மனித வாழ்விலே புனிதம் பெறும்
இந்த உணர்வின் சக்தியை நமக்குள் விளையச் செய்யும் தன்மையை அன்று மெய் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
நம் உடலின் தன்மை பிரபஞ்சமாகவும்
நம் எண்ணத்தின் தன்மை நட்சத்திரமாகவும் அதில் விளைந்த உணர்வின் சக்திகள் உடலாகவும்
உடலுக்குள் விளைந்த உணர்வின் எண்ணங்கள் அனைத்தையும் (சூரியன் இந்தப் பிரபஞ்சத்தை ஒளியாக
மாற்றுவது போல்) ஒளியாக மாற்றும் தன்மையை அகஸ்தியன் காட்டினான்.
அகஸ்தியனுக்குப் பின் வந்த எல்லா
ஞானிகளுடைய நிலைகளையும் உணர்ந்தறிந்த நமது குருநாதர் எமக்குள் அதை உபதேசித்தார்.
உணர்வை ஒளியாக மாற்றிடும் சக்தியை
எனக்குள் வளர்த்துக் கொண்டேன். அப்படி வளர்த்த நிலைகளை நீங்களும் பெற வேண்டும் என்ற
எண்ணத்தில் தான் இதைப் பேசுகின்றேன்.
அதன் வழியில்
1.நீங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்
என்று எண்ணுகின்ற வரையிலும் எனக்கு லாபம்
2.நீங்கள் வாழ்ந்து மகிழ்ச்சியாகச்
சொல்கிற வரையிலும் எனக்கு லாபம்.
3.நாம் அனைவரும் ஒன்றாகச் சேர
வேண்டும் என்று
4.நாம் என்ற நிலைகளிலே தான் இதைப்
பேசுகின்றேனே தவிர
5.”நான்...!” என்ற நிலையே எனக்கு
(ஞானகுரு) இல்லை.
6.நாம் என்ற நிலைகள் தான் நாம்
அனைவரும் சேர்ந்தால் தான் அதை இயக்க முடியும்.
ஏனென்றால் சக்தி வாய்ந்த ஞானிகள்
அருளாற்றல் மிக்க சக்தியை அணுக வேண்டும் என்றால் அதற்குண்டான வலு வேண்டும்.
ஒரு கனமான பொருளைத் தூக்க வேண்டும்
என்றால் ஒரு நூலால் தூக்க முடியாது. பல நூல்களை ஒன்றாகத் திரித்து அதனுடைய தன்மை கொண்டு
தூக்கப்படும் போது தான் கனமான பொருளைத் தூக்க முடிகின்றது.
அது போல் நாம் எல்லோரும் சேர்ந்து
அந்த வலு கொண்ட எண்ணத்தால் இழுக்கும் போது ஞானிகள் அருளை எளிதில் நுகர முடியும்.
1.பிறவா நிலை எய்திய அந்த ஞானிகளின்
ஆற்றல் மிக்க நிலைகள்
2.நெருப்புக்குச் சமம். நெருப்பென்றாலும்
பரவாயில்லை.
3.அதைக் காட்டிலும் கடினமான நெருப்பு
(ஆற்றல் மிக்க கதிரியக்கச் சக்திக்கு ஒப்பானவர்கள்)
அணுவைப் பிளந்து அணுவின் தன்மையை
அது வெடிக்கச் செய்யும் போது அதனுள் இருக்கக்கூடிய ஆற்றல் கடினமான இரும்பு உலோகத்தையும்
உருக்கிவிட்டுத் தன் அணுவின் தன்மை அது வளர்த்துக் கொள்கின்றது (அதைப் போல பல மடங்கு
ஆற்றல் கொண்டவர்கள் ஞானிகள்)
சாதாரண மனிதராக இருக்கும் நாம்
நம்முடைய எண்ணங்கள் கொண்டு அந்த ஞானிகளின் உணர்வலைகளை எடுப்போம் என்றால் என்ன ஆகும்...?
1.அந்த ஞானிகளின் உணர்வுகள் பட்டவுடன்
நம்முடைய எண்ணம் சுக்கு நூறாகி
2.நம்முடைய உணர்வின் ஒலிக்குள்
இருப்பதை அது கவர்ந்து அது தான் வளருமே தவிர
3.அதை நுகர்ந்து நமக்குள் சேர்த்து
நமக்குள் இருளை நீக்கும் சக்தியாக அதைக் கவர
4.நம் எண்ணத்திற்கு வலு கிடையாது.
