ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 8, 2018

“அகஸ்தியருடைய வம்ச வழிப்படி…!” முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையை நாம் எப்படி நிறைவேற்ற வேண்டும்…?


நம்மை ஈன்று நமக்காகப் பல துன்ப அலைகளைப் பட்டு எத்தனையோ வீழ்ச்சியைக் கண்டு தன் உடலுக்குள் வேதனையாகி சிந்தனையற்ற நிலைகளில் சீரழிந்து நாம் வாழ்ந்திட நம் மூதாதையர்கள் எத்தனை இன்னல்கள் பட்டிருப்பார்கள் என்று ஒவ்வொருவருக்கும் தெரியும்.

தன்னைக் காத்திட நம்மைக் காத்திட அவர்கள் எடுத்துக் கொண்ட வேதனையான உணர்வுகள் அவர்கள் உடலுக்குள் நஞ்சாக மாறி தன் உணர்வின் தன்மையை நினைவை இழக்கச் செய்து விடுகின்றது.

இவ்வாறு தான் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு ஒப்ப இன்னொரு உடலுக்குள் புகுந்து அந்தத் தீய வினைகளை அவர்கள் விளைவிக்காதபடி தடுப்பதற்கு அவர்களின் இனமான நாம் இன்று என்ன செய்கின்றோம்…?

முன்னோர்களையும் மூதாதையர்களையும் நினைவு நாள் வைத்துக் கொண்டாடுவதோடு சரி. வேறு என்ன செய்கிறோம்…? என்று ஒவ்வொருவரும் சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

இது வரையில் அவர்களை மறந்திருந்தாலும் அவர்களை எண்ணி
1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்
2.குலதெய்வங்களான உயிராத்மாக்கள்  சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து
3.இன்னொரு உடல் பெறாத நிலையில் பிறவா நிலை பெறவேண்டும்
4.மெய் வழி காணும் மெய் அருள் பெற்ற அந்த மெய் ஞானிகளின் அருள் வட்டத்திற்குள் எங்கள் முன்னோர்கள் சுழன்று
5.அந்த மெய் ஒளியை உணவாக எடுத்துக் கொண்டு என்றுமே ஒளியின் சுடராக சுழன்று கொண்டு இருக்க வேண்டும் என்று
6.முன்னோர்களின் உயிரான்மாக்களை அங்கே உந்தித் தள்ள வேண்டும்
7.உந்தித் தள்ள நமக்கு அந்தச் சக்தி வேண்டும்…!

ஒரு மோட்டார் இயக்க வேண்டும் என்றால் அதற்குத் தகுந்த “காந்தம்” இருந்தால் தான் அதனின் சுழற்சி நிலை. அதன் சுழற்சி நிலைக்கொப்பத் தான் அதிலே உருப்பெறும் இயக்கக் கதிரியக்கங்கள் மற்ற இணைக்கும் பொருளை இயக்கும் சக்தியாக மாறுகின்றது.

இதைப் போன்று தான்
1.நம் உயிரின் ஆற்றல் அதற்குள் இருக்கும் காந்தத்திற்குத் தக்க
2.அதன் இயக்கப் பொறிகளை அது இயக்குகின்றது.

அதே சமயம் அந்தக் கதிரவனின் காந்த நிலைகள் கொண்டு நாம் இயக்கும் பொறியின் தன்மை சிறியதாக இருக்கின்றோம்.

ஆனால் பெரிதான நிலைகளில் ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் (மகரிஷிகள்) உணர்ந்து நுகர்ந்து அந்த உணர்வின் தன்மையை தனக்குள் எடுத்து விஷத்தின் தன்மையை முறித்து உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிச் சென்ற
1.அந்த மாமகரிஷிகளின் ஆற்றலை
2.அவனை (நம் உயிரை) எண்ணி நாம் பெறுதல் வேண்டும்.

