
நம் ஜீரண உறுப்புகளுக்குள் நடக்கும் சில அதிசயங்கள்
சங்கடமான வார்த்தைகளை நாம் கேட்டு விட்டு வீட்டிலே வந்து அமர்ந்து சாப்பிட்டால் என்ன
நடக்கும்…? எவ்வளவு தூரம் அவர்கள் வேதனைப்பட்டார்களோ அந்த உணர்வுகள் சாப்பாட்டுடன் கலந்து இரைப்பைக்குச்
செல்கின்றது.
1.வேடிக்கையாகத்தான் நாம் கேட்டிருப்போம்… பார்த்திருப்போம்.
2.கேட்டு விட்டு வந்து நாம் சாப்பிடும் போது இந்த
உணர்வு உள்ளே சென்று விடுகின்றது.
இரைப்பையிலே சென்று அந்த வேதனையான
உமிழ் நீரும் நாம் சாப்பிட்ட ஆகாரத்தில் உள்ள சத்தும்
இரண்டும்
அங்கே இருக்கும்.
கோழி குருவி இவைகள் எல்லாம் தன் உணவை எடுக்கின்றது. கோழி கொத்தித் தின்னும்…
கூப்பிட்டு குஞ்சுகளுக்குக் கொடுக்கும்.
குருவி மற்ற பறவைகள் எங்கேயோ சென்று அந்த இரையை எடுத்துத் தன் கூட்டிற்கு வருகின்றது. குஞ்சுகள் “ஆ…” என்று வாயைத்
திறக்கும். எடுத்து வந்த இரையைப் போடும்… போட்ட பின் குஞ்சுகள் வாயை மூடிக்கொள்ளும். அந்த உணவால் வயிறு நிரம்பி விடுகின்றது.
இதைப் போன்று தான் சிறுகுடல் அதனுடைய பசியின் நிலையில் உந்தப்படும் பொழுது இரைப்பையில் இருந்து வாயைத்
திறக்கும். அந்த நேரத்திற்குத் தகுந்தாற்
போல் இரைப்பையில் இருந்து சிறுகுடலுக்குள் “சொத்…” என்று விழும்… டபக் என்று மூடிக்கொள்ளும்.
அது மூடி ஜீரணித்து ரசத்தை வடிக்கும்.
கீழே இருப்பதற்குப் பசிக்கும்போது இதைத் தள்ளி விடும்.
அதிலே வடித்து எடுத்துக் கொள்ளும். இப்படி வடித்துக் கொண்டே இருக்கும்.
சத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு
விஷத்தை வடித்து வெளியே அனுப்பும்.
விஷத்தை வடிக்கும் அந்தத் திறன் இருந்தாலும் நல்ல சத்துள்ள ஆகாரத்தை
உட்கொண்டோம்
1.சாப்பாட்டில் கலந்துள்ள விஷத்தைத் தான் அதற்குப் பிரிக்கத்
தெரியும்.
2.ஆனால் சாப்பாட்டுடன் சேர்த்து நாம் நுகர்ந்த
வேதனையான அந்த உணர்வை… (விஷம்)
3.நாம் கேட்டறிந்து நுகர்ந்த இந்த உணர்வு
இரைப்பையுடன் சேர்ந்து விட்டால் அந்த உணர்வான சத்தை சிறுகுடல் கீழே இழுக்கும் திறக்கும்.
3.ஆனால் கோபமாகப் பேசியதைப்
பார்த்து இருந்தால் ஆ…! என்று வாயைத் திறந்து விடும்.
மிளகாயை வாயிலே போட்ட பின் நம் வாயை மூட முடியுமா…? காரத்தை
நீங்கள் வாயிலே போட்டு வாயை மூடிப்
பாருங்கள். மூட முடியுமா…? ஸ்… ஆ… என்று வாயைத் திறந்து அலறிக் கொண்டுதான் இருப்போம்… மூட மாட்டோம் முடியாது.
அதே
மாதிரி அந்த எரிச்சலான உணர்ச்சிகள் சிறு குடலை விரித்து விடும்.
அப்படி ஆ…! என்று அலறும் போது “கட புடா…” என்று உடலுக்குள் ஒரு விதமான உணர்ச்சிகள் தோன்றும். சத்தைப்
பிரிக்காதபடி அப்படியே விட்டுவிடும்.
சண்டை போடுவதைப் பார்த்துவிட்டு வந்த பின் இந்த நிலை ஆகும்.
ஒருவர் கோபமாகப் பேசுவார்… இன்னொருவர் வேதனைப்படுவார்… இரண்டும் இருக்கும். ஆனால் அந்த உணர்வை நுகர்ந்த பின் நம் குடலுக்குள்
இந்த உணர்ச்சிகள் தோன்றுவதை நிச்சயம் பார்க்கலாம்…
தெரிய முடியும்…!
நான் சொல்வது அனைத்தையுமே நீங்கள் காண முடியும்.
இதை
நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச்
சொல்கின்றேன்.
1.புறத்தில் நாம் எப்படிச் செயல்படுகின்றோமோ அதைப் போன்று தான்
2.அகத்திற்குள்… நம் உடலுக்குள் இருக்கக்கூடிய உறுப்புகளின் இயக்கமும்… அணுக்களின் இயக்கமும்.