ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 29, 2019

செல்வத்தைத் சம்பாதிப்பதால் எவ்வளவு நாள் சந்தோசமாக வாழ முடியும்…?


இந்த அருள்ஞானம் நமக்குக் கிடைத்தது பெரிய பேரருள்! ஏன்..?

நாம் செல்வத்தைத் தேடிச் சம்பாதித்துச் சந்தோசமாக இருக்கிறோம் என்று நினைக்கின்றோம். எத்தனை காலம் சந்தோசமாக இருக்க முடியும்...?

சம்பாதிக்கிறவரைக்கும் சம்பாதிக்கிறோம். ஒரு இரண்டு பேருக்குக் கடன் கொடுத்துவிட்டுச் சரி இருக்கட்டும்...! என்று நாம் நினைக்கிறோம். ஆனால், உதவி செய்கிற வரைக்கும் நமக்கு வருவாய் வருகின்றது என்று நினைக்கிறோம்.

1.ஆனால் பத்து பேருக்குக் கொடுத்தபின்
2.இரண்டு பேர் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் நமக்கு என்ன ஆகும்? 
3.அவன் மேல் கோபம் வரும்,
4.பழி தீர்க்கும் உணர்வு வரும், வெறுப்பு வரும்.

பாதாமைப் போட்டுச் சுவையாகச் செய்து அதில் விஷத்தைக் கொஞ்சம் போட்டால் என்ன செய்யும்...? நம்முடைய நல்ல மனதெல்லாம், போய்விடும். அடுத்து நாம் என்ன செய்வோம்...?

நம்மிடம் சரியாக வரவு செலவு பண்ணிக் கொண்டு இருப்பவர்களிடமும் கூட வெறுத்து பேசச் சொல்லும்.  இந்த வெறுப்பின் தன்மையைச் சுவாசிக்கும் பொழுது அவர்களும் தடை செய்யத் தொடங்குவார்கள்.

இப்பொழுது இது எங்கே இருந்து வருகின்றது...? அந்த உணர்வுகளால் வருகின்றது.

ஆகவே இதைப்போன்ற நிலைகளெல்லாம், நமக்குள் வராதபடி மாற்ற வேண்டும். ஏனென்றால் இது சந்தர்ப்பத்தால் வரக்கூடியது.  இது சிவ தனுசாக மாறுகின்றது.

1.உடனே அந்த அருளை எடுத்துப் பெருக்கி
2.அந்த உணர்வின் தன்மையை அருள் வழியில்
3.நாம் அடுத்த நிமிடமே மாற்றிக் கொண்டு வரவேண்டும்.

ஏனென்றால் சிவ தனுசு என்றால் ஒவ்வொன்றாக நாம் எதை எதையெல்லாம் கொன்று பரிணாம வளர்ச்சியில் இன்று மனிதனாக உருவாகியுள்ளோம்.

அதாவது சந்தர்ப்பத்தில் கோழி ஒரு விட்டில் பூச்சியை விழுங்குகின்றது, அடுத்து, அந்தப் பூச்சியுடைய சந்தர்ப்பம் கோழியாகப் பிறக்கின்றது.

ஒரு காக்காய் அந்த விட்டில் பூச்சியை விழுங்குகின்றது. அதனுடைய சந்தரப்பம் காக்காயாகப் பிறக்க கூடிய நிலை வருகின்றது.

அதே விட்டில் பூச்சியை இதே மாதிரி ஒரு எறும்பு பத்து எறும்பு, சேர்த்துக் கடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதனுடைய சந்தரப்பம் என்ன ஆகின்றது...? இது உடல் பெரிதாக  இருந்தாலும் இந்த எறும்பின் உணர்வின் நினைவே வந்து எறும்பின் ஈர்ப்பிற்குள் செல்கின்றது.

அதே சமயத்தில் மனிதன் அதைக் கொன்றால் அந்த உயிரான்மா மனிதனுக்குள் வருகின்றது. அதனுடைய சந்தர்ப்பம் அந்த உயிர் நமக்குள் வந்தால் அந்த உணர்வைப் பெற்று. இந்த ரூபம் பெறக் கூடிய தகுதியாக வருகின்றது.

1.அப்படியானால்... இப்பொழுது நாம் மனிதனாக இருக்கக்கூடிய நிலைகளில்
2.நம்முடைய சந்தர்ப்பம் என்ன...?

வேதனைப்பட்டவர்களுடைய உணர்வை அதிகமாக எடுத்திருந்தால் அந்த வேதனை உணர்வை வளர்க்கப்படும் போது நமக்குள் என்ன செய்கின்றது...?

இந்த உணர்ச்சியின் தன்மை நமக்குள் ஆத்திரமும், கோபமும், வேதனையும் அதிகமாகி இதே போல ஒவ்வொரு சந்தர்ப்பமும் உருவாகின்றது.
1.யாரால் வேதனைப்பட்டோமோ
2.அந்த நோயின் தன்மை நமக்குள் வந்து அது நோயாக மாறுகின்றது.

நோயின் தன்மை வந்தபின் “சண்டாளன் இப்படிப் பண்ணிவிட்டான்...!” என்று சொல்லிவிட்டு இந்த உணர்வின் தன்மையை வளர்த்த பின் யாரை நினைத்து வலுப் பெற்றோமோ உடலுக்குப் பின் இந்த உடலைவிட்டுச் சென்றால் அவர்கள் உடலில் போய் ஆவியாகத்தான் மாற்றும்.

அதே வேதனையை அங்கே உருவாக்கி அவர்களைப் பழி தீர்க்கும் உணர்வுடனே போகின்றது.  இது நமக்குத் தெரியாது. 
1.நாம் அல்ல! இந்த உணர்ச்சிகள் இந்த உயிருடன் எண்ணும் போது,
2.இந்த உயிர் அந்த உணர்வுகள் எங்கே சென்றாலும் இது இயக்கியே தான் தீரும்
3.இதுதான் சாகாக்கலை! சொல்வது, இப்பொழுது உங்களுக்கு அர்த்தமாகின்றதா?

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு, நம்மைப் பிறவியில்லா நிலை அடையச் செய்யும்
1.அந்த அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் சேர்ப்பதே
2.“நம் உயிராத்மாவிற்குச் சேர்க்கும் பெரும் சொத்து!” என்று உணர வேண்டும்.