ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 15, 2019

கோள்களின் இயக்கத்தைக் கண்டுணர்ந்தவர் கோலமாமகரிஷி


கோலமாமகரிஷி கர்நாடகாவில் கொல்லூர் என்ற ஊருக்கு அருகில்குடசாஸ்திரி...” மலையின் இறக்கத்தில் காட்டுக்குள் போய் தனித்து ஜெபமிருக்கிறார்.

ஜெபம் செய்து கொண்டிருந்தாலும், இவர் சேர்த்துக் கொண்ட நிலைகளுக்கு இந்த அணுக்கள் ஆவியின் நிலைகள் எதிர்ப்பணுக்கள் அதிகமாயிற்று.

அரச காலங்களில் பேருண்மையினுடைய நிலைகளை கற்றுக் கொண்டதினாலே அதையே பற்றித் தன் வலிமையினாலே இந்த உடலைவிட்டுச் சென்றால் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்ற உணர்ச்சிகள் தூண்டிய பின்தான் அவர் சிந்திக்கத் தொடங்குகின்றார்.

அப்படிச் சிந்திக்க தொடங்கும் போதுதான் இன்றுமூகாம்பிகை...என்று கொல்லூரில் அந்த சிலையை வடித்தார். நமது பூமி சுழலும் போது வரக்கூடிய வெப்பம்விஷ்ணு...நமது பூமி சிவம் சீவலிங்கம்.

அதாவது நமது பூமி சுழலும்போது எடுக்கக்கூடிய காந்தமும், பிரபஞ்சத்திலேயுள்ள காந்தமும் இரண்டும் உராயப் படும்போது ஏற்படக்கூடியது தான் வெப்பம்.

அந்த வெப்பத்தால் வரக்கூடிய உணர்வின் தன்மை நாதம் ஓ...என்ற நிலை வந்தாலும்ம்...என்று பூமியின் ஈர்ப்புக்குள் வந்து, பூமிக்குள் இருக்கக்கூடிய மற்ற சத்துக்களுடன் இருக்கக்கூடிய வெப்ப காந்தங்களுடன் மோதியவுடன் இந்த பூமி வெப்பமாகிறது.

அப்போது அந்த வெப்ப சுழற்சியிலே பூமியின் நடு வட்டத்திற்குச் செல்கின்றது. ஒரு தம்பளரில் தண்ணீரை வைத்து கிர்...! என்று சுற்றினால் கடைசி பாகம் ஒட்டிய இடத்திலேயே நிற்பது போல விண்ணிலே தோன்றக்கூடிய இந்த வெப்பத்தின் நிலைகள் பூமியின் நடு மையத்தில் தேங்கி வெப்பத் தணல்கள் அதிகமாகக் கூடிக் கொண்டே வரும்.

அப்படிக் கூடும்போது அதன் அலைகள் சிறுகச் சிறுக மேலே வரும்போது, பூமிக்குள் இருக்கக்கூடிய மற்ற பொருட்கள் அனைத்துமே ஜீவன் பெறக்கூடிய சக்தி உண்டாகிறது.

ஆதனால்தான்ஓ...ம்என்ற பிரணவத்தை அங்கே சொல்லி இது ஜீவன் உண்டானாலும் சீவலிங்கம்...” இந்த பூமி ஜீவன் உள்ளது. எல்லாவற்றையும் இயக்கக்கூடிய சக்தி பெற்றதும் சிவலிங்கம் என்ற நிலைக்கு வைத்தார்கள்.

கொல்லூரில் வைத்திருப்பது சிவலிங்கம்தான். அந்த சிவலிங்கத்தில் சரிபாதி விஷ்ணு சக்தி சரி பகுதி சிவசக்தியினுடைய நிலை என்று சொல்வார்கள்.