ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 5, 2019

உடல் பற்று கொண்ட என்னுடைய சகோதரரின் உயிரான்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தேன் – ஞானகுரு


மகரிஷிகள் அருள் சக்தியைப் பெற்று இந்த உடலுக்குப் பின் சப்தரிஷி மண்டலத்தை அடைய வேண்டும் என்ற நிலையில் என்னுடைய சகோதரன் அதிகமாகப் பற்று வைக்கவில்லை.

அப்படி இருக்க வேண்டும்… இப்படி இருக்க வேண்டும்…! என்று இந்தக் கணக்கை தான் அவர் போட்டுக் கொண்டு இருந்தார்.

ஏனென்றால் நம்முடன் பழகிய அந்த உணர்வு வந்த பின் இந்த தியான வழி அன்பர்களின் உணர்வு துணை கொண்டு தான் அந்த ஆன்மாவை விண் செலுத்தி இந்த உணர்வின் தன்மை கரைத்தல் வேண்டும்.

ஏனென்றால் எனது சகோதரர் எனக்கு மூத்தவர் இங்கே தபோவனத்திலிருந்து பிரிந்தாலும் அவருக்கு இந்த எண்ணமில்லை.

என்னிடம் அவர் கேட்பார். எனக்கு அது இல்லை… இது இல்லை…! பையன் இப்படி இருக்கிறான்… அப்படி இருக்கிறான்… என்று சொல்லிக் கொண்டு இந்த உணர்வைத் தான் அதிகமாக வளர்த்தார். ஆனால் சப்தரிஷி மண்டலத்தை அடைய வேண்டும் என்ற பற்று அவருடன் இல்லை.

கடைசியில் “எனக்கு நெஞ்சு வலிக்கிறது…! என்று என்னிடம் சொன்ன போது நான் (ஞானகுரு) சொன்னேன்.
1.சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அந்த உணர்வின் தன்மை பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.
2.அந்த உணர்வை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள் என்று சொன்னேன்.
3.எனக்கு வலி இல்லை….! அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்ற எண்ணி உடலுக்குள் அதைச் செலுத்துங்கள்..! என்று சொன்னேன்.

அவர் எங்கே…? நான் நெஞ்சு வலிக்கிறது என்று சொல்கிறேன்… நீ இப்படிச் சொல்கிறாயே என்கிறார்…!

யார்…? என்னுடன் கூடப் பிறந்தவர். நான் சொல்வதை இதை அவரால் எண்ண முடியவில்லை. காரணம் இந்த “உடல் பற்று தான்…” அவருக்குள் அதிகமாகியது.

80 வயது ஆகிவிட்டது…! நான் போகிறேன்… என்று
1.இனி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அங்கே போங்கள்…! என்று சொன்னேன்.
2.அந்த உணர்வு அவர்களுக்குள் கொஞ்சம் கூட எட்டவில்லை.

காரணம் அவர் என் தாய் தந்தைக்கு ரொம்பத் தொல்லை கொடுத்து விட்டார். அதன் உணர்வு வரப்போகும் போது அந்த எண்ணங்கள் அந்த உறுதியான நிலைகள் மீண்டும் அவரைப் பிறவிக்கு இழுக்கும் தன்மை வந்தது.

இருந்தாலும் நம்முடன் அவர் வாழ்ந்த அந்த பழக்கத்தில் இருந்ததனால் உடலை விட்டுப் பிரிந்து சென்ற பின் அவரை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து விண் செலுத்த முடிந்தது. ஒளிச் சரீரம் பெறச் செய்ய முடிந்தது.

இதை போலத் தான் குடும்பங்களில் பற்று இல்லாமல் போனாலும் ஆன்மீக வழியில் அதாவது இந்தத் தியான வழி பற்றிலேயே இல்லாமல் இருந்தாலும் கூட உடலை விட்டுப் பிரிந்த அந்த உயிரான்மாக்களை
1.அந்த குடும்பத்தைச் சார்ந்தோர் யாம் சொல்லும் (ஞானகுரு) இந்தத் தியானத்தை வழிப் படுத்தி
2.அந்த உயிரான்மாக்களைப் பிறவி இல்லா நிலை அடையச் செய்ய வேண்டும்.
3.அவர் எப்படி இருந்தாலும் அந்த ஆன்மாக்களை… அந்தச் சூட்சம சரீரத்தை விண் செலுத்தி
4.இந்த உடலில் உள்ள நஞ்சுகளை அங்கே சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்திலே கரைத்து விடவேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் நாம் அவசியம் விண் செலுத்தியே ஆக வேண்டும்.