கணவன் மனைவியாக வாழ்பவர்கள் அந்தத் துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில்
உயிரை எண்ணி இருவருமே தியானிக்க வேண்டும். ஏனென்றால் நம் உயிரும் சிவ சக்தியாகத் தான்
வாழ்கின்றது.
கணவன் தான் பெற்ற அந்தச் சக்தியைத் தன் மனைவிக்குக்
கொடுக்க வேண்டும் அதே போல் மனைவி தான் பெற்ற சக்தியைக் கணவனுக்குக் கிடைக்கச் செய்ய
வேண்டும்.
1.ஒருவருக்கொருவர் பெற வேண்டும் என்று இரண்டு
பேருமே இவ்வாறு எண்ண வேண்டும்.
2.உயர்ந்த சக்திகள் பெற வேண்டும் இரண்டு
பேருமே ஏங்கி எடுக்கும் உணர்வுகள் கருவாகின்றது.
இன்றும் பார்க்கலாம்...! சாதாரணமாக மந்திரவாதிகள்
- குடுகுடுப்புக்காரர்கள் இருப்பார்கள். கணவனும் மனைவியும் சேர்ந்து தான் இந்த மந்திரத்தின்
நிலைகளில் செயல்படுத்துவார்கள்.
மந்திரத்தால் கணவனுக்கு ஏதாவது ஆனாலும் உடனே
மனைவி அதை எடுத்து அதைச் சரி செய்யும். அதாவது ஏவல் பில்லி சூனியங்களால் கணவன் தாக்கப்பட்டால்
உடனே மனைவி எடுத்துச் சரி செய்வார்கள்.
இரண்டு பேரும் அந்த மந்திரம் கற்றுக் கொள்ளவில்லை
என்றால் அங்கே ஒன்றும் வேலை ஆகாது. தன் மாமன் மச்சானிடம் கொடுக்க மாட்டார்கள். இது
மந்திரத்தின் செயல்கள்.
இதைப் போன்று தான் அக்காலத்தில் கணவனும்
மனைவியுமாக வாழ்ந்த அகஸ்தியனும் அவர் மனைவியும் பூமியின் துருவத்தை உற்று நோக்கி (வானிலே)
துருவத்தின் வழியாக வரும் உணர்வின் தன்மை இருவருமே தனக்குள் பெற்று வானவியலின் உணர்வையே மேற் கொண்டு பார்க்கும் நிலைகள்
வருகின்றது.
1.இருபத்தியேழு நட்சத்திரத்தின் தன்மையைத்
தனக்குள் கவருகின்றார்கள்.
2.அந்த உணர்வின் வலிமையைப் பெறுகின்றார்கள்.
3.அது மற்ற கோள்களுடன் கலந்து வருவதையும்
அதைச் சூரியன் பெறுவதையும் கணவன் மனைவி இரண்டு பேருமே நுகர்கின்றார்கள்.
அப்படிப் பெற்ற உணர்வுகள் தான் நம் பிரபஞ்சத்தின்
இயக்கத்தை முழுமையாக அறிந்து அதைத் தனக்குள் பெருக்கி வளர்த்து கொண்டார்கள்.
இரண்டு உயிர்களும் இரண்டு உடல்களும் இரண்டு
பேருமே ஒன்றாகச் சேர்க்கப்படும் போது தான் வசிஷ்டரும் அருந்ததியுமாக அவர்கள் வளர்ந்தனர்.
நளாயினியைப் போல ஒருவரை ஒருவர் மதித்து நடந்தனர்.
கணவன் மனைவியை மதித்து நடப்பதும் மனைவி கணவனை
மதித்து நடப்பதும்
1.இந்த இரு உணர்வும் வந்தவுடனே “சத்தியவான்
சாவித்திரி...!”
2.இந்த உயிர் சத்தியமாகின்றது
3.தன்னுள் இணைந்து கொண்ட சக்தி அது உண்மையின்
உணர்வாக ஒளியாக மாறுகின்றது.
4.அதைத் தான் சத்தியவான் சாவித்திரி என்று
சாவித்திரி எமனிடம் இருந்து தன் கணவனை மீட்டினாள் என்று காட்டப்பட்டது.
(இன்று ரொம்பப் பேர் வீட்டிலே பார்க்கலாம்.
சத்தியவான் சாவித்திரி நிறையப் பேர் இருப்பார்கள். ஒருவரை ஒருவர் உதைத்துக் கொண்டு
நீயா...? நானா...? என்ற வகையில். இன்று இதைத் தான் அதிகமாகப் பார்க்க முடிகின்றது.
அகஸ்தியனும் அவன் மனைவியும் பெற்ற நிலைகள் இல்லை)
அகஸ்தியனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றென
இணைத்து இன்னொரு உடலுக்குள் சேராதபடி உணர்வுகளை ஒன்றாக இணைந்து எந்தத் துருவத்தைக்
கூர்மையாக உற்றுப் பார்த்து நுகர்ந்தார்களோ அந்த உணர்வின் தன்மை வலிமை கொண்டு இந்த
உடலை விட்டுச் சென்ற பின் அந்த எல்லையை அடைந்தார்கள்.
நம் பூமிக்கு வரும் உணர்வினை ஒளியாக மாற்றி
ஒளிக் கதிராகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்கள். இது ஒரு குடும்பம். அகஸ்தியனுடைய
தாய் தந்தை அவர் உடலிலே இருந்தார்கள். அவர்களும் அதே ஒளியின் சரீரமாக அவனுடன் இருக்கின்றார்கள்.
அகஸ்தியனைப் பின்பற்றிச் சென்றவர்கள் அவருடைய
ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள். அன்னை தந்தை அரவணைப்பில்
ஒளியாகச் சென்று சப்தரிஷி மண்டலங்களில் இருப்போரும் பல உண்டு.
உடலை விட்டுப் பிரிந்து சென்ற எங்கள் அன்னை
தந்தையரின் உயிரான்மாக்கள் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும். அவர்கள் உடல்
பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் என்று சொன்னவர்கள்
1.அவர்கள் தனித்துச் சென்றாலும் அந்தக் கூட்டமைப்பில்
2.சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்தில் அழியா
ஒளியின் சரீரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
இதைப் பார்க்கலாம்...! அந்தச் சப்தரிஷி மண்டலத்தில்
நம் கண்ணுக்கு புலப்படாத எண்ணிலடங்காத ஒளியான நிலைகள் நிறைய உண்டு.
1.டெலஸ்கோப் (TELESCOPE) வைத்து நீங்கள்
பார்த்தாலும் ஒரு சில தான் தெரியும்.
2.அதைக் காட்டிலும் நுண்ணிய அலைகள் அந்த
காலத்தில் அகஸ்தியன் வாழ்ந்த காலத்தில் சென்றவர்களும் அவன் பின் சென்றவர்களும் பல உண்டு.
சப்தரிஷி மண்டலமே மனிதன் அடைய வேண்டிய கடைசி
எல்லை..!