ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 30, 2019

தியானத்தின் மூலம் இயற்கையின் படைப்பையே அறிய முடியும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


பஞ்ச பூதங்களை ஆகாயம் காற்று நீர் நெருப்பு நிலம் என்று கூறுகின்றோம். ஆகாயம் என்ற பால்வெளிச் சூட்சமத்தில் பரவிப் படர்ந்துள்ள மற்ற நான்கும் ஒன்றுடன் ஒன்று கூடி
1.காந்தத்துடன் நீரமிலம்
2.காந்தத்துடன் காற்றமிலம்
3.காந்தத்துடன் வெப்பமிலம் என்று
4.இப்படிக் காந்தத்துடன் பிரிதிவியாகும் அமிலங்களின் கலப்பால் பல பல உருவாகின்றன.

கோடானு கோடி நிறங்களாகவும் மணங்களாகவும் அதிலிருந்து  உயிரணுக்கள் ஒன்றுடன் ஒன்று ஈர்ப்பின் குணத் தொடரில் இணைந்து உயிராத்மாவாக பஞ்சபூதத் தத்துவமாக உருவாகின்றது.

மனம்... அறிவு... நினைவின் ஆற்றல்... செயலாக்கத்தின் உந்துதல்... என்று இவை அனைத்துமே எண்ணமாகக் காந்தத்தின் நிறைவாக ஆத்மா என்றிட்ட ஜீவனாகத் தான் ஈர்த்துக் கொண்ட அமில வீரியமாகப் பூமியில் பிறப்பிற்கு வருகின்றது.

ஒவ்வொரு நிமிடமும் புதிய புதிய உயிரணுக்கள் வானத்தில் உதித்துக் கொண்டே தான் உள்ளன.

இருந்தாலும் இந்தப் பூமியுடன் தொடர்பு கொண்டுள்ள “இருபத்தியேழு நட்சத்திர அமிலங்களின்...” நிலைத் தொடர்பு கொண்டு தான் உடல் பெற்றுப் பிறப்பிற்கு வந்திட முடியும்.

1.அண்ட வித்து முட்டையாகப் பிறப்பிற்கு வருகின்ற கரு நிலை உயிரணுக்களும்
2.நீருக்குள் தோன்றிடும் கரு நிலை உயிரணுக்களும்
3.வேர் பகுதியில் தோன்றி கிளைத்தெழும் உயிர் கருக்களும்
4.இந்தப் புவியில் சரீர வியர்வை கொண்டு வாசனைத் தொடர்புடன்
5.இதே தன்மையாக சூரிய வெப்பம் பட்டு உதிக்கும் உயிரணுக்கள் என்றும்
6.பல செயல் நிலைகள் இயற்கையின் கதியில் நடைமுறையில் உள்ளன.
7.உயிரணுக்கள் செயல்படும் தன்மைகளில் உள்ள அனைத்து இரகசிய நிலைகளையும் வகைப்படுத்தியே அளிக்கின்றோம்.

ஜீவ பிம்ப சரீரத்தைக் கொண்டு உயர் ஞான வளர்ச்சிக்குண்டான வழி முறைகளைச் செயல்படுத்திட உடலுக்குள் செயல்படும் உண்மையின் சாரங்களை
1.அந்த மறைக்கப்பட்ட மறை பொருளை
2.அறியச் செய்யும் நிலைக்குத்தான் இதை உணர்த்துகின்றேன்.
3.ஆனால் பாடத்தின் கடினத் தன்மையை விண்டு தருவதில் தான் தாமதம்.

அனைத்தையும் தியானத்தின் வலுவைக் கூட்டியே அறிந்து கொள்ளலாம். ஞானத்தை அறிதலும் அதன் தன்மைகளை உணர்தலும் சிந்தனையில் தெளிதலும் என்ற நிலைக்கு வளர்தல் வேண்டும்.

நாம் எடுக்கும் எண்ணம் நல் எண்ணமாக நல் சுவாசம் கொண்டு தியான வழிதனில் உணர்வுகள் பக்குவப்படுத்தப்பட
1.அதுவே மனத்தின் பக்குவமாக
2.சிந்திக்கும் ஆற்றலை நாம் ஒருமுகப்படுத்திப் பெறவேண்டிய
3.நல் நிலை என்று உணர்தல் வேண்டும்...!