அந்த உணர்வின் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ள “ஈஸ்வரா…!” என்று தன் உயிரை எண்ணி விண்ணிலே நினைவாற்றலைச் செலுத்தி
1.அந்த உணர்வின் ஏக்கத் துடிப்பால்
2.சக்தி வாய்ந்த நிலைகளை நமக்குள் உரு பெறச் செய்ய முடியும்
(3.உயிருக்குள் இருக்கும் காந்த சக்தியைக் கூட்டினால் விண்ணின் ஆற்றலை எளிதில் பெற முடியும்)

அது அனைத்தும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா பெற வேண்டும் ஈஸ்வரா என்று தன் உணர்வின் நினைவலைகளை
1.ஒவ்வொருவரும் தனக்குள் ஆழமாகப் பதியச் செய்வதற்கும்
2.அதைப் பருகச் செய்வதற்காகவும் தான் அன்று விநாயகரை வைத்தார்கள் ஞானிகள்.

அதனின் நினைவு கொண்டு விண்ணை நோக்கி நம்மை ஏங்கிப் பழகச் செய்து அந்தச் சக்தி வாய்ந்த நிலையை நமக்குள் வினையாகச் சேர்க்கும் நிலையாக முதன் முதலில் உருவாக்கியவன் “அகஸ்தியன்….!”

இன்று விஞ்ஞானத்தில் REMOTE CONTROL என்ற நிலைகள் கொண்டு தன் இனமான உணர்வின் அலைகள் கொண்டு வெகு தூரத்தில் இருக்கக்கூடிய செயற்கைக் கோள்களையும் நம் பூமியிலிருந்து இயக்குகின்றார்கள்.

அதை எப்படி இயக்கிக் காட்டுகின்றானோ இதைப்போல
1.தன் இனத்திலிருந்து இங்கே வளர்ந்து (நம் முன்னோர்கள்)
2.தன்னைக் காத்திடும் உணர்வு கொண்டு அங்கங்கே வாழ்ந்தாலும்
3.இந்த உடலை விட்டு இந்த உணர்வின் தன்மை பிரிந்து சென்றாலும்
4.தன்னை வாழ்த்திட்ட வளர்த்திட்ட பார்த்திட்ட காத்திட்ட அந்த உணர்வின் ஆற்றல் மிக்க இச்சக்தி
5.நமக்குள் இருக்கும் அந்தப் பதிவின் துணை கொண்டு
6.மெய் ஞானிகளின் உணர்வைச் சேர்த்து அந்த சூட்சும சரீரத்தைத் தன் உணர்வுடன் இணைக்கப் பட்டு
7.அதாவது இதனுடைய CONTROL படி அந்தச் சப்தரிஷி மண்டல அலைகளுடன் சுழன்று
8.விஷத்தை ஒளியாக மாற்றிடும் இந்த உணர்வின் சக்தி பெற வேண்டும் என்று விண்ணை நோக்கி ஏகி
9.அந்த உணர்வின் சக்தியைப் பரப்பும் நிலைகளுக்கு அன்று செய்தான் மாமகரிஷி அகஸ்தியன்.

ஆகவே அதன் வழியில் நாம் செயல்பட்டு நமக்காகப் பல இன்னல்கள் பட்ட மூதாதையர்களின் உயிராத்மாக்களை…
1.சப்தரிஷி மண்டல ஒளி வட்டத்திற்குள் விளைந்த இந்த வித்தின் தன்மை கொண்டு சேர்ப்பிக்க
2.அந்த வழி வழி வம்சத்தைக் காட்டினான் அகஸ்தியன்…!

நம் முன்னோர்களை விண் செலுத்துவோம். பிறவா நிலை பெறச் செய்வோம். அவர்கள் துணையுடன் நாமும் விண் செல்வோம். அகஸ்தியன் உருவாக்கிய வம்ச வழியில் அனைவரையும் நாம் அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்வோம்…!