7/30/2018

பதினெட்டாம் பெருக்கு - பதினெட்டாவது நிலையை அடைய வேண்டும் என்று தான் ஐயப்பன் ஆலயத்தில் காட்டுகின்றார்கள்...!


பதினெட்டாம் படிப் பெருக்கு என்று ஆறுகளில் பதினெட்டுப் படிகளை வைத்திருப்பார்கள்.

பதினெட்டுப் படிகளிலும் நீர் நிலைகள் பெருகி வரப்படும் போது அந்த வருடம் தாவர இனங்களின் சக்தி வெள்ளாமை பெருகி அதன் வளர்ச்சியின் தன்மைகள் முழுமை பெறும்.

நெல்லோ அது சம்பந்தப்பட்ட மற்ற தானிய வகைகளோ மற்ற பயிர்களோ அது பெருகும் என்று இப்படிப் பதினெட்டாம் படி பெருக்கு என்று வைப்பார்கள்.

இதை உணர்த்துவதற்காக நீர் நிலைகள் ஓடும் பக்கங்களில் இந்தப் பதினெட்டுப் படிகளை வைத்துக் காட்டியிருப்பார்கள்.
1.மழை நீர் பெய்து பதினெட்டுப் படிகளும் முழுமையாக அடைந்து செல்லும் போது
2.மக்கள் சுபிட்சமாக வாழ்வதற்குத் தேவையான உணவு கிடைக்கும் அந்தச் சக்தி பெற்ற நாள் என்று எண்ணச் செய்வதற்காகப்
3.பதினெட்டாம் பெருக்கு – ஆடிப் பெருக்கு என்று காட்டினார்கள் ஞானிகள்.

ஆனால் அதே சமயத்தில் மழை நீர் சரியாகப் பெய்யாதபடி பதினெட்டுப் படிகளுக்குக் கீழ் நீர் சென்றால் பயிரினங்களின் வளர்ச்சிகளும் அந்த வருடத்தில் குறைந்தே இருக்கும் என்ற உண்மையைக் காட்டினார்கள் அன்று ஞானிகள்.

இப்போது பல தரப்பட்ட தாவர இனங்களை வளர்க்கின்றோம். அது வளரவதற்குக் தேவையான சத்து சரியாகக் கிடைக்கவில்லை என்றால் தழைச் சத்து மணிச் சத்து என்று பல உணவுகளைச் சத்தாக அதற்குக் கொடுக்கின்றோம்.

அப்பொழுது அந்தத் தாவர இனங்கள் செழித்து வளர்ந்து அது தன் உணர்வின் சத்துகளைப் பெருக்கி முழுமையான மகசூலைக் கொடுக்கின்றது. அதற்கு வேண்டிய சத்தைப் பெருக்கி முழுமை அடையச் செய்கின்றோம்.

அதைப் போன்று தான் தனது வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எந்த எண்ணங்களைப் பெருக்க வேண்டும்…? பத்தாவது நிலையான கல்கியை எப்படி ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்று காட்டுகின்றார்கள் ஞானிகள்.

ஏனென்றால் உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ அதைப் போன்று உணர்வுகள் அனைத்தையும் ஒளியின் உணர்வாக மாற்றிப் பத்தாவது நிலையை அடைந்தவர்கள் தான் மகரிஷிகள்.

எட்டுத் திக்கிலும் எது வந்தாலும் அந்த உணர்வினை ஒளியாக மாற்றி  ஒளியின் சரீரமாகப் பெருக்கிக் கொண்டே வாழ்ந்து கொண்டிருப்பவர் துருவ மகரிஷி.

1.அஷ்ட திக்கிலிருந்து (எட்டு) வரும் தீமைகளை அகற்றித்
2.தீமையற்ற உணர்வைத் தன் உடலுக்குள் அணுக்களாகப் பெருக்கி
3.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெற வேண்டும் (பத்து) என்று அன்று பல நிலைகளில் எடுத்துக் கொண்டவர் தான் ஐயப்பன்.

இளமையிலேயே கூடு விட்டுக் கூடு பாய்ந்து பல சரீரங்களை அவர் எடுத்தாலும் கடைசியில் அஷ்ட திக்கிலிருந்தும் மதங்களாலோ மற்ற இனங்களாலோ வரும்
1.பலருடைய எண்ணங்களிலிருந்து எந்த ருபத்தில் எது வந்தாலும்
2.அதைத் தனக்குள் வராதபடி அடக்கி உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகப் பெற்றார்.
3.சப்தரிஷி மண்டலத்தில் இன்றும் பேரொளியாகத் திகழ்ந்து கொண்டுள்ளார்.
4.இந்த உண்மையினைத் தான் அங்கே பதினெட்டுப் படிகளை வைத்துக் காட்டி உணர்த்தப்படுகின்றது.

அதன் வழியில் யார் யார் செல்கின்றாரோ அந்தப் பதினெட்டாவது நிலை அடைந்தால் அங்கே சப்தரிஷி மண்டலத்தை அடைய முடியும் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.