொல்லைகள் வந்து கொண்டேயிருக்கும்.
3.அது வேகமாக வேலை செய்யும்.

யாம் கஷ்டப்பட்டுக் காடு மேடெல்லாம் சுற்றிக் கொண்டு வந்தோம். கஷ்டமான நிலைகளிலிருந்து நன்றாக ஆக வேண்டும் என்ற வாக்குக் கொடுத்தாலும் கூட இதை நிறைவேற்றுவதற்குக் கொடுத்த அன்றே கொஞ்சம் வேலை செய்யும். கொஞ்ச நாட்கள் இருக்கும். அதற்குப்பின் மங்கிப் போகும்.

இந்த நச்சுப்பல்காரர் கொடுத்தது இந்த விஷம் வளர்ந்தவுடன் கிடு...கிடுவென்று போய்க் கொண்டிருக்கும். குறையவே குறையாது. அதிகமாகிக் கொண்டே போகும்.

1.யாம் ஒரு தரம் நல்ல வாக்குக் கொடுத்தால்
2.“ஆகா சாமி கொடுத்தார், நிம்மதியாகிவிட்டோம்என்பார்கள்.
3.அடுத்து சுதாரித்துக் கொண்டால் அந்த நல்லதைக் கொஞ்சம் நேரம் காப்பாற்ற முடியும்.

ஆனால் நச்சுப்பல்காரன் சொன்னால் உடனடியாக வேலை செய்கிறது. இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நிமிடத்திலும் தன்னைக் காக்க நல் நிலைகளைச் செய்ய வேண்டும்.

ஏனென்றால் யாம் உங்களுடன் ஒட்டிச் சாதாரண நிலைகளில் வந்து கொண்டிருக்கின்றோம் என்றால் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடன் சகஜமான நிலைகளில் யாம் தாய்ப் பாசத்துடன் வருகிறோம்.
1.உங்களைத் தாயாக எண்ணி குழந்தையினுடைய பாசத்தில் இப்படி அணுகி வருகிறோம்.
2.ஆனால் செயலாக்கும் பொழுது, தாயாக இருக்கிறோம்.
3.குழந்தை திட்டிவிட்டால், தாய் என்ன செய்யும்..? அந்த இடத்தில் தாயாக இருக்கிறோம்.

நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அந்த இடத்தில் குழந்தையாக அணுகி வருகிறோம். குழந்தையாக எண்ணி, உங்களை உயர்த்திப் பார்க்கும் பொழுது, மகிழ்ச்சியை அங்கே ஊட்ட வேண்டும்.

இந்த இரண்டு நிலைகளைத் தான் குருநாதர் சொன்னார். மனிதனுடைய வாழ்க்கையில் நாம் இதைச் செய்ய வேண்டும். அதைத்தான் இங்கே செயல்படுத்துகிறோம்.