
கை கால் வலி வயதின் முதிர்வினால் வருவதில்லை… தீய உணர்வுகள் விளைந்ததன் முதிர்வால் வருவது
தபோவனத்தில்
சவுண்டால் மரத்தை அதிகமாக வைத்தோம். அதற்குப் பக்கத்தில் வேப்ப மரத்தை வைத்தோம். சவுண்டாலின்
சத்து அதிகமான பின் வேப்ப மரம் வளரவே இல்லை
1.அந்தச் சவுண்டால் மரத்தை வெட்டியவுடன்
2.இதற்கு
ஜீவன் கிடைக்கின்றது… வேப்பமரம் நன்றாக வளர்கின்றது.
இதைப் போல
நமக்குள் தீய உணர்வின் விளைவுகள் அது ஓங்கி வளரப்படும் பொழுது நமக்குள்
இருக்கும் நல்ல குணங்களை வளர விடாதபடி தடுத்து இது அதிகமாகப் படரும் நிலை வந்து
விடுகின்றது. அப்பொழுது நல்ல குணங்கள் அனைத்தும் வளர்ச்சி
குன்றுகிறது.
இந்தப்
பூமியில் மரம் செடி, கொடிகள் வளர்வது போன்று
1.நாம்
எண்ணிய உணர்வின் வித்துகள் எதுவானாலும் அந்த உணர்வின் சக்தி உந்தப்பட்டு
2.நாம்
சுவாசித்த உணர்வுகள் அனைத்தும் நம் உடலுக்குள் இந்தப்
பூமிக்குள் படர்வது போல இரத்தத்துடன் கலந்து
3.அந்த
அணு செல்களாக வளர்ந்து நம் உடலின் தன்மை ஆவியாக மாறி அதனதன்
உணர்வுக்கொப்ப அது கூடி…
4.உடலுடன்
உறைந்து தசைகளாக மாற்றி அதில் விளைந்த உணர்வின் சத்து “வித்தாக வெளிப்படும்…”
ஒரு வித்தின்
தன்மை உருவான பின் செடியாக மாறுகின்றது. அப்போது “அந்த வித்தைக் காண முடிவதில்லை…”
ஆனால்
வித்தின் சத்து செடியாக ஆவது போல அதனின் முதிர்வுக்குத்
தக்கவாறு பூ பூத்துப் பிஞ்சாகிக்
காயாகி முதுமையாகும் பொழுது அந்த வித்தின் தன்மையை மீண்டும் நாம் கண்களிலே
பார்க்கின்றோம்.
அந்த வித்தின் தன்மை போல் எந்த வேதனையை நாம் கண்ணுற்றுப் பார்த்து
அதைக் கேட்டுணர்ந்து நமக்குள் பதிவு செய்கின்றோமோ அது
விளைந்து விடுகிறது.
அந்த வேதனையை
அடிக்கடி நாம் எண்ணும் பொழுது அதை நுகர்ந்து உடலுக்குள் வரும் பொழுது
அந்தச் செயலும்… ரத்தத்தில் இருந்து
ஆவியாக மாறி அதன் முத்துக்களை விளைய வைத்து
1.நமக்குள் முழுமையாகும் போது தான் கேன்சர் ஆஸ்த்மா ரத்தக் கொதிப்பு கை கால்களில் புண் இருதயத்திலே வீக்கம் என்று
2.அந்த
உணர்வுகள் எங்கே அதிகமாகப் படர்கிறதோ
3.எந்தெந்த
குணத்தின் தன்மை இயங்கும் பொழுது அந்தந்த
உறுப்பில் தேங்கி விடுகின்றதோ அவை அங்கே ஓங்கி
வளர்க்கப்படும் பொழுது
4.உந்திக் கோபத்துடன் ஒரு பொருளைத்
தூக்கினோம் என்றால்
5.ஆத்திரமும் வேதனையும் கொண்டு “இரு நான்
பார்க்கிறேன்…” என்ற வேகத்துடன் குனிந்து நிமிர்ந்தால்
6.இந்த
வேதனையான உணர்ச்சிகள் உடலில் அழுத்தமாகி… முழங்காலிலும் மூட்டுகளிலும் விஷத் தன்மை கூடிவிடும்.
ஆனால் முதலில் ஒன்றும் தெரியாது…! கடைசியில் அங்கே மடக்கி இயங்கும்
இடங்களில் விஷம் பட்டுவிடும். காலைத்
தூக்கினால் மடக்கினால் கால் வலிக்கின்றது மேல்
வலிக்கின்றது என்று வரும்.
காரணம்…
1.மடக்கும் போது நல்ல ரத்தங்கள் பிரிந்து விடுகின்றது.
2.அந்த
உணர்ச்சியின் தன்மை நீரை இழுத்து வளர்த்துக் கொள்ளும் இரத்தம் தங்குவதற்கு வழி இல்லை.
3.மூட்டு
வலி கை கால் வலி என்று வந்துவிடும்.
வேதனையான
உணர்வை எண்ணி இந்த உணர்வின் சக்தி வரப்படும் பொழுது அங்கே எதை வளர்த்ததோ இந்த உணர்வின் சக்தி தன்னாலே வரும். நாம் தவறு செய்யவில்லை.
ஏனென்றால் நம்
உயிரின் இயக்கங்கள் இந்த உணர்வுக்குத் தக்க இந்தப் பூமியில் எப்படி நடக்கின்றதோ அதைப்போல நம் உடலில் சேர்த்து விடுகின்றது.
இதை நீக்குவது
யார்…?
1.அதை
நீக்கச் செய்வதற்குத் தான் உங்களுக்கு
அடிக்கடி நினைவுபடுத்தி
2.ஞானிகளின்
சக்திகளை உங்களுக்குள் பதிவு செய்து கொண்டு வருகிறேன்.