நாம் எல்லோரும்
பாசத்தால் தான் கட்டுப்பட்டு இருக்கிறோம்.
இருந்தாலும் மூதாதையர்கள்
பக்தி மார்க்க நிலைகளிலே அவர்கள் எந்தெந்த தெய்வங்களை வணங்கினார்களோ... சந்தர்ப்பத்தால்
சொந்தபந்தங்களுக்குள் ஒருவருக்கொருவர் பிடிக்கவில்லை என்ற நிலை வரும் பொழுது அந்த
தெய்வத்தின் நிலைகளை எண்ணிச் சாபமிட நேர்கின்றது.
மற்றவர்கள் அதே
தெய்வத்தை வணங்கப்படும் பொழுது அதே உணர்வுகளை இவர்கள் உடலிலும் பதிவு செய்து கொள்கிறார்கள்.
அப்பொழுது அந்த
வம்சா வழிகள் அந்தத் தெய்வத்தை வணங்கி வழிபட்டு வரும் நிலையில் அந்தச் சாபமிட்ட அலைகளும் கொடி வழிகளில் வருகின்றது.
அந்தக் கொடி
வழியின் நிலைகள் இங்கே வந்து இன்று ஒருவருக்கொருவர் எவ்வளவு அன்பையும் பாசத்தையும் செலவு செய்தாலும் நம்மை அறியாமலேயே அந்த
மூதாதையர்கள் இட்ட சாப அலைகளின் நிலைகள் வந்துவிட்டால் பல தீயவினைகள்
வந்துவிடுகின்றது.
குடும்பத்திற்குள்
சென்றாலும் நாம் நிம்மதியாக இருக்க வேண்டுமென்று எண்ணுவோம். இந்த நேரம் (சாபத்தின் நிலை) வந்தவுடன், நம்மையறியாமலேயே வேதனைப்படச் செய்யும்
நிலைகள்தான் திருப்பித் திருப்பி வந்து கொண்டே இருக்கும்.
1.அவ்வாறு வேதனயான
உணர்வுகளை வளர்த்துக் கொண்டால்
2.மகிழ்ச்சி
என்ற எல்லைக்குச் செல்லும் பொழுதெல்லாம் “டமார்...!” என்று சிதறுண்டு போகும்.
3.இப்படி
ஏராளமான குடும்பங்கள் உண்டு.
அப்படி
மகிழ்ச்சியின் வரப்படும் பொழுது சிதறுண்டு போகும் நிலையும் பாசத்தினால்
எல்லோருக்கும் நன்மை செய்தாலும் அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகளாலே கை கால்
குடைச்சல் வரும்.
“ஐயோ.. நான்
எல்லோருக்கும் நல்லதுதானே செய்தேன்…! என் கை கால் எல்லாம்
குடைகிறதே... என் உடலெல்லாம் வலிக்கின்றதே… ஆண்டவன் என்னைச்
சோதித்துக் கொண்டிருக்கிறானே...! என்பார்கள்.
இதைப் போல நாம்
நல்லதைச் செய்தாலும் நல்லதைக் காக்கும் ஆற்றல் இல்லை.
1.அந்த நல்லதைச்
செய்வதற்கு நமக்குள் அந்த நல்லதின் நிலைகள் நிலைத்திருக்க வேண்டும்.
2.ஏனென்றால் நாம்
பாசத்தாலே பிறருடை கஷ்டத்தை நுகர்ந்துதான் (அவருடைய
உணர்வுகளை) நல்லது செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றோம்.
3.ஆனால் அது
நமக்கும் நல்லவைகளாக இருக்க வேண்டும்.
அதற்காக
வேண்டித்தான் அன்று மெய் ஞானிகள் தீமையை நீக்கும் சக்திகளை எடுத்ததைப் போல துருவ
நட்சத்திரத்தை எண்ணி அதிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியை எடுக்கப் பழகிக்
கொடுக்கின்றோம்.
எந்தத் துன்பத்தை
கண்ணுற்றுப் பார்த்தாலும் யாம் சொல்லும் இந்த தியான முறைப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… அது
எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா…! என்று எண்ணி ஏங்கி அந்தச் சக்தியை
உடலுக்குள் எடுத்துக் கூட்டிக் கொண்டாலே
போதுமானது.
எத்தகையை கடுமையான
சாபமாக இருந்தாலும் அதை நீங்கள் மாற்றியமைப்பதற்காகத் தான் இந்த “ஆத்ம சுத்தி” என்ற ஆயுததை உங்களுக்குக்
கொடுக்கின்றேன்.
தீமைகள்
உங்களுக்குள் புகாது உடலுக்குள் வளராது தடுக்கப்படும். ஒளியான உணர்வுகள் உங்கள்
உடலிலே வளரத் தொடங்கும். அது உங்களுக்குப் பாதுகாப்புக் கவசமாக அமையும்.