ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 17, 2019

எலெக்ட்ரானிக் கண்டுபிடிப்புகள் புதிது புதிதாக எப்படி வருகிறது…?

அரசர்கள் செய்ததது போலத்தான் இன்று விஞ்ஞானிகள் ஒவ்வொரு உணர்வின் தன்மையை வளர்த்து வளர்த்து காற்றில் கலந்து விஞ்ஞானம் வளர்ந்து வந்து விட்டது.

அன்று மெய் ஞானிகள் சொன்னது அனைத்தும் மனித உடலிலிருந்து எடுத்தார்கள்இன்று மனித உடலிலுள்ள உணர்வுகள் எதில் எதிலே கலந்திருந்ததோ அதை கெமிக்கல் கலந்து அறிகின்றார்கள்.

1.உலோகத் தன்மையை வைத்து மந்திரத்தினால் ஒருவன் சொல்லக்கூடிய எண்ணத்தை அறிந்தான்.
2.அதே சமயம் பூமிக்குள் இருக்கக்கூடிய நிலையை அறிந்தான்பூமிக்குள் ஆழமாக இருக்கக்கூடிய கல்லை அறிந்தான்.
3.பூமிக்குள் இருக்கக்கூடிய மண்ணை அறிந்தான்.
4.பூமிக்குள் இருக்கக்கூடிய பாஷாணத்தை அறிந்தான்.
5.அதிலிருக்கக்கூடிய உலோகத்தைப் பக்குவபடுத்தினான்.

தன் உடலுக்குள் இருப்பதை இருநிலைகள் வரப்படும் பொழுதுஒன்றுஇரண்டுமூன்றுநான்கு, ஐந்து, ஆறும் ஏழு, என்கிற பொழுது அது கடினமாகின்றது. அதற்குள் மறைந்த நுண்ணிய அலைகள் தெரிகிறது. அப்பொழுது உலோகத்தை அறியும் தன்மை வருகிறது.

இப்படி உலோகக் காலங்கள் வரப்படும் பொழுது உலோகத்தை ஆயுதமாக வைத்து இந்த மந்திரத்தை வைத்துசில நிலைகளைச் செயல்படுத்துகிறான்உலோகத்தின் தன்மை வரப்படும் பொழுது வெடிக்கும் தன்மை வருகின்றது.

இந்த உலோகத்தின் தன்மை வெடிக்கும் தன்மை வந்தவுடன்மந்திரங்களெல்லாம் அடிப்பட்டுவிட்டதுமந்திரமெல்லாம் நிற்காது…! “டம்டம்...!” என்று மந்திரம் சொல்லும் முன் போட்டு அடித்து விடுகின்றான்இயந்திரங்களுக்குப் பவர் வந்தது.

இன்று இயந்திரங்களுக்கு முன் மந்திரம் நிற்காதுஇப்பொழுது மந்திரத்தைப் போல இன்று கம்ப்யூட்டர் வந்துவிட்டதுஇந்தக் கம்ப்யூட்டர் வந்தபின் நாம் பேய்… அது... இது...! என்று சொன்னதை இன்று நாம் T.V. யில் பேயைப் பார்க்கிறோம்.

நம் கண்ணின் நிலைகளில் அன்று பேயைப் பார்த்தோம்இன்று உருவத்தின் நிலைகளைப் பேய்களைக் கண்ணில் பார்க்கிறோம்இதைப் போன்ற உணர்வின் தன்மை வரப்படும் பொழுது
1.கெமிக்கல் கலந்து இருப்பதனால் இந்தப் பேயின் உருவத்தை
2.இன்று படம் எடுக்க முடியும்சொல்வது அரத்தமாகிறதல்லவா.
3.விஞ்ஞானம் உருவாகும் பொழுது கெமிக்கல் கலந்தபின் தான் அதன் நிலையை அறிகின்றோம்.

சிறுநீருக்குள் ஒவ்வொரு உணர்வின் தன்மை எது எது கலந்திருக்கிறது...? என்பதை கெமிக்கல் வந்தவுடன்அதன் கலர்கள் மாறுகின்றது.

இதைப் போலத்தான் இவன் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை மனித உணர்வுக்குள் வரப்படும் பொழுது இன்று ஆவியை நாம் படம் பிடிக்க முடியும்முந்தைய நாட்களில் படம் பிடிக்க முடியாது.

இரசாயணத் தன்மையுடைய நிலைகள் நமக்குள் கலந்து கலந்து மனித உணர்வுக்குள் வந்தபின் அதில் சிக்கியது தான் “எதிர்பாராத கண்டுபிடிப்புகள்…!” இவையெல்லாம் கண்டுபிடித்து கம்ப்யூட்டராக வந்தது.
1.இயந்திரத்தின் துணை கொண்டு மனிதனையே
2.உருக்குலைக்கும் நிலைக்கு இன்று வந்துவிட்டது.