மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் காண்பித்த அருள் வழியில்
யாம் (ஞானகுரு) அருள் உணர்வுகளைப் பெற்றோம். ஆகவே, யாம் குரு அருளைத்தான் போற்றுகின்றோம்.
வேறு யாரையும் போற்றுவதில்லை.
குருநாதர் காண்பித்த அருள் வழியில் யாம் நுகர்ந்து கொண்ட அருள்
உணர்வுக்குத் தக்க யாம் நன்மைகள் அடைந்தோம்.
அதே போன்று நீங்களும் குரு காண்பித்த அருள் வழியில் தாம் நுகர்ந்துக்
கொண்ட அருள் உணர்விற்குத் தக்க நற்பயன்களைப் பெற முடியும்.
1.யாம் சந்திக்கும் அனைவருமே அருள் ஞானம் பெற வேண்டும்
2.அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி
3.இதற்காக அனைவரையும் தயார்ப்படுத்த வேண்டும் என்ற ஆசையில்தான்
செயல்படுகின்றோம்.
இது எவ்வளவு பெரிய சக்தி…!
1.எத்தனை வருடம் கஷ்டப்பட்டு,
2.என்னென்ன வழியில் செயல்பட்டு,
3.எத்தனை சிரமங்களை அனுபவித்து,
4.அத்தனை சிரமங்களையும் தாங்கித் தாண்டி வருகின்றோமென்றால்,
எதற்காக…?
5.அனைவரும் இந்த அரும்பெரும் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஆசையில்தான்.
மெய் ஞானிகள் பெற்ற அருள் ஞானம் எல்லோருக்குள்ளும் வளர வேண்டும்.
நம் குருநாதருடைய உணர்வுதான் நம் அத்தனை பேருக்கும் அமைந்துள்ள நல்ல சந்தர்ப்பம் ஆகும்.
“எல்லோருக்கும் அருள் ஞானம் கிடைக்க வேண்டும்” என்ற ஆசை உங்களுக்கும்
வர வேண்டும்.
நமது வாழ்க்கையில் எந்த நிலைகள் இருந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின்
உணர்வை நமக்குள் வலிமையாக்கும் நிலைகள் வரவேண்டும்.
குரு காட்டிய அருள்வழியில் உயிரை ஈசனாக மதித்து அவனால் உருவாக்கப்பட்ட
உடலைச் சிவனாக நாம் மதித்தல் வேண்டும்.
இந்த உடலில் பகைமை புகாது… எதிரி வராது… அருள் உணர்வைக் கூட்டி… இனிப் “பிறவியில்லா நிலை
எனும் நிலை பெரும் நிலையாக…!” பேரின்பப் பெரு வாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எல்லா மகரிஷிகளையும்
வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.