ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவர்களை
நாம் கேட்டறிந்து நுகர்கின்றோம். நமது சிரசின் பாகம் உயிர் இருக்கும் பாகம் ஈஸ்வரலோகமாகின்றது.
நாம் நுகர்ந்தது (சுவாசிப்பது) அனைத்தும் அங்கே தான் ஜீவன் பெறுகிறது.
நுகர்ந்த உணர்வுகள் நம் உடலில் உள்ள இரத்த
நாளங்களில் அது கருவாகப்படும் போது இந்திரலோகமாக மாற்றி விடுகின்றது.
ஏனென்றால் எந்த உணர்வின் தன்மைகளை நாம் நுகர்ந்தோமோ
அதன் உணர்வின் தன்மை கருவாக்கி அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு அந்த வாழ்க்கை வாழச்
செய்கிறது.
காரணம் நோய்வாய்ப்பட்டவரைப் பார்த்து நாம்
பரிவுடன் கேட்டறிந்து அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்கின்றோம். அவரைப் பற்றி எண்ணி
மீண்டும் மீண்டும் அதை நாம் நுகரப்படும் போது அதனின் கருக்கள் நம் உடல்களிலே இந்திரலோகமாக
உரு பெறுகின்றது.
அந்த நோயாளியின் உடலில் எந்த நோயின் அணுக்கள்
உருவாகி அவர் துயரப்பட அது காரணமானதோ அதே உணர்வு கொண்டு நம் உடலிலும் அத்தகைய நோயின்
அணுக்கள் உருவாகத் தொடங்கிவிடுகின்றது.
நாம் இப்படிப் பலருடைய நோய்களின் உணர்வுகளைக்
கவர நேர்ந்தால் அதன் வழி கொண்டு நமக்குள் அந்த அணுக்கள் பெருக்கம் அடைந்து விடுகின்றது.
1.அது பிரம்மலோகமாக மாறிவிடுகின்றது.
2.தீமைகளை உருவாக்கும் அணுவின் தன்மையை நமக்குள்
பெருக்கும் தன்மை வந்து விடுகின்றது.
இவ்வாறு தீமைகளை உருவாக்கும் தன்மை அதிகரிக்கும்
போது ஒரு சிலரைப் பார்க்கலாம் சர்க்கரைச் சத்து அதிகமாக இருக்கும். இரத்தக் கொதிப்பு
அதிகமாக இருக்கும். ஆஸ்த்மா நோய் இருக்கும். T.B. இருக்கும்.
1.ஆஸ்த்மா நோய் உள்ளவர்களுக்கு இரத்தக் கொதிப்புக்கு
உண்டான மருந்தைச் சாப்பிட்டால் அது ஆஸ்த்மா நோய்க்கு ஒத்துக் கொள்ளாது.
2.அதே சமயத்தில் ஆஸ்த்மா நோய்க்குண்டான மருந்தைச்
சாப்பிட்டால் இரத்தக் கொதிப்புக்கு ஒத்துக் கொள்ளாது.
3.ஆனால் சர்க்கரைச் சத்திற்குண்டான மருந்தைச்
சாப்பிட்டால் அந்த இரண்டுக்கும் ஒத்துக் கொள்ளாது.
இப்படித் தனித்தனித் தன்மை ஆகி நம் உடலுக்குள்
பலவிதமான போர் முறைகளை ஆரம்பித்து விடுகிறது. எத்தகைய மருந்துக்கும் அது கட்டுபடாத
நிலையாகின்றது.
அந்த மூன்றுக்கும் சேர்த்து மருந்துகளைக்
கொடுக்கும்போது நமது கிட்னி – சிறுநீரகங்கள்
என்ன ஆகின்றது...?
விஷம் கலந்த கடுமையான மருந்துகளை நாம் சாப்பிடும்போது
கிட்னி இந்த விஷத்தையைப் பிரிக்கும் தன்மை இழந்து உப்புச் சத்தாக மாறி விடுகிறது.
