ஒரு கம்ப்யூட்டரில் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்று இயங்கும் போது எதன்
அழுத்தமோ அதன் வழி நாம் தெரிந்து கொள்ள முடிகின்றது. விஞ்ஞானம் நிரூபிக்கின்றது.
ஒரு செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துகின்றார்கள் விஞ்ஞானிகள். அப்பொழுது அதை இராக்கெட்டில்
எடுத்துக் கொண்டு போகும் போது ஒவ்வொரு கோளும் எத்தனையோ திசைகளில் வருகின்றது.
ஆனால், மற்றது மோதிடாதபடி இந்த உணர்வுகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்து
ரெக்கார்டு விடுகின்றார்கள். இராக்கெட் இத்தனை டிகிரியில் போக வேண்டும் என்று
அதில் பதிவாக்கிவிடுகின்றான். அந்த உணர்வாகி அந்த டிகிரி வந்தவுடன்
சுற்றுகின்றது.
திசை மாற்றி அனுப்புகின்றான் என்றால் ஒன்றும் தெரியவில்லை. கம்ப்யூட்டரில்
எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலையில் மாற்றுகின்றான். இது வந்த பிற்பாடு தான்
இராக்கெட் வெளி வருகின்றது. அப்பொழுது திசை மாறிச் செல்கின்றது.
இதைப் போன்றுதான் அருள் ஞானத்தின் உணர்வை உங்களுக்குள் சேர்க்கப்படும் பொழுது
தவறு என்ற நிலைகளில் “ரிமோட்”. இந்தத் தீமைகளிலிருந்து விடுபடும் ஞானம் உங்களுக்கு
வரவேண்டும் என்பதற்குத்தான் இதையெல்லாம் சொல்கின்றேன்.
ஞானிகள் காட்டிய உணர்வுகள், “நாம் எதைப் பெறவேண்டும்?” என்று அன்று சொன்னார்கள்.
இராக்கெட்டின் இயக்கத்தின் மூலமாக விஞ்ஞானி இன்று நிரூபித்துக் காட்டுகின்றான்.
தரையிலிருந்தே இயக்குகின்றான்.
ஆனால் நாம் இங்கிருந்து கொண்டே “சண்டாளப் பயல்.., இப்படிச் செய்கிறான்..,”
என்று இயக்குகின்றோம். அது அவனை இயக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அவனுக்குப் புரையோடச்
செய்கின்றது.
ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தான் என்றால் ஆக்சிடென்ட் ஆகின்றது.
அப்பொழுது மனிதனுக்கு மனிதன் இயக்குகின்றோம் அல்லவா?
அதே சமயத்தில் அன்பான நிலைகளில் “எனக்கு உதவி செய்தான்” என்று எண்ணினால் அங்கே
விக்கல் பாய்கின்றது. அந்தச் சந்தோசமான நிலைகள் இரண்டு பேருக்கும் வருகின்றது.
ஏனென்றால், இந்த உணர்வின் இயக்கங்கள் எல்லாவற்றையும் சூரியனின் காந்தப்
புலனறிவுகள் கவர்கின்றது. பதிவின் உணர்வுகள் மீண்டும் நினைவாகின்றது. அதனின்
நிலைகள் நமக்குள் எப்படி இயக்குகின்றது? என்ற இந்த நிலைகளை நாம் தெளிவாகத்
தெரிந்து கொள்ள வேண்டும்.
“இந்த உடலுக்குப் பின்.., நாம் எங்கே செல்ல வேண்டும்..,?” அந்த உணர்வைப் பெறச்
செய்வதற்குத்தான் கோவிலைக் கட்டினார்கள் ஞானிகள்.
விண்ணுலக ஆற்றலை, விண் சென்ற அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை மனிதர்கள்
ஒவ்வொருவரும் பெற்று இந்த வாழ்க்கையில் வந்த இருளை நீக்கி அழியா ஒளிச் சரீரம் பெறும்படி
செய்தார்கள்.
கோவிலுக்குச் சென்றால் நாம் அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் விண்ணின்
ஆற்றலைப் பெறுகின்றோமா?