1.இந்த உடல் நமக்கு என்றுமே சொந்தமல்ல…!
2.நமக்குச் சொந்தமானது எல்லா உணர்வுகளும் உயிருடன் ஒன்றி ஒளியின் உணர்வாக
3.அகஸ்தியன் பெற்ற பேருண்மையை நாம் பெறுவதே ஆகும்.
4.அதைப் பெற முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
நமது குருநாதர் காட்டிய வழியில் உங்களை எல்லாம் அகஸ்தியன் பெற்ற ஆற்றல்களை
அதாவது அகஸ்தியன் பார்த்த இந்தப் பிரபஞ்சத்தையும் ஆதிசக்தியின் ரூபத்திலிருந்து எல்லாவற்றையும்
உங்களைப் பெறச் செய்கின்றோம்.
உங்கள் எண்ணங்களைப் பழகச் செய்து அகஸ்தியன் உணர்வுகளை எல்லாம் நுகரச்
செய்கின்றோம். ஆக… “கிரேதா…!”
1.நாம் எந்த உணர்வின் தன்மையைக் கவர்ந்து ஆழமாகப் பதிவு செய்கின்றோமோ
2.அதை நினைவூட்டும் பொழுது கிரேதாயுகமாகக் கவரும் சக்தி பெறுகின்றது.
இந்த உணர்வின் தன்மை உயிருடன் மோதி மீண்டும் இந்தத் திரேதாயுகத்தில்
(உடலுக்குள்) உணர்வின்ன் எண்ணங்கள் கொண்டு, நமக்குள் மாற்றும் சக்தி வருகின்றது.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம்க்குள் ஒவ்வொரு நிமிடமும் சேர்த்து
இந்தத் திரேதாயுகத்தில் நாம் மாற்றி இந்த உயிரின் உணர்வின் தன்மையை ஒளியாக
மாற்றுதல் வேண்டும்.
அதை ஒளியாக மாற்றும் பொழுது இந்த உயிர் எப்படி ஆனதோ இதைப் போல உணர்வின் அணுக்களை
மாற்றியமைத்துக் கொள்வதே நமது குரு காட்டிய அருள்வழி.
இந்த உடல் இருக்கும் பொழுதே, இந்த உணர்வைப் பெறுவோம்.
1.உடலின் இச்சைக்கு அநேகமாக யாரும் செல்லாதபடி உயிரின் இச்சையைச் சேர்த்து
2.அந்த உணர்வின் தன்மையை நாம் வளர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
3.அதைப் பெறுவதற்கு சக்தி கொடுத்திருக்கிறோம்.
4.அதை நீங்கள் பெறுவது உங்களுடைய நிலைகளில்தான் இருக்கின்றது.
கிடைக்கவில்லை… கொடுக்கவில்லை..! என்ற நிலை வராதபடி எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால்
இனி எதிர்காலம் மிகக் கடினமான காலமாக இருக்கும்.
அதனால் இந்த உணர்வை நாம் வளர்த்துக் கொள்வோம். அருளைப் பெருக்குவோம். இந்த
உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை என்ற நிலையில் முழுமை அடைதல் வேண்டும்.
இவ்வளவு நாள் கேட்டோம். நீங்கள் அதை அடைய வேண்டும். உங்கள் சொல்லைக்
கேட்டவர்கள் உணர்வுகளிலும் அதே உணர்வுகளைப் பெருக்கச் செய்ய வேண்டும்.
அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி ஒளியான உணர்வை அந்தத் துருவ
நட்சத்திரத்தின் உணர்வை நாம் அனைவரும் பெறுவோம்.