சூரியன் எல்லாவற்றிற்கும் பொதுவானதே...! எது எது பூமியில் உருவாகியுள்ளதோ
அதிலிருந்து வெளிப்படும் அனைத்தையும் அலைகளாக மாற்றி (பூமியில் உள்ள காற்று மண்டலத்தில்)
எடுத்து வைத்துக் கொள்கிறது.
பின் பூமியிலே வளரும் வித்துக்களுக்குத் தான் கவர்ந்து வைத்திருக்கும்
அலைகளை உணவாகக் கொடுத்து அதனின் இனத்தை வளர்த்துக் கொடுக்கும் திறன் பெற்றது சூரியன்.
இருபத்தியேழு நட்சத்திரங்களிலிருந்தும்
கோள்களிலிருந்தும் வரும் உணர்வுகளில் கலந்துள்ள நஞ்சினை மாற்றி அவைகளை ஒளியாக மாற்றும்
போது
1.எல்லாவற்றையும் அறிவுடன் வளர்த்திடும்
2.அதாவது அதனதன் உணர்வு கொண்டு அறிவுடன் வளர்த்திடும் நிலையைச் செய்கின்றது
சூரியன்.
இதைப் போலத் தான் மனிதன் சுவாசிக்கும் உணர்வுகள் எவையோ அவை எல்லாம்
அந்தந்த உணர்வின் வித்தாக மாறுகின்றது. ஒரு மனிதன் கோபமாகப் பேசுகின்றான் என்றால் அதை
உற்றுப் பார்த்து நாம் நுகர்ந்தால் அதுவே உடலுக்குள் “கோபம் என்ற ஒரு வித்தாகின்றது...!”
ஒரு மனிதன் தன் உடலில் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றான் என்றால்
அவன் வெளிப்படுத்தும் அந்த வேதனையான சொல்லை நாம் கேட்கும் போது அது “வேதனை என்ற வித்தாக
நமக்குள் பதிவாகின்றது...!”
முதலில் சொன்ன மாதிரி சூரியன் எப்படி ஒன்றைக் கலவையாகி வித்தின்
தன்மை அடைந்து பூமியில் செடியாக முளைத்த பின்
1.அந்தச் செடியிலிருந்து வெளி வரக்கூடிய உணர்வினைத் தனக்குள் அலைகளாக
எடுத்து
2.மீண்டும் அதே செடியில் விளைந்த வித்துக்கு அதை உணவாக எப்படிக்
கொடுக்கின்றதோ
3.இதை போலத் தான் நம் உயிரும் மற்ற மனிதன் உடலில் விளைந்த உணர்வின்
அலைகளை நமக்குள் வித்தாக மாற்றிய பின்
4.அதற்கு - அந்தந்த உணர்வுகள் உந்தப்படும் போது (கோபம் வெறுப்பு
வேதனை சலிப்பு சங்கடம் அன்பு பரிவு பாசம் மகிழ்ச்சி)
5.நம் உயிர் காற்றிலிருந்து அதே இனமான அலைகளைச் சுவாசிக்கச் செய்து
6.நம் இரத்த நாளங்களில் வழியே உடலுக்குள் இருக்கும் அந்த வித்துக்களை
(அணுக்களை) வளர்க்கச் செய்கின்றது.
உதாரணமாக கோபமான உணர்ச்சிகளையோ வேதனைப்படும் உணர்வுகளையோ நாம் நுகரப்படும்
போது அந்தந்த உணர்ச்சிகள் கொண்டு தான் நாம் சொல்லும் வருகிறது... செயலையும் செயல்படுத்தச்
செய்கின்றது.
அப்போது வேதனைப்படும் உணர்வுகள் அதிகரித்து அந்த அணுக்களைப் பெருக்கப்படும்
போது நமது உடலுக்குள் இருக்கும் நல்ல உறுப்புகளை மாற்றி விடுகின்றது... நோயாக உருவாகின்றது.
இதனால் மனிதன் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் சுவையாக உருவாகும்
உணர்வும் மறைந்து விடுகின்றது. பின் மனிதன் அல்லாத நிலையையே உருவாக்கி விடுகின்றது.
சூரியன் எப்படித் தனக்குள் மோதும் விஷத்தை நீக்குகின்றதோ... அதனதன்
கவர்ந்து கொண்ட உணர்வு கொண்டு அது இயங்குகின்றதோ... அதைப் போல நம் உடல் இயங்கினாலும்
மனிதனின் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமையை நீக்கிடல் வேண்டும்.
1.மனிதனின் வாழ்கையில் தீமை என்று அறிந்து கொண்டால்
2.உடனே மெய் ஞானிகளின் உணர்வினை நாம் நுகர்ந்து அதனுடன் கலந்து
3.தீமைகளை அடக்கி தீமை அற்ற நிலையாக மாற்றி மகிழ்ச்சி என்ற உணர்வினைக்
கூட்டிக் கொள்ளும் பொழுது
4.நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கும் அது நன்மையாகின்றது
5.நம்மிடமிருந்து வெளிப்படும் சொல்லைக் கேட்போர் உணர்விலும் அந்த
மகிழ்ச்சியை ஊட்டுகின்றது.
நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு இவ்வாறு நமக்குள் தெளிந்த மனமும்
மகிழ்ந்திடும் உணர்வு பெறும் சக்தியை நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.
ஆகவே மனிதனாக இருக்கும் நாம் பிறருடைய துயரங்களையோ மற்ற சங்கடங்களையோ
வெறுப்பையோ வேதனைகளையோ கேட்டு அறிந்தாலும் நமக்குள் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளாக நல்ல
அணுக்களாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். மகிழ்ந்து வாழ முடியும்.