ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 25, 2018

தமிழ் சித்தாந்த முறைப்படி “ஆடி... ஆடிப்பெருக்கு...!


விஷத்திற்கே அதிக இயக்கம். ஒவ்வொரு உயிரின் தன்மையும் 27 நட்சத்திரங்களில் ஒன்றின் ஆற்றல் கொண்டது தான். நட்சத்திரங்களிலும் ஆண் பெண் என்ற நிலை உண்டு.

ஒரு நட்சத்திரத்திற்குள் இருக்கும் விஷத்தின் இயக்கச் சக்தி குறைந்துள்ள மற்றொன்றை எதிர்த்துத் தாக்கும் போது இது பெண்பால் கொண்ட நட்சத்திரத்தின் ஆற்றலும் ஆண்பால் கொண்ட நட்சத்திரத்தின் ஆற்றலும் இணைக்கப்பட்டு
1.ஆண் பெண் என்ற நிலைகளில் இந்த உணர்வு ஒன்றுடன் ஒன்று மோதி
2.துடிப்பின் நிலை வரும் போது தான்
2.தனக்குள் கவரும் சக்திகளை அணுக்களாக மாற்றும் திறன் பெறுகின்றது.

ஆடி மாதம் பலமாகக் காற்று வீசுவதைப் பார்க்கின்றோம். அப்படி உருவாகும் அந்தக் காற்றினால்
1.இந்தப் புவிக்குள் இருக்கும் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி அசைந்து செல்லும் பொழுது
2.அது அது நுகர்ந்த உணர்வுகளைத் தனக்குள் வளர்த்து
3.அதனின் வளர்ச்சிகள் அது பெருகிப் பெருகிப் பெருகி...!
4.நாம் எப்படி மனிதனாக வளர்ந்து வந்தோம் என்ற நிலையை உணர்த்தும் நாளாகவும்... உணரும் நாளாகவும்...
5."ஆடிப் பெருக்கு...!" என்று அமைக்கின்றார்கள் ஞானிகள்.

ஆடி மாதத்தில் அணுக்களின் அசைவின் நிலைகள் கொண்டு காற்றலைகள் ஒன்றுடன் ஒன்று அதிகமான எதிர்மறையான நிலைகளில் சக்தி ஒவ்வொன்றும் ஆட்டி அசைத்துப் படைக்கின்றது.

இதைப்போல எதிர்மறையான அணுக்களின் தன்மை மோதும் போது அந்த உணர்வின் அசைவின் இயக்கங்களும் தன் தன் இசைக்கொப்ப ஆடுவதும் சுழற்சியாவதும் போன்ற நிலைகள் ஏற்படுகின்றது.

ஆடி மாதத்தில் பார்க்கலாம் எதிர்மறையான வழிகளில் காற்று வரப்படும் போது ஒரு சமயம் இந்தப் பக்கம் தள்ளும்... ஒரு சமயம் அந்தப் பக்கம் தள்ளும்... சுழன்றாடும் தன்மைகள் வரும்...!

அதனால் தான் இதற்குத் தமிழ் சித்தாந்த முறைப்படி “ஆடி...!” என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.  ஏனென்றால் காரணப் பெயரை வைத்துத் தான் இந்த உயிர்களின் இயக்கமும் பன்னிரண்டு இராசிகளின் தன்மையும் தெளிவாக்கியுள்ளார்கள்.

இந்தப் பன்னிரண்டு இராசிகளிலும் அதாவது ஒவ்வொரு மாதத்திலும் நாம் எதனை அறிந்து கொள்ள வேண்டும்...? எதனை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்...?

தொழில் நிமித்தமாகவோ அல்லது வாழ்க்கையின் நிமித்தமாகவோ அன்றாடம் எத்தனையோ வேலைகளைச் செய்து வந்தாலும்
1.இந்தப் பூமியின் உணர்வின் இயக்கங்களையும்
2.பல கோடிச் சரீரங்கள் பெற்று பல பல உணர்வுகள் மாற்றமாகி அதனுடைய பெருக்கமாகி
3.நம்மை மனிதனாகப் பெருக்கியது எது...? என்ற நிலைகளை ஒவ்வொருவரும் சிந்தித்து
4.அடுத்து இந்த மனித உடலிலிருந்து நாம் பெருக்க வேண்டிய நிலைகள் எது...? என்ற நிலைகளை உணர்த்துவதற்காகத் தான்
5.அன்றைய ஞானிகள் ஆடிப் பெருக்கை வைத்தார்கள்.

மனித உடலில் விண்ணின் ஆற்றலைச் சேர்த்து மெய் ஒளி மெய் ஞானத்தைப் பெருக்கும் நிலையாக ஞானிகள் காட்டினார்கள்.

ஒவ்வொரு மாதமும்...
பனிரெண்டு ராசிகளிலும்...
வருடம் முழுவதற்கும்...
மனித குலத்தை உய்விக்கும் நிலையாக நல்ல உணர்வுகளைப் பெறுவதற்காகச் சாஸ்திரங்களைக் காட்டினார்கள் ஞானிகள்.

ஆனால் ஆடி மாதம் கல்யாணம் செய்யக் கூடாது...! பொண்ணு மாப்பிள்ளைக்கு ஆகாது...! ஆடி மாதம் நல்ல காரியங்களே செய்யக் கூடாது என்று அதைச் “சாங்கிய சாஸ்திரமாகத் தான்... தலை கீழாக மாற்றி வைத்திருக்கின்றோம்...!”

சற்று சிந்தித்துப் பாருங்கள்...!