உதாரணமாக ஒரு தாய் ஒரு கெமிக்கல் (இரசாயணம்) தொழிற்சாலையில் வேலை
செய்கிறது என்று வைத்துக் கொள்வோம். அங்கே வேலை செய்து கொண்டு இருக்கும் போது அதில்
உள்ள விஷத் தன்மைகளை அந்தத் தாய் நுகர நேர்கின்றது.
அதே சமயத்தில் அந்தத் தாய் கருவுற்றால் கருவில் இருக்கும் குழந்தைக்கு
தாய் நுகரும் விஷங்கள் இணைந்தாலும் அந்தக் குழந்தை விஷத் தன்மையைத் தாங்கும் குழந்தையாக
வளர்கின்றது.
ஆனால் அந்தத் தாய் வேலை செய்யும் போது அதிகமாக அந்தக் கெமிக்கலை
நுகர்ந்து விட்டால் உடலில் கடும் நோயாகி அது மடியும் தன்மை வருகின்றது.
அதே சமயம் தந்தை… அந்தக் கெமிக்கல் தொழிற்சாலையில் வேலை
பார்த்து இந்த விஷத்தின் தன்மை அதிகமாக நுகர்ந்து அதிலே உருபெறும் கருவின் தன்மை பெண்பாலின்
நிலைகள் கொண்ட இந்த. சுக்கிலத்துடன் கலக்கப்படும் போது என்ன ஆகின்றது...? (ஆனால்
தாய் அங்கே வேலை செய்யவில்லை)
ஆணில் விளைந்த விஷத் தன்மை சுக்கிலத்திலும் கலந்து இரண்டும் கருமுட்டையாக
உறைந்து இணைக்கப்படும் போது கருவிலே இருக்கும் குழந்தையின் உடல்களிலே விஷத் தன்மையான
நிலைகள் கலந்து கடும் நோயாக உருவாகத் தொடங்கி விடுகின்றது.
1.தாயுடன் இணைந்த உணர்வுகள் (முதலிலே சொன்னது) கருவாக வளர்க்கப்படுவதற்கு
2.இதை உணவாகக் கொடுக்கின்றது. குழந்தை உரு பெறும் தன்மை சீராக்குகின்றது.
3.ஆனால் தந்தையின் உடலில் விளைந்த விஷத்தின் தன்மை
4.திடப்பொருளாகவும் உடலாக மாற்றப்படும் போது
5.குழந்தை உடலில் நோயாக மாறுகின்றது.
தாய் அந்தக் கெமிக்கலைத் தன் உணர்வாகச் சுவாசிக்கும் போது தாயிற்கு
நோயாக மாறுகின்றது. கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கு அந்த உணர்வுகள் பட்டபின் அது
நோயாக மாறுவதில்லை.
அதே சமயம் மற்றொரு குழந்தை கடுமையான நோயினால்
பாதிக்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இப்படிச் சிரமப்பட்டுக்
கொண்டிருக்கும் இந்தக் குழந்தையை கருவுற்ற தாய் நுகர்ந்தது என்றால் என்ன
ஆகின்றது...?
நோயினால் அவதிப்படும் அந்த உணர்வுகளை அந்தத் தாய் உற்றுப்
பார்த்து நுகர்ந்து கருவிலே இணையப்படும் பொழுது கருவிலிருக்கும் குழந்தைக்கு இது
பூர்வ புண்ணியமாகின்றது.
1.தாய் உற்றுப் பார்த்த குழந்தை உடலில் எந்த நோய் உருவானதோ
2.அதே நோய் இங்கே கருவில் விளையும் குழந்தைக்கும் உருவாகின்றது.
3.இதற்குண்டான வித்தியாசங்களைச் சொல்கிறேன்.
மற்ற விஷத் தன்மைகளைப் பார்க்கும் போது தான் சுவாசித்த உணர்வுகள்
அணுக்களில் வளரப்பட்டுத் தாய்க் கருவிலே விளையப்படும் போது “விஷத்தை வெல்லும் சக்தியாகக்
குழந்தை பெறுகின்றது...!”
உதாரணமாக ஒரு கருவுற்ற தாயைத் தேள் கொட்டி விட்டால் அந்த விஷத்
தன்மை கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கு ஊடுருவி விடுகின்றது. மருந்து
கொடுத்ததும் தாய் பிழைக்கின்றது.
ஆனால் அதே சமயம் அந்தக் குழந்தை பிறந்த பின் அதன் மீது தேளை வைத்திருந்தாலும்
தேளின் விஷம் அந்தக் குழந்தையைப் பாதிக்காது.
அதே போல் ஒரு விஷப் பாம்பு கருவுற்ற தாயைத் தீண்டிவிட்டால் இந்த
விஷத்தின் தன்மைகள் உடலுக்குள் போகின்றது. மருத்துவம் செய்த பின் தாய் மீண்டு விடுகின்றது.
ஆனால் பாம்பின் விஷம் கருவிலிருக்கக்கூடிய குழந்தைக்கு ஊடுருவப்பட்டு
விஷத்தை வெல்லும் அந்தச் சக்தியைப் பூர்வ புண்ணியமாகப் பெறுகின்றது.
இந்த மாதிரிப் பலவிதமான உணர்வுகள் மாறி அந்தக் கருவில் விளையும்
சிசுகளுக்கு உருவாகின்றது. இதெல்லாம் இயற்கையின் நியதிகள்.
பரிணாம வளர்ச்சியில் வளரக்கூடியது மற்ற உயிர் இனங்கள். ஆனால்
1.பரிணாம வளர்ச்சியில் வளர்ச்சி அடைந்த மனிதன் உணர்விற்குள் விளைந்தது
2.இன்னொரு உடலுக்குள் புகுந்த உடனே
3..அங்கே வளர்ச்சி அடைந்த நிலைகள் இங்கே மீண்டும் வளர்ச்சி அடையும்
தொடருக்கு வந்து விடுகின்றது - விஷத்தின் தன்மையாக...!
இந்த இரண்டிற்கும் உண்டான வித்தியாசத்தை நீங்கள் தெரிந்து
கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறோம்.
ஏனென்றால் மனிதனாக வளர்ச்சி அடைந்த நாம் இன்றைய வாழ்க்கையில்
வரும் தீமைகளையும் வேதனைகளையும் நீக்கத் தவறினால் நம் உயிரான்மாவில் நஞ்சு பெருகி
மீண்டும் மனிதனல்லாத உருவைத்தான் பெற முடியும்.
1.அருள் மகரிஷிகளின் உணர்வை நாம் நுகர்ந்து தீமைகளை மாற்றப்
பழகிக் கொள்ள வேண்டும்.
2.ஒளியான உணர்வுகளை நம் உடலில் பெருக்கி ஒளியான அணுக்களாகப்
பெருக்க வேண்டும்.
3.நம் உயிராத்மாவை ஒளியாக ஆக்க வேண்டும்.
4.நமக்கு அழியாச் சொத்து அது தான்...!