ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 16, 2019

குருநாதர் காட்டிய அருள் வழியில் எம்முடைய சேவை…!

யாம் (ஞானகுரு) உள்ளத்தாலே எல்லோரையும் தெய்வமாகத் தான் மதிக்கின்றோம். யாரையுமே மனிதன் என்ற நிலைகள் கொண்டு அவர்கள் எந்தத் துன்பப்பட்டு எந்த இன்னல்கள் படுகின்றார்களோ அந்த இன்னலிலிருந்து மீள வேண்டும் என்றுதான் யாம் இந்த ஜெபம் எடுத்தது.

ஜெப காலங்களில் நல்ல அலைகளைப் பரப்பி நீங்கள் எல்லோரும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்றும் உங்களை அறியாமல் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கக்கூடிய இன்னல்களிருந்து மீட்க வேண்டும் என்பதற்காகவும் தான் எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியை அபரிமிதமாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

சில சிக்கல்களிலிருந்து நாம் மீள முடியாத நிலைகளில் இருக்கிறோம். அதிலிருந்து மீட்டிட அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்துவதற்குத் தான் யாம் ஜெபத்திலிருக்கின்றோம்.

எம்முடைய நிலைக்கு இருக்கும்போது வேறோரு நிலை. ஆனால் மகரிஷிகளின் அருள் ஒளி வரப்படும்பொழுது எல்லோரும் அந்த நிலை பெறச் செய்வதற்குத்தான் இந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியதுதானே தவிர எமக்காக இல்லை.

1.நீங்கள் ஒவ்வொருவரும் சிரித்த முகத்துடன் இருந்தால்தான் எமக்கு அந்தச் சக்தி என்று பல முறை யாம் சொல்லியிருக்கிறோம்.
2.யாரையும் குறை கூறியோ அவர் செயல்களின் நிலைகளோ செயல்படுத்துவதற்கு அல்ல.
3.இதைத்தான் ஒவ்வொரு நிமிடமும் யாம் குருவிடம் வணங்குவதெல்லாம்
4.ஜெபம் பண்ணுவதெல்லாம் ஒவ்வொரு மனிதனுடைய உயிரைத்தான் அவர்கள் நல்லவராக இருந்தாலும் எதுவாக இருந்தாலும்.

நீங்கள் எல்லோரும் வளர வேண்டும் என்று எதிர் பார்க்கின்றேனே தவிர ஒருவருக்கு ஒருவர் முகம் கோணி முகம் சுருங்கி இருப்பதைப் பார்ப்பதற்காக வேண்டி யாம் இதைச் செய்யவில்லை.

ஏனென்றால் யாம் பல இன்னல்களைப் பட்டோம். மகரிஷிகளின் அருள் ஒளியை யாம் பெற்றோம். அதை நீங்களும் பெறுவதற்குத்தான் உங்களிடம் யாம் உபதேசிப்பது.

குருநாதர் எமக்குப் பல ஆற்றலான சக்திகளை கொடுத்தாலும் காட்டிற்குள் எம்மைத் துன்புறச் செய்து இந்த உணர்வின் எண்ணங்கள் மற்ற மிருகங்கள் பக்கம் அது சாடும்போது அதனுடன் நிலைகள் என்னவாகிறது என்று காட்டினார். அதனுடைய உணர்வின் தன்மையை நமக்குள் இருக்கக்கூடிய சக்தியைக் கொண்டு துன்புறுத்தக்கூடாது என்றார்.

அதைப்போன்றுதான் இப்போது ஒருவருடைய உடலிலிருந்து துன்பமூட்டுவது ஒரு ஆன்மா என்றால் கடுமையான நிலைகள் கொண்டு வாக்காக அதிகமாக எண்ண அலைகளை பாய்ச்சினால் இது போய் அதை அடக்கும்.

ஆனால் அவருடைய உடலிலுள்ள நல்ல குணங்களை அது மாற்றிவிடும். அந்த மாதிரித் தொல்லையும் உண்டு.
1.அதற்காக அந்த மெய் ஞானியினுடைய அருள் ஒளியை எண்ணத்திற்குள் எண்ணச் செய்து அதை சுவாசிக்கச் செய்து
2.இந்த உணர்வின் ஆற்றலை பெருக்கச் செய்வதற்குத்தான் இதைச் செய்கின்றோம்.

இவையெல்லாம் மற்றவர்கள் பேசுவது போன்று நாம் ஜோசியம் சொல்லி சாமியாராக வந்து மற்றவரிடம் புகழ் தேடுவதற்காக அல்ல.

ஒவ்வொருவருடைய நிலைகளிலும் மகிழ்ச்சியான எண்ணங்களை எப்பொழுது வெளியிடுகிறீர்களோ அந்த மகிழ்ச்சியான எண்ணத்திலே தான் எமக்குள் எடுத்துக் கொண்ட சக்தியின் தன்மை யாம் பார்க்க முடியுமே தவிர
1.அதுவரையிலும் எம்மைத் திட்டினாலும் திட்டுபவரைத் திட்டியதாக எண்ணுவதில்லை.
2.அங்கே உங்களிடம் அந்த மெய் ஒளியின் நிலைகளில் மகிழ்ச்சியைக் காணுவதுதான் என்னுடைய வழி.
3.யாருடைய நிலைகளையும் புண்படுத்துவதில்லைபுண்படும் நிலைகளுக்கு விடமாட்டேன்.
4.அதற்காக வேண்டி அந்த உடலில் இருக்ககூடிய உயிரின் தன்மையை பிரார்த்திப்பேன்.

அந்த உடலின் நிலைகளை மகிழ்ச்சியின் நிலைகளுக்கு பெற வேண்டும். ஒவ்வொரு நிமிடத்திலும் நமக்குள் மகிழ்ச்சியின் நிலைகள்தான் தோன்ற வேண்டும்.

சூரியன் ஒளியாகச் சென்றாலும் சப்தரிஷி மண்டலங்கள் ஒளியாகச் சென்றாலும்... பாசத்தின் நிலைகளிலேதான் பல ஆயிரம் மக்களின் நிலைகளில் எண்ணங்கள் உருவாக்கச் செய்து அந்த உணர்வின் அலையை எடுத்துத்தான்  மனிதர்களாக வாழ்ந்தார்கள் மகரிஷிகள்.

தங்கள் எண்ணத்தின் நிலையை ஒளியாக மாற்றி விண் சென்றார்கள். அவர்களைப் போன்று நீங்களும் பேரொளியாக வளர வேண்டும் என்பதற்காக வேண்டித்தான் ஒவ்வொரு நிமிடமும் யாம் செயல்படுகின்றோம்.