ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 31, 2018

சர்க்கரைச் சத்தும் இதய அடைப்பும் (HEART ATTACK)


நம்முடைய சகஜ வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் ஆத்திரமும் கோபமும் அதிகமாக நமக்குள் எடுத்துக் கொண்டால் நம்மிடம் இருக்கக்கூடிய மகிழ்ச்சி என்ன செய்கின்றது...?

அது கொதிக்க ஆரம்பிக்கின்றது.

அதாவது மகிழ்ச்சி என்ற உணர்வு சிறுகச் சிறுக நம்மிடம் இணையாதபடி அந்த அமிலத்தின் சக்தியைப் பிரித்திடும் நிலையாகிS சர்க்கரைச் சத்து நோயாக வந்து விடுகின்றது.

சர்க்கரை சத்து – அந்த இனிப்பின் (GLUCOSE) தன்மை கொண்டு இருதயத் துடிப்பின் நிலைகள் குறைவாகும்.

ஏனென்றால் மகிழ்ச்சியான உணர்ச்சியை ஊட்டி அந்த இனிமையின் தன்மையை நகர்த்திக் கொடுக்கும் அந்த நுண்ணிய நரம்புகளுக்குள் சர்க்கரைச் சத்து (நோயால்) இயக்கப்படும் போது இதயத் துடிப்பு குறைவாகும். இதை டாக்டரால் கண்டுபிடிக்க முடியாது.

நமக்குள் இருக்கக்கூடிய உணர்வின் தன்மை பிரியப் போகும் போது இணையவில்லை என்றால் துடிப்பைக் குறைக்கத்தான் செய்யும். அதாவது
1.மற்றவர்கள் செய்யும் செயலைக் கண்டு
2.தாங்க முடியாதபடி உணர்ச்சிவசப்படும் நிலையில் (TENSION)
3.ஏற்க மறுக்கும் பொழுது அது நமக்குள் இணையாது.  

உதாரணமாகப் பாலைக் காய்ச்சுகிறோம். அதற்குள் தான் வெண்ணெய் இருக்கின்றது.
1.ஆனாலும் புளிப்பின் சத்தை அதனுடன் சேர்த்தவுடனே
2.என்ன தான் கடைந்தாலும் வெண்ணெய் வருமா...?
3.வெண்ணெயைப் பிரித்து எடுக்க முடியுமா...? முடியாது.
4.பால் தயிராக மாறிய பின் தான் அதைக் கடைந்து எடுக்க முடியும்.

இதைப் போன்று தான் நமக்குள் இயக்கச் சக்தியாக இருக்கக்கூடிய நுண்ணிய நரம்புகளுக்குள் (அமிலத்தின் தன்மைகளுக்குள்) நாம் சிந்திக்கும் மாறுபட்ட இந்த உணர்வின் தன்மை இயக்கச் சக்தியாகப் பட்டவுடனே துடிப்பைப் பலவீனமாக்கி விடுகின்றது.

சர்க்கரை சத்து ஒருவருக்கு அதிகமாகி விட்டது என்றால் மயக்க நிலை ஜாஸ்தியாக வரும் - பார்க்கலாம் நீங்கள்.

அதே சமயத்தில் அவர் அதிகமான சந்தோஷமானால் என்ன செய்யும்...? ஏற்றுக் கொள்ளாத நிலைகள் கொண்டு இதயம் பலவீனமாகும். “டக்...!” என்று உயிர் போகும். அதற்கப்புறம் மகிழ்ச்சி எங்கே இருக்கின்றது...?

நாம் என்னமோ நினைக்கின்றோம்...!

ஆனால் ஒவ்வொரு உணர்வின் ஆற்றலும் எவ்வாறு நமக்குள் அமிலங்களின் தன்மையாக வடிக்கப்பட்டு நரம்புகளின் நிலைகளில் அது இயக்கச் சக்தியாக மாறி உடலை எப்படிச் செயல்படுத்துகின்றது என்ற நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இதையெல்லாம் உடலுக்குள் ஊடுருவி எம்மை (ஞானகுரு) அறியும்படி செய்தார். அதைச் சமப்படுத்திட எதையெல்லாம் செய்ய வேண்டும் என்றும் சொன்னார்.

இதை உங்களிடம் சொல்லக்கூடிய காரணம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி
1.உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன்.
2.உங்கள் உடலைக் கோவிலாக மதிக்கின்றேன்.
3.உங்களுக்குள் இருக்கும் ஆயிரத்தெட்டு நற்சக்திகளைத் தெய்வமாக மதிக்கின்றேன்.

 இவ்வாறு மனிதரை உருவாக்கிய நிலைகளில் சந்தர்ப்பத்தால் உங்களைத் துன்புறுத்தும் நோய்களிலிருந்து மீண்டு மகிழ்ச்சியான நிலைகள் பெறவேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன்.

சாமி...! நீங்கள் சொன்ன மாதிரி நாங்கள் செய்தோம்...!
2.மகரிஷிகளின் அருள் சக்திகளை எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் பெறச் செய்தோம்
3.அதனால் எங்களுக்கு உடல் நலமும் மன அமைதியும் கிடைத்தது
4.நாங்கள் சந்தோஷமாக இருக்கின்றோம்...! என்ற இந்த
5.நல்ல வார்த்தையைத்தான் உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கின்றேன்.
6.என்னை புகழ்ந்து பேச வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை...!
7.எனக்குப் புகழ்ச்சி தேவையில்லை.

எண்ணத்தினால் உங்களுக்குள் வந்த நோய்களை உங்கள் எண்ணத்தினாலேயே போக்க முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்...!