விஞ்ஞானி வான்வீதியில் எந்தக் கோள் எங்கே
செல்கின்றது என்பதைப் பதிவாக்குகின்றான். கம்ப்யூட்டர் மூலம் ஆயிரம் மடங்கு அதைப் பெருக்குகின்றான்.
பெருக்கிய பின் அந்த உணர்வின் அதிர்வுகளை
எடுத்துக் கொண்ட பின் எந்தக் கோளின் உணர்ச்சியோ அதை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றான்.
அதை நாடாக்களில் பதிவு செய்து ஒரு ராக்கெட்டின்
முகப்பில் வைத்து உந்து விசையால் உந்தச் செய்து விண்ணுக்குச் செலுத்துகின்றான்.
1.வேறு பாதையில் செல்லாதபடி
2.எந்தக் கோளின் உணர்வலைகளைப் பதிவாக்கி
வைத்துள்ளனரோ அந்த அலைகள் வான்வீதியில் வரும் பொழுது
3.அதன் திசைப் பக்கம் அழைத்துச் செல்கிறது.
அந்த உணர்வின் அழுத்தமான பின் ராக்கெட் அதைத்
தொடர்ந்து செல்கின்றது. அந்த உணர்வின் ஒலி அதிர்வுகள் அனைத்தையும் தரை மார்க்கத்தில்
இங்கிருந்து அதை எடுக்கின்றனர்... பார்க்கின்றனர்.
இதைப் போல தான் அன்றைய மெய் ஞானிகள் மனிதனின்
வாழ்க்கையில் நாம் எதைப் பெறவேண்டும்...? பிறவி இல்லா நிலைகள் அடைந்து எப்படி விண்
செல்ல வேண்டும்..? என்ற நிலையைத் தெளிவாக்கினான்.
இதை உணர்த்துவதற்குத்தான் விநாயகர் தத்துவத்தையே
காட்டினார்கள். ஒரு உயிரின் தன்மை பல கோடிச் சரீரங்களை எடுத்து அதிலே வளர்ச்சி அடைந்து
மனிதனாக எப்படி உருவாக்கியது என்றும் அதிலே உணர்த்தினார்கள்.
மேற்கே பார்த்து வைத்து நாம் கிழக்கே பார்க்கும்படி
வைத்து நீர் நிலை இருக்கும் பக்கம் விநாயகரை வைத்தார்கள்.
நாம் சுவாசித்த உணர்வுகள் அனைத்தும் உடலுக்குள்
சென்று கணங்களுக்கு அதிபதியாகிப் பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக வளர்ந்து வந்தோம்.
மனிதனான பின் நாம் உணவுகளை எப்படிச் சுவைமிக்கதாகப்
படைத்து உட்கொள்கிறோம் என்ற உணர்வுகளைக் காட்டி இந்தப் பிள்ளை யார்...? என்று கேள்விகுறி
வைத்துச் சிந்திக்கும்படி செய்கிறார்கள்.
காலை 4 மணியில் இருந்து 6 மணிக்குள் நாம்
குளித்து உடல் அழுக்கைப் போக்குகின்றோம். துணி அழுக்கைப் போக்குகின்றோம். கரை ஏறி வந்த
பின் இந்த விநாயகரை உற்று பார்க்கும்படி நீர் நிலை இருக்கும் இடத்தில் விநாயகரை வைத்தார்கள்
அன்றைய ஞானிகள்.
ஆதி மூலம் என்ற இந்த உயிர் பல பல உணர்வின்
தன்மை தனக்குள் விளைந்து உயிர் ஈசனாக நின்று மனிதனை எப்படி உருவாக்கியது என்று தன்னை
அறிவதற்காக கணங்களுக்கெல்லாம் ஈசா.. “கணேசா...!” என்று நம் உயிரை வணங்கும்படி செய்தார்கள்.
வான இயல் புவியியல் உயிரியல் அடிப்படையில்
பேருண்மைகளை எல்லாம் உணர்ந்து உணர்வுகளை ஒளியாக மாற்றிக் கணவனும் மனைவியும் ஒன்றென
இணைந்து விண்ணுலக ஆற்றலை ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தினை
நினைவாக்கி அதைப் பதிவாக்கி நினைவினை விண்ணை நோக்கி ஏங்கும்படி செய்கின்றார்கள்.
1.இங்கே டி.வி ரேடியோவை அது எந்த ஸ்டேசனோ...
எந்த அலைவரிசையோ அதை வைத்து எப்படிக் கவர்கின்றோமோ
2.அதைப் போல் அந்தத் துருவ நட்சத்திரத்தினைப்
பதிவாக்கி
3.நம் எண்ணத்தால் அதைக் கவரும்படி செய்தார்கள்
ஞானிகள்.
அந்த அகஸ்தியன் தனக்குள் வரும் நஞ்சினை எல்லாம்
அவன் வென்றான். நாமும் அந்த நஞ்சினை வெல்லும் சக்தியைப் பெறுவதற்காக விநாய்கரை வைத்தான்.
காலையில் எழுந்த உடனே அந்தத் துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியிலிருக்கும் உயிரிடம்
வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நம் உடலில் உள்ள இரத்தங்கள் முழுவதிலும்
கலக்கச் செய்ய வேண்டும்.
ஏனென்றால் நாம் காலையில் இருந்து இரவு வரையிலும்
எத்தனையோ பகைமை உணர்வுகளையும் தீமைகளையும் துன்பங்களையும் பார்த்து... கேட்டு நுகர்ந்திருப்போம்.
நுகர்ந்தது அனைத்தும் நம் உறுப்புகளில் அந்த
அணுக்களில் இருக்கும். இரத்தத்தில் இருந்து தான் அந்த உணர்வின் தன்மையை பகிர்ந்து கொள்கின்றது.
அந்த விஷத்தின் தன்மை உடலுக்குள் வராதபடி நல்லதாக்க வேண்டும்.
இராமாயணத்தில் காட்டியிருப்பார்கள். இராமன்
காட்டுக்குள் செல்லும் போது குகனை நண்பன் ஆக்கிக் கொண்டான் என்று.
அதைப் போல அருள் மகரிஷிகளின் உணர்வைத் தனக்குள்
சேர்த்து நம் இரத்தங்களில் கலக்கச் செய்து உடல் முழுவதும் சுழலச் செய்தால் பகைமை உணர்வுகள்
ஈர்க்கும் தன்மை குறைக்கப்பட்டு அனைத்து அணுக்களையும் நண்பனாக்கும் நிலையைக் கொண்டு
வருகின்றது.
இராமாயணத்தின் நிலைகளை நீங்கள் தெரிந்து
கொண்டால் மனிதன் வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்ற உண்மையை உணர முடியும்.
இந்த உடலுக்குப் பின் இனி நாம் எங்கே செல்ல
வேண்டும் என்ற நிலையை அதிலே நிலை நிறுத்திக் காட்டினான் அந்த மெய் ஞானி.