எண்ணம் கொண்டே பிறப்பிற்கு வரும் உயிரணுக்கள்
சரீர வளர்ச்சி பெற்று உயிராத்மாவாக மனிதன் என்ற அமில காந்தத் தொடரைப் பெற்றுத் தன்னைத்தான் வளர்ச்சிப்படுத்திடும் நிலைக்கு வருகின்றது.
அதனின் தொடரில் பஞ்ச பூதங்களின் கூட்டமைப்பாகச்
செயல்படும் கால கட்டங்களில் அணுக்களாக மேன்மேலும் ஈர்த்தே தோல் தசை நரம்புகள் இரத்தம்
எலும்புகள் மயிர் முதலிய அவயங்கள் வளர்கின்றது.
இவைகளுக்கு ஜீவன் கொடுக்க “ஐந்து கேந்திர நாடிகள்...”
உடலிலே செயல் கொண்டாலும் இவைகளுக்கும் வழி நடத்திடும் கட்டளைக் கேந்திரம் என்று அழைக்கப்படும்
“சிரசின் சூத்திர நாடியாக...!” அனைத்தும் செயல் கொள்கிறது.
இத்தகைய பிறப்பின் செயலில் தன்னை உணர்ந்திடும்
பக்குவத்திற்கு எதை முக்கியமாக்கிடல் வேண்டும்…?
காலம் குறுகியது...! நேரத்தைக் கடமையின்
தொடரில் பெற்றே பயன் கொண்டிடும் ஒவ்வொரு செயலின் நிகழ்வுக்கும் யாம் உரைத்த உரையின்
உட்பொருளை சித்தத்தில் ஊன்றிப்பார்.
பஞ்சலிங்கம் என்பதே மனித சரீரம் தான்...!
தன்னை உணர்ந்திடும் பக்குவத்தில் உயிர் ஆத்ம
முலாம் வலுக் கொள்ளும் செயலுக்கு உடலினுள் அமைந்துள்ள மூலம் மூலாதாரம் நாபி இருதயம்
கண்டம் என்றிட்ட ஐந்து கேந்திர நாடிகள் உண்டு.
அதிலே நாபி நாடியை ஞானிகள் நீரமிலச் சக்தியுடன்
தொடர்பு படுத்திக் காட்டிய தொடரில் எண்ணம் கொண்டு உயிர் ஆக்கத்தினை வளர்ச்சி கொள்ளும்
பக்குவத்திற்கு தியானத்தை வழிமுறையாகப் பெற வேண்டும்.
நம் பூமியின் தொடருக்கும் இதே தன்மைகள் உண்டு.
பூமியின் காந்த ஈர்ப்பின் தொடர்பில் சூரியன்
உள்ளிட்ட மற்ற கோளங்களுடன் தொடர்பு கொண்டு தனக்குள் இயற்கைக் கனி வளங்களைச் சுவாசத்தின்
மூலம் உள் நிறைத்தே வளர்ச்சி பெற்று வருகிறது.
அந்த ஈர்ப்பு நிலைகள் பூமிக்குள் எப்படி
எங்கே உள்ளது...?
கடலினுள் இருந்தே எழுந்து லிங்க வடிவில்
சுயம்பாகக் காந்தப் பாறைக்குள் மரகத வண்ண வடிவாகத் தோன்றிடும் தன்மைகளில் பூமித் தாயின்
அத்தகைய ஈர்ப்பு சக்திகள் செயல்படுகின்றது.
1.சூரியன் ஒளிக்கிரணங்கள் பாய்ந்திடும் செயலிலும்
2.சுழல் வேகம் கொண்டு மேலிருந்து அந்தப்
பாறைகளின் மீது விழும் நீர்ச் சக்தியின் தொடர்பிலும்
3.அதனால் ஏற்படும் “அதீத காந்தப்புலம்..”
4.பூமியின் பல்வேறு இடங்களில் இயற்கையாகச்
செயல் கொள்ளும் இரகசியத் தன்மைகளில்
5.பாரதத் தேசத்தின் தென் கோடியில் மகரிஷிகளால்
சூழப் பெற்ற ஓர் இடம் உண்டு.
பூமியின் கரைப்பிளவுகளில் உள் மறைவாக கடல்
பூமியில் உள் நுழைந்து கடல் பகுதியிலிருந்து காணும் பொழுது வெளியிலே தெரியாதபடி “மரகத
வண்ணப் பஞ்சலிங்கங்கள் உண்டு...!”
கடலினுள் அமைந்த அந்த ஐந்து மரகத லிங்கங்களில்
மையத்தில் அமைந்த லிங்கத்தின் மீதே மலை உச்சியிலிருந்து விழும் நீர் விழுந்து மற்ற
லிங்கங்களின் மீது மோதிடும் செயலில்
1.சூரிய ஒளிக்கதிர்களினால் பற்பல வண்ணங்கள்
ஏற்படும் இடத்தின் காந்தப் புலமாக
2.அந்த இடமே மகரிஷிகளால் சூழப் பெற்றுள்ளது.
மலையின் உச்சியில் சங்கு வடிவமாக அமைந்துள்ள
இயற்கை ஊற்றில் நீர் பீறிட்டு மேலே கிளம்பி கடலினுள் அமையப் பெற்ற மரகத லிங்கம் மீது
விழும் ஊற்று நீரும் தனித்துவத் தன்மை கொண்டது.
யாரும் நெருங்கிடாத வண்ணம் இயற்கையின் அமைப்பில்
மறைபொருளாக உள்ளது.
1.இயற்கை வனப்பால் ஆகாயத்தில் இருந்தும்
காண முடியாது.
2.தரை மார்க்கமாகப் பகலிலும் இருளாகத் தோன்றும்
கானகத்தினுள் விலங்கினங்களைக் கடந்து சென்றாலும் மரத்தில் வாழும் இரு இனத்தவரால் தடுக்கப்படும்
ஓர் சூட்சமம் உள்ளது.
3.ஞானிகள் அறிவர் ஞயம்பட உரைத்தலை.
அரபிக் கடல் தவழும் கேரளத்தின் தென் கோடியில்
மேற்கு மழைத் தொடர்ச்சியில் உள்ளது அந்த இடம்.