அந்த வலு கிடைக்கச் செய்வதற்குத்
தான் நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்களுக்குள்
இந்த நினைவின் தன்மை சிறுகச் சிறுகக் கூட்டி அந்த ஆற்றலைப் பெருக்கும் நிலைக்காக உபதேசிக்கின்றோம்.
எந்த அளவிற்கு இதைப் பெறவேண்டும்
என்ற ஏக்க நிலைகள் கொண்டு நீங்கள் வருகின்றீர்களோ
1.உங்களுக்குள் விளைந்திடும்…
விளைந்திட்ட அந்த உணர்வின் எண்ண அலைகள் ஒவ்வொன்றுக்குள்ளும்
2.ஒவ்வொரு குணத்தின் செயலையும்
உங்களுக்கு உபதேசமாகக் கொடுக்கும் போது
3,அந்த ஞானியின் உணர்வுகளைப்
பிணைக்கச் செய்து கொண்டடேயிருக்கின்றோம்.
4.அப்படிப் பிணைத்த உணர்வின்
நிலைகள் கொண்டு அதிலேயும் தொட்டுக் காண்பித்து
5.அந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள்
ஆழமாகப் பதியச் செய்து கொண்டிருக்கின்றோம்.
அவ்வாறு பதிந்த நிலைகள் கொண்டு
நீங்கள் ஞானிகளை எண்ணும் போது அது விளைந்து உங்களுக்குள் சேர்ந்த தீய உணர்வுகளைப் பிளந்து
உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றும் திறன் நீங்கள் பெறுகின்றீர்கள்.
நமக்கு முன் சுழன்று கொண்டு இருக்கும்
அந்த மெய் ஞானியின் உணர்வலைகளை யாம் உங்களுடன் சேர்த்து... (நாம் அனைவரும் சேர்த்து...!)
ஏக்க உணர்வுடன் கொண்டு அந்த உணர்வின் தன்மை நாம் கவரப்படும் போது இங்கே பெரும் அலைகளாகக்
குவிகின்றது.
சிறு துளி பெரு வெள்ளம் போன்ற
நிலைகளில் அனைவரது வலுவின் தன்மை வரப்படும் போது அந்த ஞானிகளின் ஒத்த உணர்வின் தன்மை
வளர்க்கப்பட்டு நாம் எத்தனை குணங்கள் கொண்டு இருந்தாலும் அதை மறந்து மெய் ஒளியைப் பெற
வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சியைக் கூட்டி அந்த உணர்வின் தன்மை விளையச் செய்கின்றோம்.
1.யாம் சொன்ன முறைப்படி இந்தத்
தியானத்தை மேற்கொண்டு
2.தீயவை எவையானாலும் அது நினைவில்
வராது
3.மகரிஷிகளின் உணர்வலைகள் உங்களுக்குள்
பெற வேண்டும் என்று ஏங்கும் போதெல்லாம் அதைப் பெறச் செய்து
4.அருள் உணர்வின் தன்மை உங்களுக்குள்
விளையச் செய்து
5.உங்களை ஆட்டிப் படைக்கும் உணர்வைச்
சிறுக்கச் செய்து
6.அந்த மெய் ஒளியின் தன்மை உங்களுக்குள்
வளரச் செய்வதற்கே இதைச் செய்கின்றேன் (ஞானகுரு).
ஆகவே உங்களுக்குள் இருக்கும்
ஈசனிடம் எந்த எண்ணத்தைக் கொடுக்கின்றீர்களோ அதைத்தான் உங்களுக்குள் படைக்கின்றான்.
ஆகவே உங்கள் உயிரைக் கடவுளாக மதியுங்கள். உங்கள் உடலைச் சிவமாக மதியுங்கள்.
அனைத்துக்கும் பாத்திரமாகி அனைத்தையும்
அணைத்துக் கொண்டு நினைவு கொண்டு இயக்கும் சக்தியாக நம் கண்கள் (கண்ணன்) இருக்கின்றது.
உங்கள் கண்ணின் நினைவாற்றலை மகரிஷிகளின்
பால் செலுத்தி அவர்கள் ஆற்றல்களை உயிர் வழியாகக் கவர்ந்து சுவாசிக்கும் பொழுது உடலுக்குள்
ஒளி பெறும் உணர்வின் அணுக்களாக விளைகின்றது.
ஈசனுடன் ஒத்த நிலையாக அந்த உணர்வின்
ஒளிச் சரீரமாக மாறுகின்றீர்கள். அதைப் போன்ற நிலைகள் நீங்கள் எல்லோரும் பெற வேண்டும்
என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டிப் பிரார்த்திக்க்கின்றேன்.