நாம் எங்கு வெளியில் சென்றாலும்
ஆத்ம சுத்தி செய்துவிட்டுத்தான் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால்
1.நாம் சுவாசிக்கும் அந்த அருள் உணர்வுகள்
2.நமக்குப் பாதுகாப்பாக வந்து,
நம்மைச் சீர்படுத்தும்.
ஒரு சமயம் நம் தியான வழி அன்பர் ஒருவர் தபோவனம் வந்து விட்டுப் போனார். இங்கே இருந்து போகும் போது
பஸ் ஏறியிருக்கின்றார்,
பஸ்ஸில் ஏறியவுடன் அவருக்குப் பதட்டமாகவே இருந்திருக்கின்றது.
அப்பொழுது…
1.“குருதேவா…! ஏன் இந்த மாதிரி எனக்குப் பதட்டமாகவே இருக்கின்றது…?
2.என்னமோ… தெரியவில்லையே” என்று எண்ணுகின்றார்.
ஆனால் அவருக்குள் அந்த உணர்வு பஸ்ஸை விட்டு அவரை இறங்கச் சொல்லி அந்த உணர்வு இறங்கும்படி
உணர்ச்சியைத் தூண்டுகின்றது. அடுத்த பஸ்
ஸ்டாப்பில் இறங்கத் தொடங்கினார்.
அப்பொழுது அவர் கூட வந்தவர் ஒரு அரிசி வியாபாரி.
அவர் என்ன செய்கின்றார்….? இவரைப் பார்த்து, “நீ
என்னையா...? பைத்தியக்காரத்தனமாக இவ்வளவு தூரம் டிக்கெட் எடுத்துவிட்டு
வந்து பஸ்ஸிலே போவதற்குப் பயந்து கொண்டு இருக்கின்றாய்…!” என்று கேட்கின்றார்.
என்னமோ தெரியவில்லை…! எனக்குள் இறங்கச்
சொல்லுகின்றது என்று இவர் சொல்கின்றார்.
அப்பொழுது அவர் உங்கள்
சாமியார் (ஞானகுரு) சொல்கின்றாரா…? உன்னை பஸ்ஸிலிருந்து இறங்கு
என்று…! கூட்டமாக இருக்கின்றது என்று சொல்லி உங்கள் சாமி இறங்கச் சொல்கின்றாரா…? என்று திரும்பத் திரும்ப
கிண்டலாகச் சொல்லிக் கொண்டே வந்திருக்கின்றார்.
ஆனால் பஸ் அடுத்த ஸ்டாப்புக்கு வந்தவுடனே “கட்டாயமாகவே அவரைக் கீழே இறங்க
வைத்துவிட்டது….!
அவர் இறங்கியபின் பஸ் அடுத்த ஸ்டாப்புக்குப் போவதற்கு முன்னாடியே
ஒரு பாலத்தில் இருந்து அப்படியே தூக்கி எறிந்து
பஸ் கீழே கவிழ்ந்து விட்டது.
கிண்டல் பண்ணியவர் அவர் அந்த பஸ்ஸில், படி ஓரத்தில் உட்கார்ந்து இருந்த அந்தப் பக்கமே பஸ்ஸும் கவிழ்ந்து விட்டது. அதற்குள்ளே
அவர் சிக்கிக் கொண்டார்.
அடுத்த பஸ்ஸில் இவர் ஏறி வருகின்றார். போன உடனே, “ஐயா...! சொன்னதை, நான்
கேட்கவில்லை.. என்னைத் தூக்கி விடு…!”
என்று சொல்கின்றார்.
எங்கே பஸ்ஸின் அடியிலிருந்து தூக்கிவிடுவது….? காலை வெட்டித்தான் எடுக்க முடியும்.
நடந்த இந்த விபத்தை, தியான வழி அன்பர் வந்த வண்டி கவிழ்ந்து விட்டது…!”
என்று யாரோ போய்ச் சொல்லி இருக்கின்றார்கள்.
அதைக் கேள்விப்பட்ட உடனே அவருடைய மாமனார் மோட்டார்
சைக்கிளில் வந்துவிட்டார். பார்த்தால் கிண்டல் செய்தவருக்கு
இரத்தம் சொட்டிக் கொண்டு இருக்கின்றது.
உன் மருமகன் சொன்னதை நான் கேட்கவில்லை. அவரைக் கிண்டல் பண்ணினேன்.
ஆகையினால் இந்த மாதிரி நான் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றேன்…! என்று சொல்கின்றார்.
இது நடந்த நிகழ்ச்சி.
இந்த உணர்வுகள் எதை… எப்படி இயக்குகின்றது…?
என்றுதான் உங்களுக்குச் சொல்கின்றோம்.
ஆத்ம சுத்தி செய்ய வேண்டிய முறை
ஓ...ம் ஈஸ்வரா… குருதேவா…!
என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.
அம்மா அப்பா அருளாசி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
கண்களைத் திறந்து ஏக்க உணர்வுடன் ஏங்குங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற
அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உள்ள உங்கள் உயிரை நினைவுக்குக் கொண்டு
வாருங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற
அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு நிமிடம் ஏங்கி இருங்கள்.
கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்
எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள்
அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி இருங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல்
முழுவதும் படர்ந்து உடலில் உள்ள உறுப்புகள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய்
ஈஸ்வரா என்று உடலுக்குள் நினைவினைச் செலுத்தி உயிரான ஈசனிடம் வேண்டித் தியானியுங்கள்.
இதைச் சாதாராணமாகப் பேசும் நிலைகளில் புற நிலைகளில்
சொல்லாமல் (வாய் விட்டுச் சொல்லாமல்) அக நிலைகளில் துருவ நட்சத்திரத்தின்
பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன்
அந்தச் சக்தி பெறவேண்டும் என்ற வலுவான எண்ணத்துடன் இழுத்துச் சுவாசித்து உங்கள்
உடலுக்குள் நினைவினைச் செலுத்துங்கள்.
இரத்தத்தில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள், உடல் உறுப்புகள்
அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று
திரும்பத் திரும்ப உணர்வுடன் எண்ணி இழுத்துச் சுவாசித்து உங்கள் நினைவினை அலை
அலையாக உள் செலுத்துங்கள்.
இப்படியே சிறிது நேரம் தியானியுங்கள்.
பின்னர் கண்களைத் திறங்கள்.
எதனை நலம் பெறவேண்டும் என்று விரும்புகின்றீர்களோ அதனை
எண்ணுங்கள்.
உங்களுக்கு எத்தகையை நோய் இருந்தாலும் உங்கள் குடும்பங்களில்
எந்த வகையான இன்னல்கள் இருந்தாலும் குடும்பங்களில் ஒருவருக்கொருவர் மன பேதம் இருந்தாலும்
தொழிகள் சீராக இயங்காமல் இருந்தாலும் பணம் கொடுக்கல் வாங்கலில் முடக்கங்கள் ஏற்பட்டிருந்தாலும்
குழந்தைகளால் மனக் குறைகள் இருந்தாலும் புத்திர பாக்கியம் இல்லாமலிருந்தாலும் இவைகள்
அனைத்தையும் உங்கள் எண்ணத்தால் மாற்றியமைக்க முடியும்.