உப்புச் சத்தும் சரக்கரைச் சத்தும் இரத்தக்
கொதிப்பும் இதே போன்ற பல நிலைகள் வரப்படும்போது மனிதனுடைய உறுப்புகள் சீராக இயங்காது
மனித உறுப்புகள் அனைத்தையும் நலிவடையச் செய்துவிடுகின்றது.
மனித உடலில் சீராகச் செயல்படும் உறுப்புகளை
இயக்கும் அந்த அணுக்கள் பழுதடையும் போது அதில் விளைந்த நுண் அணுக்களின் தன்மை விஷம்
கொண்டதாக உயிராத்மாவில் சேர்கின்றது.
ஆகவே இந்த உடலில் நல்ல அணுக்கள் வளரமுடியாத
தன்மை ஏற்படுகின்றது. அப்படி வரப்படும்போது தான் உயிர் இந்த உடலை விட்டு வெளியே செல்கின்றது.
மீண்டும் மனிதனாகப் பிறக்கும் தகுதியை இழக்கச் செய்து விடுகின்றது.
இதைப் போன்ற நிலைகளை மாற்ற வேண்டும் என்றால்
வாழ்க்கையில் எந்த நோயாளியைச் சந்தித்தாலும் அவர்களைப் பற்றி அறிய நேர்ந்தாலும் அதை
உடனடியாக மாற்றிப் பழக வேண்டும்.
அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமாகி
ஒளியின் உடலாக இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும்
உணர்வினை நாம் எண்ணி ஏங்கி நம் நினைவினைப் புருவ மத்தியில் வைக்க வேண்டும்.
அப்படி வைக்கப்படும்பொழுது நாம் இதற்கு முன்னாடி
நோயாளிகளைப் பற்றி நுகர்ந்திருந்தாலும் அவர்கள் துன்பப்பட்ட துயரப்பட்ட வேதனையான உணர்வுகள்
நம் உடலுக்குள் போகாது தடைப்படுத்த முடியும். அடுத்து...
1.விஷத்தின் தன்மைகளை வடிகட்டும் நம் கிட்னி
முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்
2.கிட்னியை உருவாக்கிய அணுக்கள் அந்தத் துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும என்ற வீரிய சக்தியை உண்டாக்க வேண்டும்.
3.கிட்னி தொந்திரவு உள்ளவர்கள் உப்புச் சத்து
சர்க்கரைச் சத்து உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஐம்பது முறையாவது அந்தத் துருவ நட்சத்திரத்தின்
உணர்வை கிட்னிக்குள் பாய்ச்ச வேண்டும்.
அப்பொழுது அகஸ்தியன் எப்படி விஷத்தின் தன்மை
நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்றானோ அத்தகைய வலுவான நிலைகள் நம்முடைய கிட்னி
பெறும்.
1.நல்ல இரத்தங்களாக உருவாக்கிடும் ஆற்றல்
பெறும்.
2.உடலில் உள்ள மற்ற உறுப்புகளும் அதை உருவாக்கிய
அணுக்களும் சீராக இயங்கத் தொடங்கும்.
சலிப்போ சோர்வோ சஞ்சலமோ வேதனையோ கோபமோ இதைப்
போன்ற உணர்ச்சிகள் வரும் பொழுதெல்லாம் “ஈஸ்வரா…!” என்று கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில்
உயிரின்பால் செலுத்தி உயிரான ஈசனிடம் வேண்டி
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற நினைவினைச் செலுத்தினால்
தீமைகள் புகாது தடுக்கப்படுகின்றது.
1.ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள்
சேர்க்கப்படும் போது
3.தீமைகளை வடிகட்டும் ஆற்றல் பெறுகின்றோம்.
இதைப் பழகிக் கொண்டால் இந்த வாழ்க்கையில்
நாம் எத்தகைய தீமையைப் பார்த்தாலும் அந்த தீமையின் உணர்வு நம்மை இயக்காது நம்மை நாம்
பாதுகாத்துக் கொள்ளலாம்.