ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 10, 2019

வீரத் திருநாள் என்பது எது...? வீரத்தையும் தீரத்தையும் எதிலே காட்ட வேண்டும்...?


சூரியனுக்காக வேண்டிப் பொங்கல் வைக்கிறோம், வீட்டில் வேப்பிலையும் பூளைப்பூவும் வைத்து நாம் எல்லோரும் சாமியை வரவேற்கிறோம்.
1.அதாவது வேப்பிலையும் பூளைப்பூவும் வைத்தால் தீமைகள் வராது...
2.வேப்பிலையை வைத்தால் கசந்த வாழ்க்கை வராதபடி “மாரியாத்தா வந்து காப்பாற்றுவாள்...” என்று சொல்கிறோம்.

மாரியம்மன் கோவிலில் வேப்பிலை இருக்கும். ஆகையால் மாரியாத்தா வந்து நம்மைக் காப்பாற்றுவாள். வேப்பிலையை வைத்துத் தீமைகள் வராது “காப்புக் கட்டிக் கொள்கிறோம்...!” என்கிறார்கள்.

அடுத்த நாள் என்ன செய்வது...? பொங்கலை வைக்கிறோம். அதற்கு அடுத்த நாள் என்ன செய்வது...? ஆடு மாடு எல்லாவற்றையும் வெட்டிச் சாப்பிட வேண்டியது...!

அதாவது ஆடு மாடுகளுக்கெல்லாம் பொங்கலை உணவாகக் கொடுத்து விட்டு அதையே வெட்டிச் சாப்பிடுவது..! அப்பொழுது நம்முடைய சாஸ்திரங்கள் எப்படி இருக்கும்....?

இதோடு மட்டும் அல்ல. மாட்டு பொங்கல் முடிந்து அடுத்த நாள் ஜல்லிக்கட்டு. ஒவ்வொருவரும் தன்னுடைய வீர தீரங்களைக் காட்டுவதும் அதை வேடிக்கை பார்த்து ரசிப்பதும் என்ற நிலையில்
1.ஒருவர் குடலைக் குத்தித் தூக்கி எறிந்த பின்
2.ஆகா...! அந்த மாடு நல்ல மாடு...! என்றும்
3.அந்த மாட்டுக்குச் சொந்தக்காரரைப் பார்த்து “நல்ல உயர்ந்த ரக மாடு வைத்திருக்கிறார்...!” என்று போற்றி துதிப்பதும்
4.இப்படிப்பட்ட வீரிய விளையாட்டுகள் தான் வருகிறது.

ஆனால்
1.வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றினான்
2.அருள் ஒளியைத் தனக்குள் பெருக்கினான்
3.எல்லோரையும் அரவணைத்து வாழும் உணர்வை வலுப்படுத்தினான்.
4.வாழ்வில் வந்த இருளை அகற்றினான்.
5.மெய் பொருளைக் கண்டுணர்ந்தான்.
6.இனி பிறவி இல்லா நிலையை அடையும் அந்தச் சக்தியைப் பெற்றான் என்று
7.ஏதாவது ஒரு சொல்லைப் பார்க்க முடிகிறதா...? கொஞ்சம் சொல்லுங்கள் பார்க்கலாம்...!
8.யாரிடமிருந்தும் அந்தச் சொல் மட்டும் வராது
9.ஜல்லிக்கட்டு வீரியத்தைத் தான் பத்திரிக்கையிலும் டி.வி.யிலும் காட்டச் சொல்லும்.

ஆகவே இதன் வழிகளில்
1.என் தெய்வத்தைக் காக்க அதிலே தீவிரவாதம்.
2.எங்கள் கடவுளைக் காக்கத் தீவிரவாதம்.
3.எங்கள் இனத்தைக் காக்கத் தீவிரவாதம்.
4.என் மதத்தைக் காக்கத் தீவிரவாதம்.
5.என் மொழியைக் காக்கத் தீவிரவாதம்.
6.எங்கள் தெருவைக் காக்கத் தீவிரவாதம்
7.எங்கள் ஊரைக் காக்கத் தீவிரவாதம்.

இப்படித் தான் தீவிரவாதம் என்ற நிலைகளில் விவாதங்களுக்குச் சென்று என் தெருவைக் காக்க வேண்டும் என்றாலும் அடுத்தவனைக் கொல்லும் நிலை தான்...! என் தெய்வத்தைக் காக்க வேண்டும் என்றால் அடுத்தவனைக் கொல்லுவது தான். என் மதத்தை காக்க வேண்டும் என்றால் அடுத்த மதத்தைக் கொல்வது தான்.

இத்தகைய தீவிரவாதங்கள் அதிகரித்து இன்று மனிதனின் உணர்வுகள்  முழுமையாகவே மறைந்து போகும் நிலைகள் உருவாகிவிட்டது.

ஆனால் ஞானிகள் நமக்குச் சொன்னது என்ன...?

1.நாம் அனைவரும் ஒரே மகிழ்ச்சி கொண்டு,
2.ஒவ்வொரு உள்ளங்களில் அறியாது சேர்ந்த அழுக்குகள் நீங்கி
3.மெய்ப் பொருள் காணும் உணர்வுகள் வளரவேண்டும் என்று எல்லோரும் எண்ணினால்
4.இதே சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு பரவுகின்றது.

நாம் அனைவரும் இத்தகைய உணர்வலைகளை நமக்குள் சமைத்து நாம் வெளியிடும் மூச்சலைகளை சூரியனின் காந்த சக்தி கவந்து நமது வீட்டிற்குள்ளும் தெருவிற்குள்ளும் நாடு முழுவதும் படரச் செய்கின்றது. நமது உடலுக்குள்ளும் படர விடுகின்றது.

மகரிஷிகள் அருள் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று நாம் விடும் மூச்சலைகள் அந்த உணர்வை அனைவரும் கூட்டாக எடுக்கும்போது
1.பகைமைகள் அனைத்துமே மறைகின்றது... ஒன்றி வாழும் உணர்வுகள் வளர்கிறது...!
2.ஒருவருக்கொருவர் சந்தர்ப்பத்தால் ஏற்பட்ட வேதனையான நிலைகள் மறைகின்றன.

ஆகவே வாழ்க்கையில் வந்த நஞ்சினை நீக்கி நம்மைச் செயலற்றதாக்கச் செய்யும் எத்தகைய தீய உணர்வுகளையும் மாற்றி அமைப்பதற்குத்தான் மெய் ஞானிகள் வருடத்திற்கு ஒரு நாளாக இதைத் தேர்ந்து எடுத்து நாம் எண்ண வேண்டிய நல் உணர்வை உணர்த்தினார்கள்.