ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 17, 2019

சிவ சக்தியின் இயக்கத்தைப் பற்றி ஆதிசங்கரர் உணர்த்திய உண்மை நிலைகள்


நம்முடைய உயிர் நெருப்புநம் உடல் ஒரு குண்டம். எந்தெந்தக் குணத்தை நாம் சுவாசிக்கின்றோமோ அந்தக் குணத்தின் தன்மை நம் உயிரிலே பட்டு இந்த உணர்வுகள் உடலிலே இயங்கப்பட்டு இந்த உணர்வின் சக்தி நம் உடலிலே சேர்கின்றது.

நாம் எண்ணும் எண்ணம் என்பது சூட்சமம் அதாவது அத்வைதம்…! எண்ணத்தைக் காண முடியாது. ஆனால் ஒரு குணத்தை எண்ணி அதை நாம் பெற வேண்டுமென்று
1.நமக்குள் அந்த உணர்வை ஏக்கத்துடன் செலுத்தும்போது
2.நம் உயிரான நெருப்புக்குள் பட்டு இந்த உணர்வுகள் நமக்குள் இயங்கி
3.உயிரில் இருக்கக்கூடிய வெப்பம் இந்த உணர்வின் சக்தியாக மாற்றுகின்றது என்ற நிலையை ஞானிகள் காட்டினார்கள்.

கோவிலில் ஒரு தெய்வச் சிலையைக் காட்டும்போது அதற்கென்று ஒரு கதையை எழுதியிருப்பார்கள். இந்தத் தெய்வம் இன்னது செய்யும்.

நாம் எந்தக் குணத்தை எண்ணி அதை நாம் சுவாசிக்கின்றோமோ, இந்த உணர்வுகள் நம் உடலுக்குள் நின்று அதுவே நமக்குள் தெய்வமாகச் செயல்படுகின்றது.

கோவிலிலே தெய்வத்திற்குப் பாலாபிஷேகம் செய்கிறோம் என்றால் பால் என்பது எல்லாவற்றிலும் சத்தானது. அதைப்போல பிறர் மகிழக்கூடிய எண்ணம் கொண்டு அந்தத் தெய்வ குணத்தை நாங்கள் பெற  வேண்டுமென்று ஏங்கி அதைத் தனக்குள் சுவாசிக்கும் போது அந்த உணர்வு நம் உயிரான ஈசனுக்கு அபிஷேகமாக நடக்கின்றது.

ஏனென்றால் நம் உயிர் ஈசானாகின்றது. நல் உணர்வின் தன்மையை நாம் எண்ணிச் சுவாசிக்கும் பொழுது நம் உயிருக்குள் அந்த மகிழ்ச்சியான எண்ணங்கள் ஏற்படுகின்றது. அப்பொழுது நம் உடலிலேயும் மகிழ்ச்சியான எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றது.

நம் உடலுக்குள் போனவுடன் எல்லா உணர்வுகளும் அந்த மகிழ்ச்சியினுடைய நிலைகளிலே தாண்டவம் ஆடுகின்றது. அந்தச் சக்தியாக நம் உடலின் செயல்களும் நம் சொல்லின் தன்மைகளும் அவ்வாறு இயங்குகின்றது என்ற இந்த தத்துவத்தைத்தான் அன்று ஆதிசங்கரர் சொன்னார்.

நமக்குள் இருக்கக்கூடிய நிலையைத்தான் அங்கே புறத்தில் காட்டப்பட்டிருக்கிறது. சூட்சம நிலைகள் மறைந்திருப்பது அத்வைதம். அது காற்றிலிருந்து நாம் சுவாசிக்கும்போது அந்த உணர்வின் செயல் துவைதம்.

1.சக்தியாக இருப்பதுஒரு சிவமாக ஜடப்பொருளாக இருக்கும்போதுதான். இயக்கம்
2.இல்லை என்றால் சக்திக்கு வேலையில்லை.

சக்தி இல்லையேல் சிவமில்லை...
சிவம் இல்லையேல் சக்தியில்லை...
பல சூட்சும நிலைகள் கொண்டு ஒரு திடப்பொருளாக ஆனபின் அதாவது சிவமான பிற்பாடுதான் அந்தச் சிவத்திற்குள் ஐக்கியமாகி இயக்கும் செயல் சிவசக்தி என்ற இந்தப் பேருண்மையை அன்று ஆதிசங்கரர் தெளிவான முறைகள் சொல்லியுள்ளார்.