ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 4, 2019

நம் உயிருடன் ஒன்றும் உணர்வுகளை வேதனையாகவோ பகைமையாகவோ வெறுப்பாகவோ மாற்றக் கூடாது


இந்த மனித உடல் வாழ்க்கையில் சிறிதளவு நாம் பிசகினாலும் இன்னொரு உடலைத்தான் பெற முடியுமே தவிர மீண்டும் வேறு ஒரு உடல் பெற்றாலும் மனிதனாக அடுத்து வர முடியாது.

ஏனென்றால் இன்று விஞ்ஞான உலகில் காற்று மண்டலமே நச்சுத் தன்மை அடைந்திருக்கப்படும் பொழுது நாம் சப்தரிஷி மண்டலத்தை அடையத் தவறினால் நாம் இந்தப் பூமியில் மீண்டும் விஷத் தன்மைகள் பரவி இருக்கும் இந்த நேரத்தில் வேதனை என்ற உணர்வு அதிகரித்து மனிதனுக்குப் பின் பாம்பினங்களாகப் பிறக்கும் தன்மையே வருகின்றது.

ஆனால் மனிதனாக உருவான நிலையில் இந்த உயிர் எத்தனையோ கோடி உடல்களிலிருந்து
1.“தீமைகளை நீக்க வேண்டும்... தீமைகளை நீக்க வேண்டும்...!” என்று
2.அந்தந்த உடல்களிலிருந்து எண்ணி எங்கிய உணர்வுக்கொப்ப
3.தீமையிலிருந்து விடுபடும் மனித உடலாக உருவாக்கியுள்ளது.
4.ஆகவே இந்த உடலில் நம்மை அறியாது சேர்ந்த தீய வினைகளைக் கரைப்பது நமது கடமைகளாக இருக்க வேண்டும்.

இந்த உயிரின் இயக்கம் தான் நமது உடல். வாழ்க்கையில் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கொப்ப எந்த உணர்வின் தன்மையை நுகர்ந்தோமோ இந்த உயிர் அந்தந்த உணர்வுக்கொப்ப பரிணாம வளர்ச்சி அடையச் செய்தது.

ஆகவே மனிதனான பின் நமது பரிணாம வளர்ச்சி எதுவாக இருக்க வேண்டும்...?

உயிர் ஒளியானது. நம் உணர்வுகளை ஒளியாக்கி என்றுமே ஒளியின் உடலைப் பெறுவது தான் நமது பரிணாம வளர்ச்சியின் கடைசி எல்லை. ஆனால் அந்த ஒளி உடலை நாம் பெற முயற்சிக்கின்றோமா...?

மனிதனை உருவாக்கிய இந்த உயிருக்கு வேதனை என்ற உணர்வை ஊட்டினால் வேதனைப்படும் உணர்ச்சிகளாக வளர்த்து வேதனைப்படச் செய்யும் அந்த உயிருடன் ஒன்றித் தான் நாம் வாழ்கின்றோம்.
1.வேதனை உணர்வுகளை முழுமையாக்கிய பின்
2.இந்த உடலை விட்டு உயிர் வெளிவரப்படும் பொழுது
3.வேதனையை அனுபவிக்கும் உடலாகத்தான் அடுத்து மாற்றுகின்றது.

ஆகவே வேதனையற்ற உணர்வு கொண்டு அவனுடன் அவனாக நாம் சேர்வதே நமக்கு நல்லது. அது தான் கல்கி.
1.ஏனென்றால் உயிர் ஒளியாக இருக்கின்றது.
2.உயிருடன் ஒன்றும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றுதல் வேண்டும்.
(உயிருடன் ஒன்றும் உணர்வுகளை வேதனையாகவோ பகைமையாகவோ வெறுப்பாகவோ மாற்றக் கூடாது)

ஒளியாக மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?

இந்தப் பிறவிக்கடனை நீங்கி நம் பூமியின் வடக்குத் திசையில் விண்ணிலே பேரொளியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை ஒவ்வொரு நிமிடமும் நுகர்ந்து பழக வேண்டும். அப்பொழுது நம் உடலில் வரும் அந்த இருளை நீக்கும் வலிமையைப் பெறுகின்றோம்.

இதைப் போல் நாம் தியானத்தின் மூலம் அடுக்கடுக்காக எடுத்துக் கொண்ட வலிமை கொண்டு உடலை விட்டுப் பிரிந்த நம்முடைய முன்னோர்கள் மூதாதையர்களின் உயிரான்மாக்களைச்
1.சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து
2.அந்த நஞ்சுகளைக் கரைக்கும் வன்மைகள் வளர வேண்டும்.
3.அவர்களை அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்ய வேண்டும்.

நம்முடைய முன்னோர்களின் ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலம் அடைந்தால் அங்கிருந்து வரும் பேரருள் உணர்வை நாம் எளிதில் பெறக்கூடிய தகுதியைப் பெறுகின்றோம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எளிதில் பெறக்கூடிய தகுதியும் பெறுகின்றோம்.

உயிர் எப்படி ஒவ்வொரு உணர்வையும் தெளிவாக்குகின்றதோ அதே போல அருள் ஒளி என்ற உணர்வின் தன்மையை நம் உடலிலே வளர்க்கப்படும் பொழுது அந்த உயிருடன் ஒன்றிய ஒளியின் உடலாகவே நிலை பெறுகின்றது.

ஆக
1.என்றுமே ஏகாந்த நிலையாக
2.எதிர்ப்போ விருப்போ இல்லாத உணர்வை இந்த உடலில் வளர்த்து
3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சேர வேண்டும்.
4.அது தான் கடைசி நிலை.