7/23/2018

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவருடைய மனைவியுடன் விண்ணுலகில் ஒன்றி வாழும் நிலை

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் திருமணமானபின் தான் கண்ட மெய் உணர்வை தன் மனைவியின் பால் பாய்ச்சினார்.

என் மனைவியை விண்ணை நோக்கி ஏங்கச் செய்து அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து என் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணி நான் பாய்ச்சினேன் என்ற நிலையை எமக்குத் (ஞானகுருவிற்கு) தெளிவாக்கினார்.

அப்படிப் பாய்ச்சினாலும், அந்த உயிரின் தன்மை அதற்குள் விளைந்த உணர்வின் சத்து குறுகிய காலத்தில் அந்த உணர்வுகள் தாங்காது சென்று விடுகிறது.

ஆனால் அந்த உடலை வளர்க்கும் உணர்வுகள் குறைந்தாலும் நான் எடுத்துக் கொண்ட உணர்வின் சத்து மனைவியின் உடலுக்குள் அதிகரித்து இந்த உணர்வின் நினைவாற்றல் என் மேல் அதிகரித்தது.

நான் எதைப் பெற விரும்பினேனோ அதன் வழிகளிலேயே "என் மனைவி என்னை விட்டுப் பிரியாதபடி... என்னுடன் அந்த நினைவு கொண்டு வந்தது...!" என்று தெளிவாக்குகின்றார்.

அப்பொழுது அந்த மனைவியின் தன்மை தன் கணவர் கொடுத்த இந்தச் சக்தியின் தன்மையைத் தான் வளர்க்க வேண்டும் என்ற உணர்வினை வளர்த்துக் கொண்டார்.
1.அவர் காட்டிய நெறி கொண்டு வானை நோக்கி
2.இதே துருவ நட்சத்திரத்தையும் சப்தரிஷி மண்டலங்களையும் எண்ணி
3.தன் கணவர் கொடுத்த உணர்வுகளை தனக்குள் எடுத்துக் கொண்டார்.
4.ஆனாலும், நம் குருவின் மனைவிக்கு ஆயுள் குறை என்று உணர்த்தினார். 

அவருடைய வளர்ச்சியின் தன்மை குறைவாக இருப்பினும் இந்த உணர்வின் தன்மை தன் பால் பாய்ச்சி என் பால் வந்த உணர்வின் துணை கொண்டு நான் வளரவேண்டும்... அது உயரப்பட வேண்டும்... என்ற உணர்வின் ஒத்த நிலைகள் கொண்டு வளர்ந்து வந்தது...! அப்படி வரப்படும்போதுதான்,
1.என் மனைவியின் ஆன்மா பிரிந்தபின்
2.எதை நான் பெறவேண்டும் என்று மனைவிக்குக் கொடுத்தேனோ
3.அதே நிலை எனக்குப் பெறவேண்டும் என்ற உணர்வின் துணை கொண்டு
4.எனக்குள் இதைச் சேர்ப்பித்தது என்றார் குருநாதர்.
5.என் மனைவியின் அந்த ஆன்மா என்னுடன் இணைந்தே வாழ்கிறது.

எனது வாழ்க்கையில் வானுலக ஆற்றலை நான் எதையெல்லாம் நான் எண்ணினேனோ எண்ணிய அந்த உணர்வுகள் எனக்குள் நின்றே அதன் அணுவின் கருவாக உருவாகும் ஆற்றல் பெற்று "ஒளியின் சரீரமாகப் பெறும் தகுதியைப் பெற்றேன்... என்றார் குருநாதர்...!"

இதையெலாம் குருநாதர் தனித்தன்மை கொண்ட இடத்திற்கு எம்மை அழைத்துச் சென்று அவருடைய இயக்கத்தின் தன்மையைக் காட்டினார்.

மனைவி அவருடன் இல்லையே...! என்று நான் (ஞானகுரு) எண்ணினேன். அப்பொழுதுதான் அங்கே தெளிவாக்குகிறார் குருநாதர்.

மனைவி என்னுடன் இன்னொரு சரீரமாக இல்லை. இன்னொரு சரீரத்தில் இருக்கும் பொழுது நான் கொடுத்த எனக்குள் கற்றுணர்ந்த வானுலக ஆற்றலின் சத்தை மனைவியின் பால் பாய்ச்சினேன்.

அந்த உணர்வின் தன்மை என் மனைவிக்குள் வளர்ந்தது.

என் மனைவியும் என்னைப் போன்று அது வானுலக ஆற்றலை எடுத்து நான் பெறவேண்டும் என்று எண்ணியது.

அதே போன்று நான் என் மனைவி பெறவேண்டும் என்று எண்ணினேன். இந்த இரண்டு உணர்வுகளும் வளர்கின்றது.

இருப்பினும் அதனின் உணர்வின் அணுகள் வலுவிழந்து இருந்தது. துரித நிலைகள் கொண்டு அந்த ஆன்மா வெளிவரப்படும் பொழுது என் நினைவு வைத்து வந்தது.
1.எனக்குள்ளே இருந்து
2.நான் எண்ணியவாறு எனக்குள் விளைவிக்கிறது.

அதன் துணை கொண்டு வானுலக ஆற்றலையும், விண்ணுலகத்தையும், பேரண்டத்தையும் நான் அறியும் ஆற்றல் பெறுகின்றேன்.

பேரண்டத்தைக் கண்டுணர்ந்த அகஸ்தியன் உணர்வை நான் நுகர்ந்தேன். அந்த உணர்வின் துணை கொண்டு என் மனைவிக்குக் கொடுத்தேன்.

இவ்வாறு நாங்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் "இருவருமே அந்தத் துருவத்தை நுகர்ந்தோம்...!"

அதனின் உணர்வின் வளர்ச்சியும் இந்தப் பிரபஞ்சம் உருவாகும் உணர்வையும் நான் காண முடிந்தது. அந்த உணர்வின் துணை கொண்டு நம் பிரபஞ்சமல்லாது பிற பிரபஞ்சங்களின் சக்தியையும் உணர முடிந்தது.

1.என் மனைவியால் உருபெறும் உணர்வு அது அணுவாகி
2.அதன் உணர்வுகள் கருவாக்கப்படும்போது அந்த உணர்வின் தன்மை
3.அது உணவாக உருபெறும் அணுக்களாக வளரப்படும்போது
4.அதனின் நுகரும் ஆற்றல் வரும்போதுதான்
5.எனக்குள் சிந்திக்கும் திறன் வருகிறது.

சிந்திக்கும் உணர்வும் எண்ணங்களும் எனக்குள் வருகிறது என்ற  நிலையைத் தெளிவாக்குகின்றார் குருநாதர்.

இவ்வாறு, இயற்கையின் நிலைகள் மறைமுகமாக நமக்குள் எவ்வாறு இயங்குகிறது என்ற நிலையையும் தெளிவாக்குகின்றார் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.