ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 15, 2019

மகாபாரதத்தில் திரௌபதியை அவமதிப்பதாகக் காட்டுகின்றார்கள் - அதனுடைய விளக்கம் என்ன...?


சபையில் வைத்துத் தன் மனைவியை திரௌபதையை அவமானப்படுத்தினாலும் அதே சமயத்தில் அதை ஏற்றுக் கொள்ளும் தன்மை வரவில்லை. “அவர்களும் அறிந்து உணரட்டும்...!” என்ற உணர்வு பெறுகின்றது.

ஏனென்றால் இவை அனைத்துமே கண்களால் கவர்ந்த உணர்வுகள் தான். திரௌபதி யார்...? கண்ணனின் சகோதரி தான்.
1.கண்கள் தான் மற்றதைக் கவர்ந்து நமக்குள் உணர்த்துகின்றது.
2.நாம் கண்ணால் பார்கின்றோம்...
3.கண்ணின் நிலைகளில் காந்தப்புலன் அறிவு கவர்ந்து உயிருடன் இணைக்கப்படும் போது திரௌபதி
4.புலனறிவு ஐந்தின் வலு எதுவோ அதற்கு தக்கவாறு அது இயக்கிக் காட்டுகிறது (ஐந்து பேருக்கு ஒருத்தி).

இவைகளை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கண்ணனின் சகோதரியை அர்ச்சுனனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். அர்ச்சுனன் வலிமையான நிலைகள் கொண்டாலும் அதன்படி இந்தப் புலன் அறிவு ஐந்தும் கண்களால் நுகர்ந்த வலுவான உணர்வு படி உடலாக்கபடும் போது பீமன் ஆகின்றான்.

அடுத்து நகுலன் ஆகும் பொழுது மற்ற உணர்வுகளைச் சிந்திக்கும் படி செய்கின்றான். சகாதேவன் ஒன்றுக்கு உதவி செய்யும் தன்மைக்கு வருகின்றான்.

நுகர்ந்தது அனைத்தும் சாந்தத்தின் நிலைகள் கொண்டு உள் அடங்கி அதன் வழி தீமைகளை எண்ணாதபடி தனது உணர்வின் தன்மை பெறுகின்றான் தர்மன். தீமைகளை நுகரவில்லை. நல்ல உணர்வின் தன்மையை அவன் நுகர்கின்றான்.

இருந்தாலும் இந்தப் பஞ்ச பாண்டவர்கள் தீமை என்ற எண்ணம் உட்புகாதபடி தடுத்து நிறுத்திப் போர் முறை கொண்டு அவைகள் எந்த வகையிலும் செயல்படாதபடி மற்ற தீமைகள் எதுவோ அது வராதபடி தடுத்து நிறுத்துகின்றார்கள்.

அதாவது நம் வலிமையை எதிலே கொண்டு வரவேண்டும்...? என்பதைத்தான் மகாபாரதத்தில் அங்கே காட்டுகின்றனர்.

திரௌபதியை சூதிலே வைத்து ஆடிவிடுகின்றான். ஏனென்றால் வாழ்க்கையில் ஒவ்வொரு சிக்கலிலேயும் மனிதன் சிக்கி விடுகின்றான். சிக்கிக் கொண்டபின் என்ன ஆகின்றது.

அங்கே அவமானப்படுத்துகின்றான். யாரை...? திரௌபதியை...! சபையில் வைத்து நிர்வாணப்படுத்துகிறார்கள். அப்பொழுது தன் உணர்வின் தன்மை கொண்டு எண்ண செய்கிறது..?
1.அங்கே நிர்வாணப்படுத்துவதை திரௌபதி எண்ணவில்லை
2.உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்ற எண்ணத்தை அங்கே செலுத்துகின்றது
3.தன்னை அவமதிக்கிறார்கள் என்று திரௌபதி எண்ணவில்லை.

எதற்காக இப்படிக் காட்டுகிறார்கள்...?

