ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 25, 2019

குழந்தைகள் பள்ளி மாணவ மாணவிகளுக்குள் இயங்கும் விசித்திரமான செயல்களுக்குண்டான காரணம் என்ன...?


அமெரிக்காவில் ஒரு ஐந்து வயதுக் குழந்தை “கணக்கு ரொம்பத் தெளிவாகப்  போடுகிறது...!” என்று சொல்வார்கள்.

கணக்கின் தன்மை போட்ட ஒரு நிலையில் ஒருவர் இறந்து விட்டால் அந்த ஆன்மா சந்தர்ப்பவசத்தால் ஒரு குழந்தையின் உடலுக்குள் சென்று விட்டால்
1.கணக்குகளைத் தன்னாலே ஒன்றுமே பார்க்காது
2.மள...மள... என்று போட்டுக் கொண்டே இருக்கும்.

இதைப் பார்க்கும் மற்றவர்கள் என்ன சொல்வார்கள்...? போன பிறவியில் இந்த மாதிரி இருந்தது. அதனால் இந்தப் பிறவியில் இப்படிக் கணக்குப் போடுகின்றது...! என்பார்கள்.

ஆனால் ஒரு ஆன்மா இந்த உடலுக்குள் சென்ற பின் தான் இது எல்லாம் நடக்கும். இன்னொரு ஆவி உடலுக்குள் போய்விட்டால் அது கற்றுணர்ந்த உணர்வுகளை அந்த உடலிலே செயல்படுத்திக் காட்டும்.

பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளிடம் இதைப் பார்க்கலாம். பள்ளியில் படிக்கும் போது மாணவர்கள் இரண்டு பேர் சந்தோசமாகப் பழகுகிறார்கள்.

சந்தோசமாக இருந்த மாணவர்களுக்குள் ஒரு மாணவன் தன் குடும்பத்தில் ஏதோ காரணத்தால் குறையாகி மனது வேதனைப்பட்டு அதனால் விஷத்தை உணவாக உட்கொண்டு இறந்து விடுகின்றான்.

அதைக் கேள்விப்பட்ட அவனுடைய நண்பன் பாசத்தால் “போய்விட்டாயே நண்பா...!” என்று எண்ணினால் விஷம் குடித்து இறந்த ஆன்மா இவன் உடலுக்குள் புகுந்துவிடும்.

ஆக அவன் எப்படித் தன் குடும்பத்தில் வெறுப்பின் தன்மை அடைந்து விஷத்தை குடிக்கச் சென்றானோ இந்த உணர்வுகள் எல்லாம் நண்பனுக்குத் தோன்றும். 
1.அவனும் தாய் தகப்பனை வெறுக்க ஆரம்பிப்பான்.
2.விஷத்தைக் குடிக்க வேண்டும் என்ற உணர்ச்சிகள் தோன்றும்
3.இப்படி மாணவ மாணவிகள் நிறையப் பேர் உண்டு.

அதே போல ஒரு தீய மாணவனுடைய உணர்வுகள் உடலிலே புகுந்து விட்டால் அவன் என்னென்ன குற்றச் செயல்களைச் செய்தானோ அதே  குற்றத்தை இயக்கும் அணுக்கள் புகுந்த உடலுக்குள் இங்கேயும் விளைந்துவிடும்.

அவன் விடும் சுவாசத்தை இவனும் வளர்ப்பான். ஏன் என்றால் பாசத்தால் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் இதை வளர்க்கும். இது எல்லாம்  இயற்கையின் நியதிகள். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறோம்.