நமது வாழ்க்கையில் யார் நம்மை அவமதித்தாலும் “நம்மை அவமதிக்கிறார்...!” என்ற உணர்வின் தன்மையை நமக்குள் வகுத்தால்
1.அதன் உணர்வே நமக்குள் விளைந்து விடும் என்பதையும்
2.அதை நாம் எப்படி மறுத்துப் பழகவேண்டும்...? என்று அங்கே தெளிவாகக் காட்டப்படுகின்றது.

இதையே இராமாயணத்திலேயும் காட்டுகின்றனர். அதாவது இராமன் வாலியை நேரடியாகப் பார்க்கவில்லை.

அதே சமயத்தில் அவன் அருள் உணர்வைத் தனக்குள் எடுத்துக் குகை மேல் இருக்கும் பாறையை வைத்து வாலி வெளி வராதபடி மூடி விடுகின்றான். வாலியின் உணர்வை வலு குறைக்கச் செய்கிறான்.

மகாபாரதத்தில் திரளபதை - நாம் நுகரும் சக்திகள் அவமதிக்கும் உணர்வுகள் இருப்பினும்
1.அந்த அவமதிப்பவன் உணர்வை ஏற்றுக் கொள்ளவில்லை.
2.ஏனென்றால் ஒருவர் நம்மை அவமதித்தாலும் அதை நாம் ஏற்றுக் கொள்ளாத வரையிலும் நம்மை ஒன்றும் பாதிக்காது.
3.ஆனால் விட்டு விட்டால் என்றுமே அது நம் நல்ல குணங்களை மூடி மறைத்துவிடும்.

ஆகவே வலு கொண்ட உணர்வு கொண்டு நாம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்துவதற்குதான் இவ்வாறு மகாபாரத்தில் தெளிவாகக் காட்டுகின்றனர்.

மகாபாரதத்தின் இறுதியில் கண்ணனும் அவனுடைய வலு இழந்து விடுகிறான். பீமனும் என்ன செய்கின்றான்..? இந்த உயிரான நிலைகள் கண்ணன் இறந்த பின் இவனுக்கு உணவு கிடைக்காது இவனும் மடிகின்றான்.

தர்மனுடன் எது சேர்ந்து செல்கின்றது...? கடைசியில் அந்த நாய் தான் கூடப் போகின்றது என்று மகாபாரதத்தில் காட்டுகின்றார்கள். ஆகவே எது விசுவாசமாக இருந்தது...? வளர்த்த நாய் தான் செல்கின்றது.

நாயை ஏன் அங்கே மோட்சத்திற்குக் கொண்டு போகவேண்டும்...?

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நம்முடைய உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றுகின்றோம்.

நம்மை அறியாது வந்த தீமைகளை எல்லாம் அடக்கி நல்ல உணர்வுகளாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வின் தன்மையை நாம் சுவாசிக்கின்றோம்.
1.இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரப்படும் போது அங்கே போகின்றோம்.
2.நுகர்ந்த உணர்வுகள் நம்முடன் இணைந்து பிறவி இல்லா நிலை அடைகின்றது.
3.தன்னுடன் அது விசுவாசமாக இருந்ததால் அது தன்னைப் பாதுகாத்தது.
4.”நாம் சுவாசித்ததே.. நாம் நுகர்ந்ததே.. அந்த மோப்பம் தான் நம்மைக் காக்கின்றது...” (அதனால் தான் நாய் என்று அதை காண்பித்து தன்னுடன் கூடவே மோட்சத்திற்கு வருகிறது என்று தெளிவாக்குகின்றார்கள்.)

நாம் நுகர்ந்த உணர்வு தான் நம்மைப் பாதுகாக்கின்றது. அந்த உணர்வின் தன்மை வலு இழக்காதபடி தன்னைப் காக்கின்றது. வீரிய தன்மை எடுக்கப்படும் பொழுது பிறருடைய துயரங்களை இது எடுத்துக் கொள்வது இல்லை. யாருடைய ஈர்ப்புக்கும் செல்லாதபடி ஏகாந்தமாக விண் செல்கிறது என்று தெளிவாக்குகின்றார்கள்.